From: Jeyaram. Iyer <[email protected] <https://groups.google.com/>>
*வாழவந்த வாழ்வுதனை வண்ணமுறச் செய்கின்றார் ! * * மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா* * மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்* * மெல்பேண் .... ஆஸ்திரேலியா * *கையில்லா பலருள்ளார் காலில்லா பலருள்ளார்* *கண்ணில்லா பலருள்ளார் வாய்பேசா பலருள்ளார்* *என்றாலும் இவர்கலெல்லாம் இவ்வுலகில் வாழுகிறார்* *எவருக்கும் தீங்கிளைக்க இவரென்றும் எண்ணுகிலார் * *குறையெது வுமில்லாமல் குவலயத்தில் பலருள்ளார்* *குறைகாணும் வழியிலவர் நிதம்பயணப் படுகின்றார்* *குறையின்றிப் பிறந்ததனை மனமதிலே இருத்தாமல்* *நிறைகுறைவாய் இருப்பதனை நெஞ்சேற்க மறுக்கிறது * *ஊனமுற்றோர் தினமென்று ஒருதினத்தை முன்னிறுத்தி* *ஊனமுற்றோர் என்போரை உயர்த்தியே பலவுரைப்பார்* *உரைப்பவர்கள் அரங்குக்குள் வருவதற்கு முன்னாலே* *குருடுடென்பார் செவிடென்பார் நொண்டியென்பார் கேலியுடன் * *மேடைகளில் ஏறுவார் வீரவார்த்தை கொட்டிடுவார்* *ஊனமென்னும் சொல்லதனை உரைத்திடலே தவறென்பார்* *உள்ளுக்குள் அவர்மனமோ ஊனமாய் ஆகிருக்கும்* *உடல்குறைவு உடையாரை ஊனமுற்றோர் எனவுரைப்பார் * *கண்ணிருந்தும் கற்கமாட்டார் கையிருந்தும் உதவமாட்டார்* *வாயிருந்தும் நல்வார்த்தை வரவழைக்க விரும்பமாட்டார்* *உடற்குறைகள் எதுவுமுன்றி உலகிலவர் வாழ்ந்தாலும்* *ஊனமுற்ற மனிதர்களாய் ஆக்கிடுவார் வாழ்க்கையினை * *அவயவத்தில் குறைபாடு பெற்றாலும் அவரகத்தில்* *துணிவென்னும் நம்பிக்கை துளிர்விட்டே எழுகிறது* *துளிர்விட்ட நம்பிக்கை பலதுறையில் பயணப்பட* *அவருடனே கூடவே அணைந்ததாய் அமைகிறது * *ஊனமுற்றோர் வார்த்தையிப்போ உருமாறி வந்திருக்கு* *மாற்றுத் திறனாளிகளாய் மாநிலத்தில் மிளிர்கின்றார் * *ஆற்றலினைக் காட்டுகின்றார் அகிலமெங்கும் செல்லுகிறார்* *ஆற்றலுடை மனிதர்களாய் ஆகியவர் துலங்குகிறார் * *நிறையுடையார் பங்குபற்றும் நிகழ்ச்சியெலாம் வருகின்றார்* *குறைகாணா வகையினிலே குதித்தோடி வெல்லுகிறார்* *தங்கமொடு வெண்கலமும் தரமுயர்ந்த பரிசுகளும் * *பொங்கிவரும் வாழ்த்தொலியில் இங்கிதமாய் ஆக்குகிறார் * *பார்வையற்ற பலபேர்கள் பட்டம்பல குவிக்கின்றார்* *பல்கலைக் கழகந்தன்னில் உயர்நிலையில் இருக்கின்றார்* *நீதிமன்றம் ஏறுகின்றார் நியாமதை உரைக்கின்றார்* *சாதிக்கும் நாயகராய் தலைநிமிர்ந்து நிற்கின்றார் * *இசைத்துறையில் இருக்கின்றார் இயல்த்துறையில் இருக்கின்றார்* *வெளிநாட்டுத் தூதுவராய் வியக்கவைத்து நிற்கின்றார்* *ஓவியம் தீட்டுகிறார் உயர்மேடை ஏறுகிறார்* *காவியத்து நாயகராய் கண்ணியமாய் எழுகின்றார் * *ஊனமுற்றோர் எனம்நினைப்பை உளமிருத்து அகற்றுகிறார்* *உலகமது அதிசயிக்க உயர்பணிகள் ஆற்றுகிறார்* *வாழவந்த வாழ்வுதனை வண்ணமுறச் செய்கின்றார்* *வாழ்வாங்கு வாழுவதை மனமுழுக்க நிறைக்கின்றார் * - வெ.சுப்பிரமணியன் வேறுதளத்தில் வந்தது நன்றிஓம் -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvuOMM%2BR%2B7_FjQDOngj2Vv0TGajL07M%2BeMzerJYcy7p9w%40mail.gmail.com.
