*ஓம்* * சுதந்திரம் பறிபோன கதை தொடர்ச்சி (7)*
*(7) ஹைதர் அலி-திப்பு சுல்தானுடன் மோதல்* ( * வாரன்ஹேஸ்டிங்ஸ் தன் பொறுப்புக்கு பாரதத்தில் ஆங்கில ஆட்சியை விஸ்தரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். அந்தக் காலத்தில் மைசூரை ஹைதர் அலி ஆண்டுவந்தார். தன்மான மனப்போக்கும், சுதந்திர உணர்வும் கொண்ட ஹைதர் அலி பல வகையிலும் ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைக்க மறுத்ததுடன் அவர்களை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எதிர்க்கவும் முற்பட்டார். ஆகவே, ஆங்கிலேயர்கள் ஹைதர் அலியுடன் மோதி அவரைத் தோற்கச் செய்தனர். அவருக்குப் பின் பதவி ஏற்ற திப்பு சுல்தானும் வழிக்கு வருவார் என்று தோன்றாததால் அவரையும் தோற்கடித்துப் பதவியிலிருந்து அகற்றினர். அந்தச் சமயத்தில் மகாராஷ்ட்டிரத்தில் ”பீஷ்வா” பதவிக்காக மகாராஷ்ட்டிரர்கள் ஒருவருடன் மற்றொருவர் மோதிக்கொண்டிருந்தனர். சந்தடிச் சாக்கில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உட்புகுந்து காரியம் சாதித்துக் கொள்வதுதானே ஆங்கிலேயர்களின் தந்திரம். மராத்தியர்களின் ‘பீஷ்வா’ப் பதவிப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர்கள் உட்புகுந்தனர். நானா பர்னலிங் என்னும் ஆற்றலும் அறிவும் கொண்ட மராத்திய ராஜ தந்திரி ஆங்கிலேயர்களின் சுய நல தந்திரப் போராட்டத்தை இனங்கண்டு கொண்டு கடுமையாக எதிர்த்தார். வாரன் ஹேஸ்டிங்க்ஸ் ஆங்கிலப் படைகளை மிகவும் சாமர்த்தியமாக வழிநடத்தி வெற்றிமுகம் காணச் செய்தார். அந்தப் போரின் பயனாக 1762-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடன் படிக்கையின் காரணமாக “சால்செட்” என்னும் தீவு ஆங்கிலேயர்களுக்குக் கிடைக்கப்பெற்றது.(வளரும்)* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdteZ%3Dp68nHGSnX%2BV54Wsk7h%3Dvp7dYMfri1Fxsr6E%2BrKvQ%40mail.gmail.com.
