*சேது சமஸ்தானம் ரா ராகவையங்கார்,* * மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் படத்திறப்பு விழாவின்போது புலவர்கள் பல்லோர்,”ஜனாப் **பி,வி.* *அப்துல்கபூர்ஸாஹிப்**கவிகளைப் புகழ்ந்து போற்றி இப்புலவர் ஆ**சுகவி பட்டம் பெற்றவர்” என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். நான்,”காளமேகப் *புலவரைப்போலப் பாடுவாரா* என்று கேட்டேன் . பண்டிதமணி தமிழ்வேள் உமா *மகேஸ்வரம்* பிள்ளை முதலியோர் எந்தக் *கவியும்* பாடுவார் *பாடச்சொல்லிக்* கேளுங்கள் என்றார்கள்.. காளமேகப் புலவர் *பன்னீரண்டு* ராசிகளையும் வரிசையாகத் *தளைதட்டாமல்* ஒரு வெண்பாவில் பாடியிருக்கிறார். *அதுபோல்* 12 ராசிகளையும் ஒரு வெண்பாவில் அமைத்துப் *பாடும்படி* கேட்டேன்.*
* உடனே இப்புலவர் என்னை நோக்கி ஒரு வெண்பாவில் 15 சீர் உண்டு. 12 ராசியை அதில் அமைத்துப் பாடுவது பெரிதல்ல. 7 சீருள்ள குறள் வெண்பாவில் 12 ராசிகளை அமையுங்கள் என்று கூறினார்.* *ஆடுசே விணை அலவனரி பெண்டுலைதேள்* *நீடுவிற் சுறாக்குடமீனே”* *என்று 12 ராசியை 7 சீரிலே அமைத்துவிட்டார். அதைக்கண்ட நான் மட்டிலா மகிழ்வெய்தி ரூபாய் 25 பரிசளித்தேன். மாலை அணிவித்து வாழ்த்தி மதிப்புரை வழங்கினேன்.* *இங்ஙனம் ராகவையங்கார்.* *-=-=-=-=-=-=-=-* *குறள் வெண்பா உரை* *-------------------------------------* *ஆடு= மேடம், சே= எருது, ரிடபம்,விணை= மிதுனம், அலவு = நண்டு, கடகம், அரி = சிங்கம், பெண்= கன்னி, துலை = துலாம், தேள் விருச்சிகம், வில்= தனுசு, சுறா = மகரம், மீன்= மீனம், (நீடு- நீண்ட ர தேற்றம்.)* *இப்பாடல் புனைந்த ஜனாப் அப்துல் கபூர் சாஹிப் சிறந்த தமிழ்ப்புலவர்.* *வெ.சுப்பிரமணியன் ஓம். பழைய நூல் ஒன்றிலிருந்து* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtKhNuVaL_AzxdT4Md5xpMOVEMn8VeHCfkd-vAebLxfNQ%40mail.gmail.com.
