*ஓம். சுதந்திரம் பறி போன கதை(9 )** ஜமீன்தாரி முறை**)*
*((9)ஜமீன்தாரிமுறை தோற்றம் * * வாரன்ஹேஸ்டிங்ஸிக்குப் பிறகு 1768-ஆம் ஆண்டில் காரன்வாலீஸ் பிரபு என்பவர் கவர்னர் ஜெனரலாக நியமி க்கப்பட்டார். காரன் வாலீஸ் நிர்வாக அமைப்பினை தெளிவாக இயக்கும் விதத்தில் சீர்திருத்தி அமைத்தார்.கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளர்கள் முழு நேரப் பணியாளர்களாக ஆக்கப்பட்டனர். அவர்கள் கம்பெனியின் பணிதவிர வேறு பணிகளில் ஈடுபடக்கூடாதென்று கட்டுப்படுத்தப்பட்டனர். பணியாளர்கள் திறமையின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டனர் . ஆனால்,காரன்வாலீஸ் பிரபு பாரத மக்களுக்கு வேலை கொடுக்கும் விஷயத்தில் மட்டும் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். உயர்ந்த பதவிகள் எதுவும் இந்தியர்களுக்குத் தராமல்தவிர்த்தார். அந்தக் காலத்தில் அந்த அந்த மாவட்டத்தின் நீதி விசாரணைப் பொறுப்பு மாவட்டக் கலெக்டர்களிடமே இருந்தது. அந்த அதிகாரங்களை எடுத்துவிட்டு காரன்வாலீஸ் முழுக்க முழுக்க வரி வசூல் செய்யும் பொறுப்பை மட்டுமே அவர்கள் கவனிக்குமாறு செய்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிவில், கிரிமினல் வழக்குகளை விசாரிக்க தனித் தனி நீதிபதிகள் நியமிக்கப் பட்டனர். காரன் வாலீஸ் காலத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது என்று குறிப்பிடத்தக்கது, நில வரி தொடர்பாகச் செய்யப்பட்ட சீர்திருத்தங்களாகும். நிலவரி வசூல் செய்யும் பணி கம்பெனியின் நேரடிப்பொறுப்பிலிருந்து ‘ஜமன்தார்’ என்னும் வர்க்கத்திடம் ஏலத்தில் விடப்பட்டது. கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்போருக்கு வரி வசூல் செய்யும் உரிமை அளிக்கப்பட்டது. இந்தக் காரணத்தால் வரிவசூல் தொகை ஒவ்வொரு ஆண்டும் வேறுபட்டது. இதன் காரணமாக ஜமீன்தார்களும் பேரவதிப் பட நேர்ந்தது ஜமீந்தாரி அமைப்பு முறையில் காரன் வாலீஸ் பிரபு முக்கியமன சீர்திருத்தங்களைச் செய்தார். அவருடைய திட்டத்தின் படி ஜமீன் தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாக ஆக்கப்பட்டனர்.ஆண்டுதோறும் அவர்கள் செலுத்தவேண்டிய வரித்தொகை எவ்வளவு என நிர்ணயிக்கப்பட்டது. அந்தத் தொகை மாறாதவாறும் செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தின் படி அரசாங்கத்திற்கு கணிசமான தொகை வருமானமாக கிடைக்கத் தொடங்கியது. அதே சமயம் ஜமீந்தார்களும் கொழுத்த பணக்காரர்களாக ஆனார்கள். தங்கள் சுக போக உயர் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்தார்கள் என்பதற்காக ஜமீந்தார்கள், பிரிட்டீஷ் ஆட்சி இந்தியாவில் தொடர்ந்து நீடிக்கத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஜமீன்தார்களின் வாழ்க்கையும் அவர்கள் நிர்வாக நடைமுறைகளும் பற்றி இரண்டு விதமாகக் கூறலாம்.சில ஜமீன்தார்கள் தங்கள் பொறுப்பில் இருந்த குடிமக்களின் நலனில் அக்கறை காண்பித்து உற்சாகத்துடன் விவசாயத்தைப் பெருக்கி வளமான சூழ்நிலை அமையச் செய்து, அவர்கள் மகிழ்ந்து_ அவர்களைச் சார்ந்தோரும் மகிழ உதவினர். வேறு சில ஜமீன்தார்கள் விவசாயப் பணிகளில் அக்கறை காண்பிக்காமல், குடிமக்களிடம் கொடு மைகள் இழைத் துத் துன்புறுத்தி வரி வசூல் செய்து சுக போக வாழ்வு வாழ்ந்தனர்.-=-=-=-=-=-=வளரும் வெ.சுப்பிரமணி யன் ஓம்* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduMf4RDgwqRDW7-goLH-hX%2BfABDA84eNJYGnKDeeaJLGg%40mail.gmail.com.
