*ஓம்* * சுதந்திரம் பறிபோன கதை தொடர்ச்சி(8)*
*(8) பிட் இந்தியச் சட்டம்* ( * இந்தச் சட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 1764-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பாரதத்தில் பிரிட்டீஷ் ஆட்சி ஓர் ஒழுங்கு முறையுடன் விரிவடைவதற்கு ஏற்ற நிர்வாகச் சீர்திருத்தங்களை மெற்கொள்வது இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம். இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கான நிலையான அஸ்திவாரம் அமைக்கப் பெற்றது. பிட் இந்தியச் சட்டப்படி, பாரத நாட்டின் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி நிர்வாகத்தைக் கண்காணிக்க இங்கிலாந்திலும் ஒரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கம்பெனி நிர்வாகத்திற்கு அந்த நிர்வாக அமைப்பு மேலாதிக்கம் வகித்தது. பாரதத்தில், சண்டை, சமாதானம் போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கம்பெனியார் தன்னிச்சையாக ஈடுபடக்கூடாது; இங்கிலாந்தி லுள்ள நிர்வாக அமைப்பின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். கவர்னர் ஜெனரலுக்கு ஆலோசனை கூற நால்வர் அடங்கிய குழு ஒன்று பாரதத்தில் அமைக்கப் பட்டதல்லவா? அந்த குழு நன்கு திருத்தி அமைக்கப்பட்டது. ஆலோசனைக் குழு உறுப்பினர் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாகக் குறைக்கப்பட்டது. கவர்னர் ஜெனரலின் அதிகாரம் உறுதிப் படுத்தப்பட்டதுடன் விஸ்தரிக்கவும் செய்யப்பட்டது. சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள கவர்னர்களும், கவர்னர் ஜெனரலின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.-=-=-=-=-=(வளரும்) * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduaacT5TO%2Bg5CDCerxvgOJYvoLKHZz0FNUMZ3Zpu1gK1Q%40mail.gmail.com.
