p[ranam
I like a few words of bharathi when I will get tears; sarvesa ip payirai
kanner vitte valarthom. KR IRS 7922

On Tue, 6 Sept 2022 at 23:03, subra manian <[email protected]> wrote:

>
> *ஓம்*
> *சுதந்திரத்தின் கதை*
>
> *சுதந்திரம் பறிபோன கதை*
> சுதந்திரம் பறிபோன கதை
>
>
> *Iசுதந்திரப் போர்*
>
> சுதந்திரப் போர் முனையின்சோர்விலாக்கவிஞன் பாரதி,
> ”இதந்தரு மனையி னீங்கி
>    இடர்மிகு சிறைப்பட் டாலும்
> பதந்திரு விரண்டு மாறிப்
>    பழிமிகுத் திழிவுற் றாலும்
> விதந்தரு கோடி யின்னல்
>    விளைத்தெனை யழித்திட்டாலும்
> சுதந்திர தேவி நின்னைத்
>    தொழுதிடல் மறக்கி லேனே!”
>
> என்று சுதந்திர தேவியைத் தன் அகத்திலே  நிறுத்தி, முகத்திலே தேச பக்தி
> பிரகாசிக்க அஞ்சலி செய்தான்.
>
>
> ”தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
>        சர்வேசா  இப்பயிரைக்
> கண்ணீரால் காத்தோம்
>     கருகத் திருவுளமோ”
> எனச் சுதந்திரம் பறி போன துயரம் தாளாது, சர்வேசனிடம் முறையிட்டு வெம்பினான்.
>  “நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்
> ஓயும்முன ரெங்களுக்கு இவ்வோர் வரம் நல்குதியோ”
> என்று வீராவேசத்துடன் சர்வேசனை நோக்கி முழங்கினான்.
>    சுதந்திரக் காற்றைத் தங்கு தடையின்றி சுவாசிக்கும் நல்வாய்ப்பினை நாங்கள்
> பெற வாய்ப்பினை நாங்கள் பெறாமலேயே போய்விட்டால் சர்வேசா நீயும் இவ்வுலகத்தில்
> இல்லை-- அறமும் உலகத்தில் நிலைத் திருக்க வில்லை என்றுதான்பொருள்!. இப்படி ஒரு
> பழி உனக்கு வரலாமா என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான்.
> ”என்று தணியுமிந்த சுதந்திர தாகம்
> என்று முடியுமெங்கள் அடிமையின் மோகம்?
> என்றெம தன்னையின் விலங்குகள் போகும்?
> என்றெம தின்னல்கள் நீர்த்துப் பொய்யாகும்?”
> என்று பாரதி எதிர்காலத்தைக் கவலையோடு கண்களை ஓட்டிக் கவனித்தான்.
>     பாரதியின் அந்த ஏக்கம், கவலை மன வேதனை அத்தனையும் அவனுடைய வாழ்நாளிலே
> அகன்று, அவன் மகிழ்ச்சிக் கூத்தாடும் வாய்ப்பு பாரதிக்குக் கிட்டவில்லை.
>   ஆனால், பாரதியின் நூற்றாண்டு விழாவினைக் கோலாகலமாகக் கொண்டாடும் நாம்,
>   “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -- நாம்
>           எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு
>   சங்கு கொண்டே வெற்றி  ஊதுவோமே - இதை
>            தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே”
>
> என்று ஆனந்தத் தாண்டவமாடியன்றோ மகிழ்கின்றோம்.
>
>   பூமியி லெவர்க்குமினி அடிமை செய்யோம் - பரி
> பூரணனுக்கே யடிமைசெய்து வாழ்வோம்”
> எனப் பெருமையுடன் பேசி , இனிக் கடவுளை யன்றி பிறர்க்கு அடிமைப் பட்டு, பழைய
> கதை திரும்ப நிகழ இடம் கொடுக்க மாட்டோம் எனத் தன்னம்பிக்கையுணர்வோடு மார்பு
> தட்டிக்  கொள்கிறோம்.
>   ஆம், நாம் பெற்றிருக்கும் இந்தப் பெருமை மிகு சுதந்திரம்,
> “ ஓராயிரம் வருடம் ஓய்ந்துகிடந்த பின்னர்
> வாராது வந்த மாமணி”
> யாகும்
>  வெள்ளை ஆட்சியிடம் நாம் அடிமைப் பட்டுக் கிடந்தது ஏறத்தாழ ஒரு
> நூற்றாண்டுதான்.
> ஆனால், இந்த அடிமைத்தனத்தின் வித்து நம்மிடையே வெகு காலத்திற்கு முன்னரே
> ஊன்றப்பட்டுவிட்டது.
>  இதை எண்ணித்தான் பாரதி, “ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்” என்று
> கோடிட்டுக் காண்பிக்கின்றான்.
>   பல்லாயிரம் ஆண்டுக்குகளுக்கு முன்பிருந்தே வாழையடி வாழையாகத் தொடர்ந்து
> வந்துகொண்டிருந்த நமது பாரத தேசத்தின் பண்பாடுகளை மறக்கத் தொடங்கினோம்.
>   ஒழுக்கப் பண்பை உதாசீனப் படுத்தினோம்.
> இறை நம்பிக்கையைத் தளரவிட்டோம்.
> நம்முடன் பிறந்த சகோதரர்களை பரஸ்பர இழிவு படுத்த முற்பட்டோம்.
> சிலரைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கித் தள்ளினோம்.
>   நம்மிடையே நிலவி வந்த சகோதரத்துவ உணர்வு வீணாய்ப் புதை குழிக்கு
> அனுப்பப்பட்டு, ஒருவடொருவர் சச்சரவிட்டு நமக்கு நாமே அழிவினைத் தேடிக்கொண்டோம்.
>   இந்த மாதிரியான இழிநிலைப் பண்புகள் நம்மிடையே பரவத் தொடங்கிய காரணத்தால்
> தான் சுதந்திர தேவி மெல்ல மெல்ல நம்மைவிட்டு நகர்ந்து விட்டாள்.!
> நடந்துவிட்டாள்.!
>    ‘அடிமைத் தனம்’ என்ற அரக்கன் தனது கொடிய கரங்களால் நமது சமுதாயத்தின்
> குரல் வளையைப் பிடித்து நெருக்கி மூச்சுத் திணற வைத்துவிட்டான்.
> ’அடிமைத் தனம்’ என்ற அரக்கனின் கோபப் பிடியிலிருந்து நாம் விடுபட்டுவிடோம்.
> என்றாலும், நாம் அடிமை அரக்கனிடம் சிக்குண்டானதற்குகான அடிப்படைக் காரணத்தை
> மறந்து நாம் வாழ முற்பட்டால், ’பழைய குருடி- கதவைத் திறடி! என்ற கதைப்படி
> நம்மைமீண்டும் அடிமத்தனம் வந்து பற்றி சிதைக்க நேரிடும்.
>   நமது புண்ணிய பூமியாம் பாரத தேசம் சுதந்திரம் பெற்ற கதையினை இங்கே செவி
> மடுக்க இருக்கின்றோம்.
> நாம் சுதந்திரம் பெற்ற கதையை மட்டுமே தெரிந்துகொண்டால் போதாது. நாம்
> சுதந்திரத்தை இழந்த கதையினையும் சேர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
>    வெள்ளையர் நமது நாட்டில் வந்து காலடி வைப்பதற்கு முன்னதாகவே, நமது
> தேசத்தின் உயிர் நாடிப் பண்புகளான ஒழுக்கம், தெய்வ நம்பிக்கை, சகோதரத்துவ
> உணர்வு, ஒருமைப் பாட்டு உணர்ச்சி போன்றவை சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருந்தன.
>   நமது சமுதாயம் இப்படியொரு பலவீனத்துக்கு உள்ளாகி நிலை தடுமாறிக்
> கொண்டிருந்த நேரத்தில் வெள்ளையர்கள் வெறும் வணிகர்களாக இங்கே வந்து புகுந்தனர்.
>   நம்மிடையே இருந்த பலவீன இயல்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, மெல்ல
> மெல்ல நம்மைக் கீழே வீழ்த்தி அடிமைப் படுத்திவிட்டு நம் மீது ஏறி
> உட்காந்துகொண்டு ஆட்சி நடத்தவும் முற்பட்டுவிட்டனர்.
>
>
>
> *மெல்ல மெல்ல  உள்ளே நுழைந்தனர் வெள்ளையர்*
>
>  கூடாரத்துக்குள் ஒட்டகம் இடம் பிடித்த ஒரு கதையை குழந்தைகளுக்குச்
> சொல்வார்கள்.
> ------------------------------
>   ஓர் ஒட்டகம், பாலை வனத்தில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்த ஒருவனிடம்
> சென்று,”வெயில் கடுமையாக இருக்கின்றது. என் மூக்கை மட்டும் கூடாரத்துக்குள்
> நுழைக்க அனுமதியளித்தால் வெயிலுக்கு சற்று இதமாக இருக்கும்” என்று கூறிற்று.
>   ஒட்டகம் தன் மூக்கை மட்டும் கூடாரத்தினுள் நீட்டி வைத்துக் கொள்வதால்
> அப்படியென்ன அசௌகரியம் ஏற்பட்டுவிடப்போகிறது என்று எண்ணிய கூடார மனிதன்
> ஒட்டகத்தின் வேண்டுகோளுக்கு உடன்பட்டான்.
>   கூடாரத்துக்குள் கொஞ்ச நேரம் மூக்கை மட்டும் நீட்டிக் கொண்டிருந்த ஒட்டகம்,
> அடுத்துத் தன் கழுத்தை மட்டும் கூடாரத்தினுள் நீட்ட அனுமதி பெற்றது.
>   இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிபெற்ற ஒட்டகம் கடைசியாக கூடாரம்
> முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு கூடாரத்துக்குச் சொந்தக்காரனை வெளியே
> விரட்டிவிட்டதாம்.
>
>
> *இன்னும் வளரும*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/1083327793.3747703.1662485615665%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/1083327793.3747703.1662485615665%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqO19q_7_RwOGNRCSbWRBeeQ5uOxaqkVsPYGW0PugiA2w%40mail.gmail.com.

Reply via email to