Sat, 10 Sept at 10:58 am | | | | | | | | | |
| | | FALL 2022 | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஓம் சுதந்திரம் பறிபோன கதை தொடர்சி (4) | | | | | | | | | (4) ஆங்கிலை ஆதிக்கத்தின் தொடக்கம் | | | ( | | ராப்ர்ட் கிளைவ் 1953-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குச் திரும்பிச்சென்றார். பின் 1956-ஆம் ஆண்டு திரும்பவும் பாரதம் வந்து சேர்ந்தார். கிளைவ் வந்து சேர்ந்த சமயம் வங்காளத்தில் ஒரு குழப்பமான நிலை உருவாகி இருந்தது. வங்காள நவாப் ஆக இருந்த சிராஜ் உத் தௌலா ஆஙகிலக் கம்பெனியின் ஆதிக்கத்திலிருந்து கல்கத்தாவைக் கைப்பற்றிக்கொண்டார். சிராஜ் உத் தௌலாவுக்கு ஆங்கிலேயர் மீது அடங்காத வெறுப்பு இருந்தது. அதனால் வங்காளப் பகுதிகளில் குறிப்பாக கல்கத்தாவிலிருந்த ஆங்கிலேயர்களுக்குப் பெருந் தொந்தரவு கொடுத்தார். செய்தி, ராபர்ட் கிளைவவிற்கு எட்டியது. உடனே சென்னையிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளைவ் கல்கத்தாவை மீட்டுவிட்டார். சிராஜ் உத் தௌலா ஓய்ந்துவிடவில்லை. உடனடியாக பிரெஞ்ச்சுக் காரர்களின் படை உதவியைப் பெற்று தனது சூழ்நிலையை வலிமையுள்ளதாக ஆக்கிக்கொண்டு ஆங்கிலேயர்களைப் பழிவாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 1767-இல் சிராஜ் உத் தௌலவுக்கும், கிளைவ் தலைமையில் இருந்த ஆங்கிலப் படைக்குமிடையே பிளாசி என்னுமிடத்தில் கடுமையான போர் மூண்டது. அந்தப் போரில் கிளைவ், சிராஜ் உத் தௌலாவைத் தோற்கடித்து பெரும் வெற்றியை ஈட்டினார். சிராஜ் உத் தௌலாவின் தளகர்த்தராக இருந்த மீர்ஜாபர் என்பவர் வங்காளத்தின் நவாபாக ஆக்கப்பட்டார். பிளாசி வெற்றியின் விளைவாக வங்காளத்தில் ஆங்கிலேயர் தங்கள் செல்வாக்கை நன்றாக வேரூன்றச் செய்து கொண்டனர். தன்னை வங்காள நவாப்ஆக்கியதற்கு நன்றிக் கடனாக 24- பர்க்கானக்கள் என்ற மாவட்டத்தை ஆங்கிலேயர் களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். மற்றும் கணக்கு வழக்கின்றி பொருளையும் அவர்களுக்கு வாரி வழங்கினார். நம்முடைய பாரத வரலாற்றில் பிளாசிப் போர் ஒரு கறைபடிந்த சின்னமாகும். பிளாசிப் போர்தான் பாரத தேசத்தை பிற்காலத்தில் ஆங்கிலேயர் அடிமைப் படுத்துவதற்கான தொடக்கமாக்ஃப அமைந்தது.4) ஆங்கிலை ஆதிக்கத்தின் தொடக்கம் (வளரும்) | | | | -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/1717993230.1200573.1662788376812%40mail.yahoo.com.
