| | | | |
| | | | தெய்வக்குழந்தைகளின்திருவிளையாடல் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டு ஆசி வழங்கச் சென்றகற்பனை களஞ்சியம் ஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகள் மணமக்களை வாழ்த்திப் பாமாலை அருளுகிறார்.அதில் ஒரு பாடல் தான் இது குழந்தைகள் இருக்கும் வீட்டில் கலகலப்புக்குப் பஞ்சமேஇருக்காது என்பது நமக்குத் தெரிந்தது தானே? ஆனால், அதே சமயம், ஒன்றுக்கு இரண்டுபிள்ளைகளாகஇருந்துவிட்டால் அவர்களின் கலாட்டாக்கள் அடிக்கடி எல்லை மீறிவிடும். ஒன்றை ஒன்று கேலி செய்யும், முடியைப் பிடித்து இழுக்கும். சட்டையை அவிழ்த்துவிடும். காலைவாரும். சண்டை போட்டுக்கொண்டு முட்டி மோதும். “அம்மா! இவனைப்பாரேன்.” என்று தேம்பிக்கொண்டே ஓடிவரும் அழுகிற குழந்தையை அணைத்து சமாதானப் படுத்துவார்தாய். “உன்னை யார் அடித்தார்கள்? நான் அவரைக் கண்டிக்கிறேன்”என்று ஆறுதல் சொல்வார். இதெல்லாம் கொஞ்ச நேரத்துக்குத் தான். ஐந்து நிமிடம்கழித்து இதே குழந்தைகள் பழைய சண்டைகளை மறந்து ஒன்றாகச் சேர்ந்து விளையாடும். அப்புறம், மறுபடி சண்டை, மறுபடி சமாதானம், மறுபடிவிளையாட்டு .. இதே தொடர் கதை. நம் வீடுகளில் தினந்தோறும் நடக்கிற இந்த நாடகம்,நமது கடவுளரின் வீட்டிலும் உண்டா? அதைக் கற்பனை செய்து ஒரு சுவாரஸ்யமான பாடலாக எழுதியிருக்கிறார்,சிவப் பிரகாச சுவாமிகள். அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான் ஐயவென் செவியைமிகவும் அறுமுகன் கிள்ளினானென்றே சிணுங்கிடவும் அத்தன் வேலவனைநோக்கி விரைவுடன் வினவவே யண்ணன் என் சென்னியில் வளங்குகண் எண்ணினனென வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து நீ யப்படி விகடம்ஏன் செய்தாயென மருவுமென் கைந்நீள முழமளந்தா னென்ன மயிலவனகைத்துநிற்க மைலையரையனு தவ வரும் உமையவளை நோக்கி நின் மைந்தரைப்பாராயெனக் கருதிய கடலாடை யுலகுபல வண்டங் கருப்பமாய்ப் பெற்றகன்னி கணபதியை யருகழைத்து அகமகிழ்வு கொண்டனள் களிப்புடனுமைக்காக்கவே. பதம் பிரித்துப்பார்ப்போம் அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான் ’ஐய, என் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினான்’ என்றேசிணிங்கிடவும் அத்தன் வேலவனை நோக்கி விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என் சென்னியில் விளங்கு கண் எண்ணினன்’ எனவெம்பிடும் பிள்ளையைப் பார்த்து. ‘நீ அப்படியும் விகடம் ஏன் செய்தாய்?’ என மருவும் என் கை நீளம் முழம் அளந்தான் என்ன மயிலவன் நகைத்துநிற்க, மலை யரையன் உதவ வரும் உமையவளை நோக்கி.நின் மைந்தரைப்பாராய்’ எனக் கருது அரியகடல் ஆடை உலகு பல அண்டம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி கணபதியை அருகு அழைத்து அகமகிழ்வு கொண்டனன் களிப்புடன்உமை காக்கவே! இப்பாட்டில், தெய்வக்குழந்தைகளான விநாயகரும் முருகனும்தமக்குள் குறும்புகள் செய்து தந்தை அரனிடம்புகார் செய்கிற காட்சி விவரிக்கப்படுகிறது. சிவப் பரம் பொருளின் (அரன்) பக்கத்தில் வந்து நிற்கின்றார் விநாயகர் (ஐங்கரன) , தன் தம்பிஆறுமுகன், அதாவது முருகனைப்பற்றிக் கோள் சொல்லிச்சிணுங்குகிறார் ‘அப்பா, இந்தமுருகனைப் பாருங்களேன், வேண்டுமென்றே என் காதைப்பிடித்துக் கிள்ளுகிறான்’ அப்படியா? கொஞ்சம் பொறு விசாரிக்கலாம் என்று கூறிமுருகனிடம் விசாரிக்கிறார் சிவப் பரம் பொருள். ” முருகா, அண்ணனைக் கிளினாயா?” இந்தக் கேள்விக்கு எந்தக் குழந்தையும் ப் பதில் சொல்லாது.தன் மீது குற்றம் சாட்டுகிற அண்ணன் மேல் ஒரு புகாரை ஏவுகிறார் முருகப் பெருமான். ”அண்ணன் என்னசெய்தார் தெரியுமா? என்னுடைய ஆறு முகங்களில் எத்தனை கண்கள் இருக்கின்றனவென்று எண்ணிப்பார்த்தார்.” “நீ அப்படிச்செய்தாயா? விநாயகா?” இந்தக் கேள்விக்கும் பதில் இல்லலை. சட்டென்று அடுத்தபுகார் பாய்ந்து வருகின்றது. “தம்பி முருகன்என்னோட தும்பிக்கையின் நீளத்தை முழம் போட்டு அளந்தான்.” இதற்கு மேல் என்ன செய்வது என்று பரம் பொருளுக்கேபுரியவில்லை. நமட்டுச் சிரிப்போடு உட்கார்ந்து விடுகிறார். “உங்கள் பிரச்சினையைவிசாரித்து நியாயம் வழங்க ஒரே ஒருவரால்தான் முடியும்”என்கிறார். உதவிக்கு அன்னை பார்வதியை அழைக்கிறார். “உன் பிள்ளைகள் செய்யும் கூத்தைப் பாரேன்!” மலை அரசனின் மகள், நம்மால் அளக்க இயலாத கடலையே ஆடையாகஉடுத்தியவள், உலகம் முழுவதையும் படைத்த அன்னை, குழந்தைச் சண்டையை எப்படிச் சம்மாளிக்கவேண்டும் என்று அவளுக்குத் தானே தெரியும் ஆரம்,பத்தில் புகார் சொன்ன விநாயகரை அழைக்கிறார் பிள்ளைக்கு ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்துகிறாள்.எல்லாரும் சேர்ந்து சிரிக்கிறார்கள். நமக்கு அருள் புரிகிறார்கள். அந்த தேவி களிப்புடன் உங்களைக் காப்பார் என்று சிவப்பிரகாசர்மணமக்களை வாழ்த்துகிறார். இப்படிப்பட்ட அருமையான குழந்தைகளைப் பெற்று நலமாகவாழ மண மக்களை வாழ்த்துவதாக் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகளின் தனிப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் பிள்ளைப் பேறு எவ்வளவு இனிமையானது என்பதைக்காட்டுவதாகும். (ஐங்கரன் விநாயகர், சென்னி – நெற்றி, மருவும் – பொருந்திய) இப்படி இன்னும் பல இனிய கற்பனை வளம் மிக்க நயமானகவிதைகளைச் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்களில் படித்து சுவைக்கலாம். நன்றி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் | . | | | | -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/1114899251.716448.1662637823277%40mail.yahoo.com.
