*ஓம்*
* சுதந்திரம் பறிபோன கதை தொடர்ச்சி (6)*


*(6)வெள்ளை வர்க்கத்தின் முதல் கவர்னர் ஜெனரல்)*
(























































*ஓம் கிளைவ் தன் தாய்நாடு திரும்பியபின்னர் 1772-ஆம் ஆண்டு வாக்கில்
வாரன்ஹேஸ்டிங் என்பவர் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்து வங்காளத்தின்
கவர்னராக பொறுப்பு ஏற்றார்.  வாரன் ஹேஸ்டிங்ஸ் பாரதத்தில் பிரிட்டீஷ் ஆட்சி
நன்றாக வேரூன்றி நிலைக்கும் வகையில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை
மேற்கொண்டார்.  நிர்வாக நடைமுறையினை அவர் பலவாறாக ஒழுங்கு படுத்தினார்.
கிளைவ்  ஏற்படுத்திச் சென்ற இரட்டை ஆட்சி முறையினை  அடியோடு அகற்றிவிட்டு வேறு
வகையான ஏற்பாடுகளைச் செய்தார்.   வங்காளத்தையும் பீகாரையும் பல மாவட்டங்களாகப்
பிரித்தார்.   ஒவ்வொரு மாவட்டத்திலும் வரி வசூல் செய்வதற்காக ‘கலெக்டர்’ என்ற
பதவியை ஏற்படுத்தினார்.   இன்று பிரிட்டீஷ் ஆட்சியின் மிச்ச சொச்சம் போல
கலெக்டர்  என்ற பதவி வாரன்ஹேஸ்டிங்ஸ்   காலத்தில் தான் முதல் முதலாக
தோற்றுவிக்கப் பட்டது.  ஒவ்வொரு மாவட்டத்தின் கலெக்டர்களாக வெள்ளையர்
அதிகாரிகள்தான் நியமிக்கப் பட்டனர்.  ‘ரெவின்யூபோர்டு’ என்ற ஓர் அமைப்பு
கல்கத்தாவில் அமைக்கப்பட்டது.  இந்த அமைப்பு வரிவசூலைக் கண்காணித்து, அது
சீராக நடைபெறும் பொறுப்பை மேற்கொண்டது .  வாரன்ஹேஸ்டிங் காலத்தில்தான் இன்றைய
பாணியிலான நீதி மன்றங்கள் முறையாக அமைக்கப்பட்டன.  ஒவ்வொரு மாவட்டத்திலும்
சிவில், கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்கென தனித்தனி நீதி மன்றங்களை
வாரன்ஹேஸ்டிங்ஸ் அமைத்தார்.   ஒழுங்கு முறையுடன் கூடிய ஒரு காவலர் படையும்
அமைக்கப்பெற்றது.  இந்து-- முஸ்லீம் சட்டங்களை ஒழுங்காகத் தொகுப்பதற்கும்
வாரன்ஹேஸ்டிங்ஸ் ஏற்பாடு செய்தார்.  அந்தச் சமயத்தில் கிழக்கிந்தியக்
கம்பெனியின்   நிதி நிலைமை அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
இங்கிலாந்திலிருக்கும் பிரிட்டீஷ் ஆட்சியரிடம் ஒரு பெருந்தொகையைக்  கடனாகப்
பெறுவது என்று கம்பெனி நிர்வாகிகள் தீர்மானித்தனர்.    ஆங்கில நாடாளுமன்றம்,
பாரதத்தில் செயற்படும் கிழக்கிந்தியக்கம்பெனியின்  செயல் முறை நிர்வாகம்
போன்றவற்றைச்    சீர்திருத்தும் நோக்கத்துடன் ஒழுங்குமுறைச் சட்டம் ஒன்றை
1778-ஆம் ஆண்டு இயற்றியது.    இந்தச் சட்டத்தின் விளைவாக பாரதத்தில் பொதுவான
மேல் ஆட்சிப்பொறுப்பை நிர்வகிப்பதற்கென, ‘கவர்னர் ஜெனரல்’ என்ற பதவி
ஏற்படுத்தப்பட்டது.   முதல் கவர்ணர் ஜெனரலாக   வாரன்ஹேஸ்டிங்ஸ் பொறுப்பை
ஏற்றார்.  கல்கத்தாவில் இவருடைய   அலுவலகம் அமைந்தது.  கவர்னர் ஜெனரலுக்கு,
ஆட்சி நிர்வாகத்தில்   துணை புரிவதற்காக ஓர் ஆலோசனைக்  குழு அமைக்கப் பட்டது.
அந்த ஆலோசனைக் குழுவில், நான்கு பேர் இடம் பெற்றனர்.  தலைமை நீதிமன்றம்
ஒன்றும் கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது.  தலைமை நீதிமன்றத்தின் பிரதம
நீதிபதியாக சர் எலிஜா இம்பே என்பவர் பொறுப்பு ஏற்றார்.  1773-ஆம் ஆண்டு
இங்கிலாந்து பாராளு மன்றத்தில் ஒழுங்கு முறைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகுதான்,
பிரிட்டீஷ் ஆட்சி நேரிடையாக கிழக்கிந்தியக் கம்பெனியின் _ அதிகார
செயல்முறைகளில் தலையிட்டுக் கண்காணிக்க முற்பட்டது.  அதற்கு முன்னால்
கிழக்கிந்தியக் கம்பெனி ஓரளவு தன்னிச்சையாகவே செயற்பட்டது என்றே சொல்ல
வேண்டும்.(வளரும்)  *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsmQYyPVUq1GX2xEjVGG0wraViOsiisBGLG_9MEynK92g%40mail.gmail.com.

Reply via email to