நன்றி, வாழ வந்த வாழ்வுதன்னை வாழவைப்போரை

வாழவைப்போர்  அன்றி வாழப் -போர் எனினும்



தனக்கு உவமை இல்லாதான் தாளடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பையில  எனின், தன் குற்றம்  எனக்

தன்னை தாழ்த்தி நோவதேன் ; குருடனை குருடன் என

விளிப்பது உண்மை தன்மை இலன் எனில் அழகியை

அவ்வாறு விளி ப்பதும் குற்றமேயன்றோ?

தாழ்வு மனம் கொண்டோரே உரிமையை நாடுவர் நம் நாட்டில்

ராஜா மனு தர்மம் சூத்ரிரத்தைக் கையாண்டது போல் ;

ப்ராஹ்மணன் உயர்குலமென இகழ்வாராய்த் தன முதுகின்

கருமை படர்திருத்தலை அறியாதார்; சூத்ரிரர் இங்கு உண்டெனில்,

 ராஜா விளம்பியது போல்,  ப்ராஹ்மணன் இங்குடென்பதில்

எது சந்தேகம் ?  அகழ்வாரை தாங்கும் நிலம் போலெ

தன்னை இகழ்வாரை தாங்கும் ப்ராஹ்மணன் , தன்னை

பிரம்மன் என்று அறிந்ததால் அன்றோ, மனா உறுதி பெற்றுள்ளான்

குருடனேயும் , செவிடனும் ஏனையோரும் தன்னை ப்ரஹ்மம் என்று அறிந்தால்

அழகியாயென் அன்றில் குறையுடவனாயின் , ஈசன் கணனிக்கு

மென்பொருள் வித்யாசம், அர்த்தமுள்ளது ; தன்மானம் கருதுதல்

தன்  மனம்   தாழ்ந்து நோக்கியதால் அன்றோ -நன்றும் தீதும் பிறர் தர வார    KR
IRS 15922

On Wed, 14 Sept 2022 at 22:17, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

>
> From: Jeyaram. Iyer <[email protected] <https://groups.google.com/>>
>
>
> *வாழவந்த வாழ்வுதனை வண்ணமுறச் செய்கின்றார்    !     *
>
>
>
> *                       மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா*
> *               மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்*
> *                        மெல்பேண் .... ஆஸ்திரேலியா *
>
>
> *கையில்லா பலருள்ளார் காலில்லா பலருள்ளார்*
> *கண்ணில்லா பலருள்ளார் வாய்பேசா பலருள்ளார்*
> *என்றாலும் இவர்கலெல்லாம் இவ்வுலகில் வாழுகிறார்*
> *எவருக்கும் தீங்கிளைக்க இவரென்றும் எண்ணுகிலார் *
>
> *குறையெது வுமில்லாமல் குவலயத்தில் பலருள்ளார்*
> *குறைகாணும் வழியிலவர் நிதம்பயணப் படுகின்றார்*
> *குறையின்றிப் பிறந்ததனை மனமதிலே இருத்தாமல்*
> *நிறைகுறைவாய் இருப்பதனை நெஞ்சேற்க மறுக்கிறது *
>
> *ஊனமுற்றோர் தினமென்று ஒருதினத்தை முன்னிறுத்தி*
> *ஊனமுற்றோர் என்போரை  உயர்த்தியே பலவுரைப்பார்*
> *உரைப்பவர்கள் அரங்குக்குள் வருவதற்கு முன்னாலே*
> *குருடுடென்பார் செவிடென்பார் நொண்டியென்பார் கேலியுடன் *
>
> *மேடைகளில் ஏறுவார் வீரவார்த்தை கொட்டிடுவார்*
> *ஊனமென்னும் சொல்லதனை உரைத்திடலே தவறென்பார்*
> *உள்ளுக்குள் அவர்மனமோ ஊனமாய் ஆகிருக்கும்*
> *உடல்குறைவு உடையாரை ஊனமுற்றோர் எனவுரைப்பார் *
>
> *கண்ணிருந்தும் கற்கமாட்டார் கையிருந்தும் உதவமாட்டார்*
> *வாயிருந்தும் நல்வார்த்தை வரவழைக்க விரும்பமாட்டார்*
> *உடற்குறைகள் எதுவுமுன்றி உலகிலவர் வாழ்ந்தாலும்*
> *ஊனமுற்ற மனிதர்களாய் ஆக்கிடுவார் வாழ்க்கையினை *
>
> *அவயவத்தில் குறைபாடு பெற்றாலும் அவரகத்தில்*
> *துணிவென்னும் நம்பிக்கை துளிர்விட்டே எழுகிறது*
> *துளிர்விட்ட நம்பிக்கை பலதுறையில் பயணப்பட*
> *அவருடனே கூடவே அணைந்ததாய் அமைகிறது *
>
> *ஊனமுற்றோர் வார்த்தையிப்போ உருமாறி வந்திருக்கு*
> *மாற்றுத் திறனாளிகளாய் மாநிலத்தில் மிளிர்கின்றார் *
> *ஆற்றலினைக் காட்டுகின்றார் அகிலமெங்கும் செல்லுகிறார்*
> *ஆற்றலுடை மனிதர்களாய் ஆகியவர் துலங்குகிறார் *
>
> *நிறையுடையார் பங்குபற்றும் நிகழ்ச்சியெலாம் வருகின்றார்*
> *குறைகாணா வகையினிலே குதித்தோடி வெல்லுகிறார்*
> *தங்கமொடு வெண்கலமும் தரமுயர்ந்த பரிசுகளும் *
> *பொங்கிவரும் வாழ்த்தொலியில் இங்கிதமாய் ஆக்குகிறார் *
>
> *பார்வையற்ற பலபேர்கள் பட்டம்பல குவிக்கின்றார்*
> *பல்கலைக் கழகந்தன்னில் உயர்நிலையில் இருக்கின்றார்*
> *நீதிமன்றம் ஏறுகின்றார் நியாமதை உரைக்கின்றார்*
> *சாதிக்கும் நாயகராய் தலைநிமிர்ந்து நிற்கின்றார் *
>
> *இசைத்துறையில் இருக்கின்றார் இயல்த்துறையில் இருக்கின்றார்*
> *வெளிநாட்டுத் தூதுவராய் வியக்கவைத்து நிற்கின்றார்*
> *ஓவியம் தீட்டுகிறார் உயர்மேடை ஏறுகிறார்*
> *காவியத்து நாயகராய் கண்ணியமாய் எழுகின்றார் *
>
> *ஊனமுற்றோர் எனம்நினைப்பை உளமிருத்து அகற்றுகிறார்*
> *உலகமது அதிசயிக்க உயர்பணிகள் ஆற்றுகிறார்*
> *வாழவந்த வாழ்வுதனை வண்ணமுறச் செய்கின்றார்*
> *வாழ்வாங்கு வாழுவதை மனமுழுக்க நிறைக்கின்றார் *
>
>
>    -
>
>  வெ.சுப்பிரமணியன்  வேறுதளத்தில் வந்தது நன்றிஓம்
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvuOMM%2BR%2B7_FjQDOngj2Vv0TGajL07M%2BeMzerJYcy7p9w%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvuOMM%2BR%2B7_FjQDOngj2Vv0TGajL07M%2BeMzerJYcy7p9w%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZootRipqojAyvk50YyoPKbn2MydNjcniAG_TdYKjSpGK%2Bw%40mail.gmail.com.

Reply via email to