| 
| ஓம் | 
| சுதந்திரத்தின் கதை |



| சுதந்திரம் பறிபோன கதை |

 |

 |


| சுதந்திரம் பறிபோன கதை
   |


| 
| 
| Iசுதந்திரப் போர் |


 | சுதந்திரப் போர் முனையின்சோர்விலாக்கவிஞன் பாரதி,
”இதந்தரு மனையி னீங்கி
   இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு விரண்டு மாறிப்
   பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி யின்னல்
   விளைத்தெனை யழித்திட்டாலும்
சுதந்திர தேவி நின்னைத் 
   தொழுதிடல் மறக்கி லேனே!” 

என்று சுதந்திர தேவியைத் தன் அகத்திலே  நிறுத்தி, முகத்திலே தேச பக்தி பிரகாசிக்க 
அஞ்சலி செய்தான். |
|  |

 |


|   |


| 
| 
 | ”தண்ணீர் விட்டோ வளர்த்தோம் 
       சர்வேசா  இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்
    கருகத் திருவுளமோ”
எனச் சுதந்திரம் பறி போன துயரம் தாளாது, சர்வேசனிடம் முறையிட்டு வெம்பினான்.
 “நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்
ஓயும்முன ரெங்களுக்கு இவ்வோர் வரம் நல்குதியோ”
என்று வீராவேசத்துடன் சர்வேசனை நோக்கி முழங்கினான்.
   சுதந்திரக் காற்றைத் தங்கு தடையின்றி சுவாசிக்கும் நல்வாய்ப்பினை நாங்கள் பெற 
வாய்ப்பினை நாங்கள் பெறாமலேயே போய்விட்டால் சர்வேசா நீயும் இவ்வுலகத்தில் இல்லை-- 
அறமும் உலகத்தில் நிலைத் திருக்க வில்லை என்றுதான்பொருள்!. இப்படி ஒரு பழி உனக்கு 
வரலாமா என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான்.
”என்று தணியுமிந்த சுதந்திர தாகம்
என்று முடியுமெங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னையின் விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் நீர்த்துப் பொய்யாகும்?”
என்று பாரதி எதிர்காலத்தைக் கவலையோடு கண்களை ஓட்டிக் கவனித்தான்.
    பாரதியின் அந்த ஏக்கம், கவலை மன வேதனை அத்தனையும் அவனுடைய வாழ்நாளிலே அகன்று, 
அவன் மகிழ்ச்சிக் கூத்தாடும் வாய்ப்பு பாரதிக்குக் கிட்டவில்லை.
  ஆனால், பாரதியின் நூற்றாண்டு விழாவினைக் கோலாகலமாகக் கொண்டாடும் நாம்,
  “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -- நாம்
          எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு
  சங்கு கொண்டே வெற்றி  ஊதுவோமே - இதை
           தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே”

என்று ஆனந்தத் தாண்டவமாடியன்றோ மகிழ்கின்றோம்.

  பூமியி லெவர்க்குமினி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக்கே யடிமைசெய்து வாழ்வோம்” 
எனப் பெருமையுடன் பேசி , இனிக் கடவுளை யன்றி பிறர்க்கு அடிமைப் பட்டு, பழைய கதை 
திரும்ப நிகழ இடம் கொடுக்க மாட்டோம் எனத் தன்னம்பிக்கையுணர்வோடு மார்பு தட்டிக்  
கொள்கிறோம்.
  ஆம், நாம் பெற்றிருக்கும் இந்தப் பெருமை மிகு சுதந்திரம்,
“ ஓராயிரம் வருடம் ஓய்ந்துகிடந்த பின்னர்
வாராது வந்த மாமணி”
யாகும்
 வெள்ளை ஆட்சியிடம் நாம் அடிமைப் பட்டுக் கிடந்தது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுதான்.
ஆனால், இந்த அடிமைத்தனத்தின் வித்து நம்மிடையே வெகு காலத்திற்கு முன்னரே 
ஊன்றப்பட்டுவிட்டது.
 இதை எண்ணித்தான் பாரதி, “ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்” என்று 
கோடிட்டுக் காண்பிக்கின்றான்.
  பல்லாயிரம் ஆண்டுக்குகளுக்கு முன்பிருந்தே வாழையடி வாழையாகத் தொடர்ந்து 
வந்துகொண்டிருந்த நமது பாரத தேசத்தின் பண்பாடுகளை மறக்கத் தொடங்கினோம்.
  ஒழுக்கப் பண்பை உதாசீனப் படுத்தினோம்.
இறை நம்பிக்கையைத் தளரவிட்டோம்.
நம்முடன் பிறந்த சகோதரர்களை பரஸ்பர இழிவு படுத்த முற்பட்டோம்.
சிலரைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கித் தள்ளினோம்.
  நம்மிடையே நிலவி வந்த சகோதரத்துவ உணர்வு வீணாய்ப் புதை குழிக்கு அனுப்பப்பட்டு, 
ஒருவடொருவர் சச்சரவிட்டு நமக்கு நாமே அழிவினைத் தேடிக்கொண்டோம்.
  இந்த மாதிரியான இழிநிலைப் பண்புகள் நம்மிடையே பரவத் தொடங்கிய காரணத்தால் தான் 
சுதந்திர தேவி மெல்ல மெல்ல நம்மைவிட்டு நகர்ந்து விட்டாள்.! நடந்துவிட்டாள்.!
   ‘அடிமைத் தனம்’ என்ற அரக்கன் தனது கொடிய கரங்களால் நமது சமுதாயத்தின் குரல் 
வளையைப் பிடித்து நெருக்கி மூச்சுத் திணற வைத்துவிட்டான். 
’அடிமைத் தனம்’ என்ற அரக்கனின் கோபப் பிடியிலிருந்து நாம் விடுபட்டுவிடோம். 
என்றாலும், நாம் அடிமை அரக்கனிடம் சிக்குண்டானதற்குகான அடிப்படைக் காரணத்தை மறந்து 
நாம் வாழ முற்பட்டால், ’பழைய குருடி- கதவைத் திறடி! என்ற கதைப்படி நம்மைமீண்டும் 
அடிமத்தனம் வந்து பற்றி சிதைக்க நேரிடும்.
  நமது புண்ணிய பூமியாம் பாரத தேசம் சுதந்திரம் பெற்ற கதையினை இங்கே செவி மடுக்க 
இருக்கின்றோம்.
நாம் சுதந்திரம் பெற்ற கதையை மட்டுமே தெரிந்துகொண்டால் போதாது. நாம் சுதந்திரத்தை 
இழந்த கதையினையும் சேர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
   வெள்ளையர் நமது நாட்டில் வந்து காலடி வைப்பதற்கு முன்னதாகவே, நமது தேசத்தின் 
உயிர் நாடிப் பண்புகளான ஒழுக்கம், தெய்வ நம்பிக்கை, சகோதரத்துவ உணர்வு, ஒருமைப் 
பாட்டு உணர்ச்சி போன்றவை சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருந்தன.
  நமது சமுதாயம் இப்படியொரு பலவீனத்துக்கு உள்ளாகி நிலை தடுமாறிக் கொண்டிருந்த 
நேரத்தில் வெள்ளையர்கள் வெறும் வணிகர்களாக இங்கே வந்து புகுந்தனர்.
  நம்மிடையே இருந்த பலவீன இயல்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, மெல்ல மெல்ல 
நம்மைக் கீழே வீழ்த்தி அடிமைப் படுத்திவிட்டு நம் மீது ஏறி உட்காந்துகொண்டு ஆட்சி 
நடத்தவும் முற்பட்டுவிட்டனர்.
   
 |
|  |

 |


|   |


| 
| 
| மெல்ல மெல்ல  உள்ளே நுழைந்தனர் வெள்ளையர் |


 |  கூடாரத்துக்குள் ஒட்டகம் இடம் பிடித்த ஒரு கதையை குழந்தைகளுக்குச் சொல்வார்கள்.
  ஓர் ஒட்டகம், பாலை வனத்தில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்த ஒருவனிடம் 
சென்று,”வெயில் கடுமையாக இருக்கின்றது. என் மூக்கை மட்டும் கூடாரத்துக்குள் 
நுழைக்க அனுமதியளித்தால் வெயிலுக்கு சற்று இதமாக இருக்கும்” என்று கூறிற்று.
  ஒட்டகம் தன் மூக்கை மட்டும் கூடாரத்தினுள் நீட்டி வைத்துக் கொள்வதால் 
அப்படியென்ன அசௌகரியம் ஏற்பட்டுவிடப்போகிறது என்று எண்ணிய கூடார மனிதன் 
ஒட்டகத்தின் வேண்டுகோளுக்கு உடன்பட்டான்.
  கூடாரத்துக்குள் கொஞ்ச நேரம் மூக்கை மட்டும் நீட்டிக் கொண்டிருந்த ஒட்டகம், 
அடுத்துத் தன் கழுத்தை மட்டும் கூடாரத்தினுள் நீட்ட அனுமதி பெற்றது.
  இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிபெற்ற ஒட்டகம் கடைசியாக கூடாரம் முழுவதையும் 
ஆக்கிரமித்துக் கொண்டு கூடாரத்துக்குச் சொந்தக்காரனை வெளியே விரட்டிவிட்டதாம். |
|  |

 |


| 
| 
| இன்னும் வளரும

 |

 |

 |


-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/1083327793.3747703.1662485615665%40mail.yahoo.com.

Reply via email to