*தி*

*ருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் சிறப்புகள்   புவியில்
வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்க்கையில் செய்வதற்கு ஒவ்வொரு *









*வகையான கடமைகள் இறைவனால் கொடுக்கப் பெற்றுள்ளன. இக் கடமைகளைச் சிறுதும்
வழுவாமல் செயல்படுவதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும். ஆனால் சில
நேரங்களில் எத்தகைய பலம் வாய்ந்த ஒரு மனிதனும், தனக்கு விதிக்கப்பட்ட கடமையைப்
பல காரணங்களைச் சுட்டிக்காட்டி தவிர்க்கப் பார்க்கிறான். அப்படிக்
கடமையிலிருந்து வழுவ நினைத்த அர்ஜுனனுக்குச் சாரதியாக இருந்து உலகத்திற்கே
“கீதோபதேசம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் “திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி
திருக்கோவிலை”ப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.  ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் தல
வரலாறு புராண காலத்தில் இத்தலம் “பிருந்தாரண்ய க்ஷேத்ரம்” என அழைக்கப்
பெற்றது. மகாபாரத யுத்தத்தின் போது பஞ்ச பாண்டவர்களில் “பார்த்தனாகிய”
“அர்ஜுனனுக்கு” அவரின் இரதத்தைச் செலுத்தும் “சாரதியாக”ப் பகவான் “கண்ணன்”
ஏவல் புரிந்தார். அந்தக் கண்ணனே இங்கு கோவில் கொண்டுள்ளதால் இந்த இறைவனுக்குப்
“பார்த்தசாரதி”ப் பெருமாள் எனப் பெயர் ஏற்பட்டது. கேணி என்றால் குளம் என்றும்
ஒரு பொருள் உண்டு. முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் “அல்லி” மலர்கள்
நிறைந்திருந்ததால் இந்த ஊர் ” திரு அல்லிக் கேணி” என்று அழிக்கப்பட்டது.
காலப்போக்கில் அது திருவல்லிக்கேணி என்றானது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல்
பழமையான கோவிலாக இது இருந்தாலும், இக்கோவிலை 7 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக
நன்கு வடிவமைத்துக் கட்டியவர்கள் “பல்லவ” மன்னர்கள் ஆவர். பின்னாளில்
“சோழர்களும், விஜயநகரப் பேரரசர்களும்” இக்கோவிலை மேம்படுத்திக்
கட்டியிருக்கின்றனர்.ஆழ்வார்களில் “திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், மற்றும்
திருமங்கை ஆழ்வாரால்” மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தலம் ஆகும் இது.
வைணவக் கோவில்களில் “108 திவ்ய தேசங்களில்” முக்கியமான கோவில்களில் ஒன்றான
தாகும். புகழ்பெற்ற மனிதர்களான “சுவாமி விவேகானந்தர்”, “மகாகவி பாரதியார்”,
“கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம்” போன்றோர் அவர்களின் காலத்தில் இக்கோவிலில்
வந்து வழிபட்டுள்ளனர்.   இக்கோவிலின் மூலவர் பார்த்தசாரதி பெருமாளின் சிலை “9”
அடி உயரம் கொண்டது. அனேகமாகப் பாரதத்தில் இந்த கோவிலின் பெருமாள் மட்டுமே
முகத்தில் மீசையுடன் காட்சி தருகிறார். இங்கு பார்த்தசாரதிப் பெருமாள் தன்
மனைவி மற்றும் சகோதரர் எனக் குடும்பம் சகிதமாக இருக்கிறார். பொதுவாக எல்லாப்
பெருமாள் விக்கிரகங்களும் கையில் ஏதேனும் ஒரு ஆயுதம் ஏந்தியிருப்பதைக்
காணலாம். ஆனால் இத்தலக் கடவுளான பார்த்தசாரதிப் பெருமாள் தனது கையில் ஆயுதம்
ஏதும் இன்றி இருப்பது கூடுதல் சிறப்பு. இக்கோவிலிலுள்ள நரசிம்மர் சந்நிதியில்
வழிபட்டு அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை நமது முகத்தில் தெளித்து,
அத்தீர்த்ததை அருந்த நம்மைப் பீடித்திருக்கும் “துஷ்ட ஆவிகள், செய்வினை,
பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள்” போன்ற பாதிப்புகள் நீங்கும்.
இக்கோவிலின் பெருமாளை வணங்குவதால் ஒருவரின் ஆளுமை திறனும் மேம்படும். மேலும்
கல்வியில் சிறக்க, நல்ல இல்வாழ்க்கை துணை அமைய இக்கோவிலில்
வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்குச்
சர்க்கரைப் பொங்கலை நிவேதனமாக அளித்து வழிபடுகின்றனர். கோவில் அமைவிடம்
திருவல்லிக்கேணி அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் தமிழ்நாட்டின்
தலைநகரமான சென்னையில் திருவல்லிக்கேணி என்ற பகுதியில் அமைந்துள்ளது.
திருவல்லிக்கேணி பகுதிக்குச் செல்ல சென்னை நகருக்குள் குறைந்த கால இடைவெளியில்
பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புறநகர் ரயில் மூலமாகவும் திருவல்லிக்கேணி
ரயில் நிலையத்தில் இறங்கி, நடந்து இக்கோவிலை அடையலாம். கோவில் நடை
திறந்திருக்கும் நேரம் வாரத்தின் அனைத்து நாட்களிலும்*


*                   காலை 5.30 முதல் மதியம் 12.30 வரையும் *








*                   மாலை 4.30 மணியிலிருந்து இருந்து 9.00 மணி கோவில் முகவரி
செயல் அலுவலர் ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில் திருவல்லிக்கேணி, சென்னை –
600006 தொலைபேசி எண் 44-28442462 44- 2844 2449பார்த்தசாரதி கோயில் (பெருமாள்
கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான, கோவில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான
சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில்
உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்)
தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்தின் மூலவரின் பெயர்
வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழ்
பெற்றுள்ளது.*

*இக்கோவில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான இராஜா முதலாம்
நரசிம்மவர்மன் மூலம் கட்டப் பெற்றது.   இக்கோவில் சென்னை பழமையான
கட்டமைப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர்,
கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்மர், ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள்,
ராமானுஜர்  சந்நிதிகள்   உள்ளன. இக்கோவில் வைகானச ஆகமத்தினையும்,
தென்கலையையும் பின்பற்றுகிறது. கிருஷ்ணனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது.*

*இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்தியக் கட்டிடக்
கலையை வலியுறுத்தும் நிறைய சிற்ப வேலைப்பாடுகள் காணப்பெறுகின்றன.*

<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Parthasarathy_Temple_1851,_Madras_2.jpg>
*1851-ல் பார்த்தசாரதி கோயில்*
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Parthasarathy-Temple-Triplicane-Chennai-3.JPG>
*பார்த்தசாரதி திருக்கோயில் கோபுரம்*
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Parthasarathy-Temple-Triplicane-Chennai-1.JPG>
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Parthasarathy-Temple-Triplicane-Chennai-1.JPG>
*நுழைவாயில் தூண்கள் ஒன்றில் காணப்படும் அரங்கநாதர்  *



*புராணச் சிறப்பு *

*கருவறையில் மூலவர் வேங்கட கிருஷ்ணர் தவிர ருக்மிணி பிராட்டி, பலராமன்,
சத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என குடும்ப சமேதராகக் காட்சி தருகிறார்.
இவர்கள் தவிர பிற சன்னதிகளில் ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ மன்னாதர்
(ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கரிவரதர் (வரதராஜர் சுவாமி), துலசிங்கப்
பெருமாள் நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள்,
ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் , மணவாள மாமுனிகள் மற்றும்
வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும்
நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனிக்
கோவில்கள் போல் திகழ்கின்றன. இங்கே கோபுரங்களும்
மண்டபங்களும் தென்னிந்தியக் கோவில் கட்டிடக் கலைக்கே உரிய நுட்பமான சிற்பக்
கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.*
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி பெருமை

*மகாபாரதத்தின் படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின் போது அர்ஜுனனின்
தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத்
பகவத் கீதையை தந்தார். போரின் போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர்
முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு
சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும்,
தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின்
தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்குக் கொடுத்ததால்
போரின் தொடக்கம் மற்றும் முடிவினைத் தெரிவிக்கும் சங்கத்தை மட்டும்
ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன்
காட்சி தருகிறார்.*
 சுவாமி விவேகானந்தர்

*சுவாமி விவேகானந்தர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளைப் பற்றிக்
கூறியவை இத்திருக்கோயில் முகப்பில் கல்வெட்டில் வடிக்கப்பட்டு
வைக்கப்பெற்றுள்ளது.*
பிரசாதம்

*பெரும்பாலான நாட்களன்று இங்கு சர்க்கரைப் பொங்கல்,புளியோதரை, தயிர் சாதம்
மற்றும் வடை வழங்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப்
பத்து) ஒருநாள் பகவானுக்கு திருப்பதி வெங்கடாசலபதி போல அலங்காரம்
செய்யப்படுகிறது, அன்று மட்டும் திருப்பதி லட்டு இங்கு வழங்கப் பெறுகிறது. *
தரிசனம், சேவைகள் மற்றும் உற்சவங்கள்


*இங்கு சித்திரைத் திங்களின் போது ஸ்ரீ பார்த்தசாரதி
சுவாமிக்கும் ஆனி மாதத்தில் ஸ்ரீ அழகியசிங்கருக்கும் பெரிய அளவில்
பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. அதனுடன் ஸ்ரீ ராமானுஜர் (ஏப்ரல்/ மே), ஸ்ரீ
மணவாளமாமுனிகள் மற்றும் மற்ற ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட
அளவில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின்
போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள
மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் (புராண கதை சொல்லுதல்) நடைபெறுகின்றன.*

*வைணவ முனிவர்களான 12 ஆழ்வார்களில் மூவர் (பேயாழ்வார், திருமழிசை
ஆழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ) இக்கோவில் தெய்வங்களின் மேல் பாடல்களை
இயற்றி இருக்கிறார்கள். இதர பல ஆச்சாரியார்களும் பாடல்களை இயற்றி
இருக்கிறார்கள்.*

*கைங்கரியத்திற்கு மறுபெயர் கிருஷ்ணன்.  துன்பம் வரும் பொழுது தோள்
கொடுத்துக் காப்பாற்றுவார் என்பது அசாத்திய நம்பிக்கை.  அகங்காரம் இல்லாமல்
தன்னை ஒரு  சாரதியாகவே  மாற்றிக்கொண்டு பாண்டவர்களுக்கு செய்த உதவியால்
கெடுதல்  கூட்டமான துரியோதனன்  சந்ததி காணாமல் போயிற்று.  அப்படிப்பட்ட
தேரோட்டி கண்ணனாக முறுக்கு மீசையோடு முகத்தில் புன்னகை சிந்தி அருள்
பாலிக்கும் ஆனந்தமான திருக்கோயில் தான் சென்னையில் உள்ள பார்த்தசாரதி
திருக்கோயில்.*

* பிருந்தாரண்யம் அல்லிக்குளம் என்று வேறு பெயர்களும் உண்டு.  அல்லி மலர்கள்
நிரம்பிய இந்தக் குளத்தை உடைய ஊர் என்பதால் திருவல்லிக்கேணி என்று பெயர்
பெற்றது.  ஐந்து நிலை ராஜகோபுரம் இரண்டு பிரகாரம் கொண்டது.  மூலவர் வேங்கட
கிருஷ்ணன்.  அருகில் ருக்மணி,  பலராமன் ஸாத்யகி  அநிருத்தர்,  பிரத்யும்னன்
இவர்களோடு சேர்ந்து காட்சி,  ஆனந்த்,  பிரணவ,  புஷ்பம்,  சேஷ,  ஸோம மீன
அக்கினி விஷ்ணு தீர்த்தங்களும் உண்டு.  இக்குளத்தில் மீன்கள் வசிப்பதில்லை
என்பது ஆச்சரியம்.*

* ருக்மணி, பலராமர், மார்க்கண்டேயர்,  அர்ஜுனன், பிருகு,  அத்திரி,  மரீசி,
சுமதி,  சப்த ரோமா, ஜாபலி, தொண்டமான்  போன்றோர் வழிபட்டதாக ஐதீகம்.  அத்திரி
முனிவருக்கு அழகிய சிருங்கராகவும்,  மதுமான்  முனிவருக்கு  இராமர் பட்டாபிஷேக
கோலத்தையும் இங்கு காட்டியதாக வரலாறு.   சப்த ரோமா முனிவருக்கு கஜேந்திர
வரதராக கருட வாகனத்தில் காட்சியும் உண்டு.  திருமகள்,  வைகுண்டத்தில் இருந்து
இங்கு வந்து பிருகு முனிவரின் குடிசைக்கு அருகில் குழந்தையாக உருவாகி நிற்க
அவளுக்கு வேதவல்லி என்று பெயர் சூட்டி  வளர்த்து வந்தார். பிருகு முனிவர்
பின்பு திருமால் இளவரசர் வேடம் பூண்டு வேதவல்லியை  மணம் முடித்ததாக வரலாறு.
குருச்சேத்திரப் போர் பீஷ்மரின்  வில்லால் கண்ணனுக்கு ஏற்பட்ட காயங்களை
இன்றைக்கும் உற்சவ மூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம்.*

* கிருஷ்ணர் குடும்ப சமேதராக  எழுந்தருளி  இருப்பதும் பார்த்தசாரதியாக பெரிய
மீசையுடன் காணப்படுவார்கள் இங்குதான்.   இக்கோவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்டது.   *
* பிரகாரம்*

*எதிரிகளை வெல்வதற்கும் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும் அதை தீர்ப்பதற்கும்
பகவானுடைய கருணை வேண்டும்.  அதை பக்தியால் பெற்றுவிட முடியும்.  அத்தகைய
பாக்கியத்தை மிகவும் சுலபமாக பெற்றுத் தரும்  ஸ்தலம் தான் இந்த பார்த்தசாரதி
ஸ்தலம்.  பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை
செய்தால் அனைத்து வேண்டுதலையும் பகவான் நிறைவேற்றி வைப்பார்.  மன
நிம்மதிக்கு,  மோட்சத்தை அடைய விரும்புபவர்களுக்கும் ஏற்ற மிக அருமையான
புனிதத்தலம்.*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


*https://www.youtube.com/watch?v=WLdQnumOhgI
<https://www.youtube.com/watch?v=WLdQnumOhgI>*

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 *Vanakkam Subbu*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BrS84SmOOv6D6VB9Xw-7rsyPErfSgzi8E02TfGVtFJ%2BdQ%40mail.gmail.com.

Reply via email to