[image: v.dotthusg's profile photo]

*சோடாய் மரத்தில் புறா இரண்டு இருந்திடத்து *
*      உறவுகண்டே வேடுவன்*
*தோலாமல் அவை எய்யவேண்டும் என்று ஒருகணை*
*       தொடுத்து வில்வாங்கி நிற்க*
*ஊடு ஆடி எழும்பிடில் அடிப்பதற்கு *
*      உளவு ராசாளி  கூட*
*உயரப்பறந்து கொண்டே திரிய அப்போது*
*       உதைத்த சிலைவேடன் அடியில்*
*சேடாக வல்விடம் தீண்டவே அவன் விழச்*
*       சிலையில் தொடுத்த வாளி*
*சென்று ராசாளி மெய்த்தைத் துவிழ அவ்விரு *
*      சிறைப் புறா வாழ்ந்தது அன்றோ*
*வாடாமல் இவை எலாம் உன் செயல்கள் அல்லாது என்*
*      மனச்செயலினால் வருமோ*
*மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு*
*      மலை மேவு குமரேசனே.*
*பொருள்:-*
*மயில் ஏறி விளையாடும் குகனே! வயல் சூழ மலைமேல் இருக்கின்ற குமரேசனே!
தெய்வச்செயல் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதைக் கூறக்கேட்டு அருள்
செய்வாயாக..*
*     சோடாய் என்ற மரத்தில் இரண்டு புறாக்கள் சேர்ந்திருந்தன. அதைப் பார்த்த
வேடன் ஒருவன், ‘குறிதவறாமல் அவற்றை அம்புகொண்டு வீழ்த்த வேண்டும் ’ என்று
அம்பு தொடுத்து நின்றான். அப்போது அந்த மரத்தின் மேலே புறாக்கள் எழுந்து
பறந்தால் அடிப்பதற்கு ஒரு வல்லூறு காத்திருந்தது. அந்த நிலையில் வேடன் அம்பு
எய்தபோது, அவன் காலைப் பாம்பு தீண்டியது. அதனால் அவன் தரையில் வீழ, அவன் விட்ட
அம்பு மேலே பறந்து திரியும் வல்லூறு பறவை மேல் பாய, அது இறந்து தரையில்
விழுந்தது. அப்போது சோடாய் மரத்திலிருந்த இரண்டு புறாக்களும் ஆனந்தமாய்ப்
பறந்து சென்றன. குறைபாடு இல்லாமல் இப்படியெல்லாம் நடப்பது என் உள்ளக்
கருத்தினாலோ, என் முயற்சியாலோ அல்லவே!  இவை அனைத்தும் முருகா! உன் செயலால்தான்
நடைபெறுகிறது என்பதை நான் நன்கு அறிவேன்.*
*           திரு குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் பாடல் 85.*
*ஒவ்வொரு நாளும் நாம் இறைவனால் காப்பாற்றப் படுகிறோம் என்பதை உணராமலேயே நாம்
இறைவனால் காப்பாற்றப் படுகிறோம்.*
*இறைவன் திருவருள்.*
ஓம்
வெ.சுப்பிரமணியன்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvsOsVPCjkdzqS8t6QgCAbjYTBH_VhGTBcr4ZEycYsvbQ%40mail.gmail.com.

Reply via email to