Pranam World of children vs parents
பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!* *வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...* *இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...* *இங்குதான் என் மகள் படிப்பாள்...* *இங்குதான் விளையாடுவாள்...* *என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...* *என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....* *என்ன சமைப்பது?...* *என்ன சாப்பிடுவது?...* *அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..* *பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...* *தனிமை... வெறுமை...* *அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...* *பயணம் ஒரு கொடுமை...* *லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...* *சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...* *ஓலாவும், ஊபரும்...* நமக்கு தேவைப்படும் நேரத்தில், *பீக் hour சார்ஜ்* போட்டு களைப்படைய செய்கின்றனர்... *நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....* இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...* *எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...* *வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!* இவை வேண்டாமென ஒதுங்கி... *பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...* *பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...*என்றால்... அந்த நேரம் அவர்கள்... *ஏதோ ஒரு மாலில்...* *ஏதோ ஒரு ஓட்டலில்...* *ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...* *பிசியாக இருப்பார்கள்...* *"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...* *"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...* *நாலு நாள் கழித்து...* *"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...* நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்... *அவர்கள் டைமிற்கு...* *நம் தூக்க நேரம்...* *பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!* *நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,* *அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.* *மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...* *பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...* *அவன் வெளியே விளையாடறான்...* *அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...* *அவன் டியூஷன் போயிருக்கான்...* *யோகா போயிருக்கான்...* *என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...* *எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...* *முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...* *ஓடி விடும்...* *என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...* *நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...* *அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...* *எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?* *இந்த அரசியல்களும்...* *இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...* *என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...* *ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது ...!* *மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...* *"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...* ( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...) *"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா ..."* ( மனதுக்குள் *ஏதோ...*) *வாழ்கிறேன்!* Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx We get a child... a girl..., raise it, educate it..., make it..., get married... and keep it!* *They go to another town..., another state..., another country... for work...* *Here... more than 70 years old... Loneliness in the house where he lived...* *This is where my daughter studies...* *She will play here...* *This is the window my son broke by playing cricket...* *Think of them like some archeology....* *What's cooking?...* *What to eat?...* *Strain half a tumbler of rice and it is left over..* *Many pods are incompatible with the body...* *Loneliness... Emptiness...* *If we could go where they are...* *Traveling is cruel...* *Not getting lower berth - means begging everyone...* *Chennai Central - Getting there has become a pilgrimage...* *Ola and Uber...* In our time of need, *Peak Hour Charge* Tired of putting are doing... *Four feet tall green horse crossed legs....* Today *at Central, half step step up...down...asks for handle...* *Though the mind jumps to go to the elevator...* *whatsapp videos come to mind, come and scare!* Leave these aside... *catch the boy on whatsapp...* *Let's call the girl on video call...* If... At that time they... *somewhere in a mall...* *Somewhere in a cafe...* *Something in a movie theater...* *Be PC...* *"Do you need something? Then call me..." they say...* *Let's hang up the phone saying "no"...* *Four days later...* *"Why did you call?" He asks...* My children whom I have raised with love... *To the time they...* *Our sleep time...* *Sleep surpasses affection forever!* *The love we have for our grandchildren...,* *For them, we will not have.* *Until the age of three, they often call and talk on the phone saying grandpa...grandpa...* *Then whenever I call them on the phone...* *He plays outside...* *He is on computer games...* *He has gone for tuition...* *Yoga is gone...* *The only answer I get is something like...* *occasionally baby face... on phone... on video call...* *shows face... says hi... and leaves...* *runs away...* *Does my bearded old face look ugly?...* *Our Culture... Culture... Grandparents Relationships...* *Technology has engulfed everything!...* *How long do you watch TV...?* *These politics...* *These lies also raise B P!...* *My own home... has become an orphanage for me...* *Something...WhatsApp...Facebook...doesn't make me crazy...!* *Status posted by son and daughter...my daily interests...* *"How are you?" When others ask...* (Can you give up...my children...) *"Why do I... jam jam... with the cows..., with the grandsons... is it great..."* ( *something in mind...*) *Cheers!* xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxKR IRS 3922 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooYQNtMf4-RHiLCmGbw2BcCi3eP6%2BQ9%2BRAXYy%3DLTUJ7fA%40mail.gmail.com.
