

 
AumDr.Jeyabarathi has passed into eternity. His knowledgeable writings are 
endless


  


கவிச்சிங்க நாவலர்


பல பிரபந்தங்களையும் தனிப்பாடல்களையும் பாடியுள்ள

கவிச்சிங்க நாவலரின் அரிய ஆற்றல்களின் உச்ச கட்டங்களாக

இரண்டு நிகழ்ச்சிகளைக் கூறலாம்.

ஒரு முறை பொன்னுச்சாமித்தேவர் கவிச்சிங்க நாவலரிடம்

இவ்வாறு கோரிக்கையிட்டார்:


"கால், கொம்பு, விசிறி, ஒற்று, ஙகரம், ஞகரம், பகரம்,

மகரம் ஆகியவை நீங்கிய அநாசிக நிரோட்டக வெண்பாவை

இயற்றவேண்டும். அதையும் பத்தே பத்து நிமிடங்களில் இயற்றவேண்டும்".


கால் = ¡

கொம்பு = ¦

விசிறி = §

ஒற்று = மெய்யெழுத்து

ஙகரம் = ங வரிசை

ஞகரம் = ஞ வரிசை

பகரம் = ப வரிசை

மகரம் = ம வரிசை.


அநாசிக எழுத்துக்கள் என்பவை க, ச, ட, த, ப, ற,

ய, ர, ல, வ, ள, ழ, ஆகியவை.


இந்த இடத்தில் உடற்கூறு பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும்.


வாயின் உட்புறம், தொண்டைக்குழி, நாசியின் உட்புறம்,

ஊட்டி ஆகியவை சந்திக்கும் இடத்தில் Pharynx, Laryngo-pharynx,

Oro-pharynx, Naso-pharynx என்னும் இடங்கள் இருக்கின்றன.

வாயிலிருந்து உணவை அல்லது தண்ணீரை விழுங்கும்போது

Glottis, Epiglottis என்னும் ஜவ்வு/தசைகள் தானாகவே இயங்கும்.

அப்போது Laryngo-pharynx, Naso-pharynx ஆகியவை மூடப்படும்.

உணவு Oro-Pharynx வழியாகச் சென்று Oesophagus என்னும்

உணவுக் குழலில் இறங்கி இரைப்பைக்குச் செல்லும். சம்பந்தப்பட்ட

பாதைகள் சரியாக மூடப்படவில்லையென்றால் தண்ணீர் எட்ஸெட்டெரா

மூச்சுக் குழலுக்குள்ளோ அல்லது நாசியின் உட்புறத்துக்குள்ளோ

சென்று புரையேறிவிடும்.


பேசும்போது சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது

நாசியின் உட்புறம் திறந்திருக்கும். ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவை

அப்படிப்பட்டவை. நாசியின் வழியாக மூச்சு வரும். இவற்றை Nasals

என்று சொல்வார்கள். இவைதாம் நாசிக எழுத்துக்கள்.


கசடதபற, யரலவளழ ஆகியற்றை உச்சரிக்கும்போது

நாசிப் பாதை மூடியிருக்கும். இவை அநாசிக எழுத்துக்கள்.


நிரோட்டகம் - அதாவது நிர் ஓட்டகம் என்றால் உதடு

ஒட்டாமலோ குவியாமலோ சொல்லப்படுவது. 'ஓஷ்டக' என்பது உதடு.

உதடு தொங்கி பெரியதாக இருப்பதால்தான் ஒட்டகத்துக்கு

ஒட்டகம் என்று பெயர்.


நிரோட்டக எழுத்துக்கள் எல்லா உகரங்கள், ஊகாரங்கள்,

எல்லா ஒகரங்கள் ஓகாரங்கள், ஔகாரங்கள், மகர வரிசை,

வகர வரிசை, பகர வரிசை ஆகிய அனைத்தும் நீக்கி மீதி இருப்பவை.


பொன்னுச்சாமித் தேவர் கொடுத்த சமிசைப்படி தமிழில்

உள்ள 247 எழுத்துக்களில் 187 எழுத்துக்களைப் பயன்படுத்த

முடியாது.


தேவர் சொன்னபடியே பத்தே நிமிடங்களில் கவிச்சிங்க

நாவலர் பாடிவிட்டார்:


அலக கசட தடர ளகட

கலக சயச கதட - சலச

தரள சரத தரத ததல

கரள சரள கள


அலக கசடது அடர் அளம் கட

கல் அக சய சக தட - சலச

தரள சர தத ரத ததல

கரள சரள கள


அலக = எல்லையுடையவாக

கசடது அடர் = குற்றங்களின் செறிவும்

அளம் = உவர்த்தலும்

கட = கடந்த

கல் அக = புலமை மிக்காரின் உள்ளத்தில் உறைகின்றவனே

சய = வெற்றியை உடையவனே

சக தட = உலக எல்லாம் இடம் உடையவனே

சலச = தாமரையில் எழுந்தருளியவனே

தரள = அசைவினை உடையவனே

சர = சரபனே

தத = விரிந்த

ரத ததல = தேரை நிலையாகக் கொண்டவனே

கரள = விடத்தினை

சரள = நேர்மையாக

கள = கண்டத்தில் அணிந்தவனே


Impossible!

Yet Possible!


அன்புடன்


ஜெயபாரதி


=================




__._,_.___

 --------------------------------- 

 


  

 

  
 



__,_._,___


 



ஐ


-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/1438695435.748188.1663153936773%40mail.yahoo.com.

Reply via email to