| 
| 
| 
| 
| 
| 
| 
|  |

 |

 |

 |

 |

 |


| 
| 
| சுதந்திரம் பறிபோன கதை தொடர்ச்சி(11) |

 |

 |


| 
|  |

 |


|    |


|  
|  சுதேச சமஸ்தானங்கள் ஆங்கில ஆதிக்கத்தில் வருதல் | காரன்வாலீஸ் 
பிரபுவுக்குப்பின்னர சர் ஜான் ஷோர் என்பவர் 1763-ஆம் ஆண்டு கவர்ணர் ஜெனரல் 
பொறுப்பு ஏற்று பாரதத்திற்கு வந்தார்.

  இவர் பொறுப்பிலிருந்த காலத்தில் பாரதத்தின் உள்நாட்டு விவகாரங்களில் அதிகமாகத் 
தலையிடாமல், பாரதத்தில் ஆங்கில ஆட்சி நின்று நிலைக்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.

  சர் ஜான் ஷோருக்குப் பிறகு 1793-ஆம் ஆண்டில் வெல்லஸ்லி பிரபு என்பவர் கவர்னர் 
ஜெனரல் பதவி ஏற்றார்.

     அ ந்தச் சமயத்தில்  பாரத நாட்டில் துண்டு துண்டாக ஆட்சி நடத்திவந்த சுதேச 
மன்னர்களுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் 
போக்கு அச்சத்தை அளித்தது.

 ஆங்கிலேயர்களை பாரத நாட்டைவிட்டு   விரட்டியடிக்காவிட்டால் தங்களுடைய எதிர்கால 
வாழ்வு நிர்மூலமாகிவிடும் என்று அவர்கள் பயந்தனர்
.
  ஆகவே, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிடுவதற்காகத்   தங்களைப் பலப்படுத்திக்  
கொள்ள அவ்ரகள் திட்டமிட்டனர்.

  தங்களுக்கு உதவுமாறு பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர்.

  பிரெஞ்சுக்காரகளின் உதவியுடன் தங்கள் படைகளுக்கு மேல்நாட்டு முறைப்படி பயிற்சி 
அளித்தனர்.

  வெல்லஸ்லி பிரபு, சுதேச மன்னர்களின் மன நிலையை உணர்ந்தார். முரட்டு நடவடிக்கைகள் 
மூலம் அவர்களைச் சமாளிக்க முற்படக்கூடா  தென்று முடிவெடுத்தார்.

  தந்திரமாக  அவர்களை வழிக்குக் கொண்டுவர மறைமுகத் திட்டமொன்றை வகுத்தார். 

  சுதேசி மன்னர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பாக  
கிழக்கிந்தியக் கம்பெனி எந்தவித குறுக்கீடும் செய்யாது எனவும், அவர்கள் 
சுதந்திரமாக செயல்படலாம் என்றும் வெல்லஸ்லி பிரபு சுதேச மன்னர்களுக்கு 
உறுதியளித்தார்.

  தங்கள் சொந்த நாட்டின் பாதுகாப்புக்கு என சுதேச மன்னர்கள் தத்தம் நாடுகளில் 
ஆங்கிலேய துணைப்படை ஒன்றினை வைத்துக்கொள்ள   வேண்டும் என்றும், அந்தப் படைகளுக்கான 
செலவை அந்த அந்த நாடுகளே தரவேண்டும் என்றும் கெட்டுக்கொண்டார்.

  படைகளுக்கான செலவைப் பொருளாகக் கொடுக்க வசதியற்றவர்கள் அச்செலவுக்கு ஈடாக தங்கள் 
 பிரதேசத்தில் ஒரு பகுதியை ஆங்கிலேயக் கம்பெனிக்குக் கொடுத்துவிட வேண்டும்.

  ஆங்கிலேயர் அனுமதியில்லாமல் சுதேச மன்னர்கள் தமக்குள் உறவு வைத்துக் 
கொள்ளக்கூடாது.

  ஆங்கிலேயர்கள் அல்லாத பிற ஐரோப்பியர்  களுடனும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.

 சுதேச மன்னர்களின் நாட்டை யாராவது தாக்கினால் ஆங்கிலக் கம்பெனி  அவ்ர்களுடைய 
உதவிக்குச் சென்று பாதுகாப்பளிக்கும்.

  இந்தத் திட்டங்களை ஏற்றுக்கொண்டால் சுதேச மன்னர்கள் நிம்மதியுடனும் 
பாதுகாப்புடனும்   வாழலாம் என வெல்லஸ்லிப் பிரபு அறிவித்தார்.

  ஆங்கிலேயர்களின் திட்டத்தை உடனடியாக ஹைதராபாத் நிஜாம் ஏற்றுக்கொண்டார்.

  அவர் ஆங்கிலேயர்களின் படைச் செலவுக்கென, கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் ஆகிய 
மாவட்டங்களை அளித்தார்.

  ‘கொடையாக அந்த மாவட்டங்களை  அளிக்கப்பட்டதால் அவை  கொடை மாவட்டங்கள் என்று 
அழைக்கப்பட்டன.

  அயோத்தி நவாபும் ஆங்கிலேயரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

  அவர் படைச் செலவுக்கென ஆங்கிலேயர்களுக்கு கங்கை யமுனை பிரதேசங்களை அளித்தார். 

  பீஷ்வா, கெய்க்வார் ஆகிய மன்னர்களும் அந்தத் திட்டத்திற்கு ,ஒப்புதல் அளித்தனர்.

  ஆனால், திப்பு சுல்தானும் மற்ற மராத்தியத்   தலைவர்களும்  வெல்லஸ்லியின் 
திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

  ஆகவே, வெல்லஸ்லி பிரபு திப்பு சுல்தானை ஒடுக்கிப் போடத் திட்டமிட்டாடார்.  
1799-ஆம் ஆண்டு தனது படைகளுடன் திப்பு சுல்தானை ஸ்ரீரங்கப் பட்டனத்தில் 
எதிர்த்தார்.

  அந்தப் போர்   திப்பு சுல்தானுடன் ஆங்கிலேயர்கள் நடத்திய நான்காவது போர் ஆகும்.

  திப்பு சுல்தான் வெள்ளையரை எதிர்த்துப்  போர்புரிந்து போர் களத்திலேயே    வீர 
மரணம் அடைந்தார்.

  திப்பு சுல்தான் வீர சுவர்க்கம் அடைந்த பிறகு, மைசூர் ராஜ்ஜியத்தின் பெரும் 
பகுதியை   ஆங்கிலேயர்கள்  தன் வசப் படுத்திக்கொண்டனர்.

 ஒரு கணிசமான பகுதியை ஹைதராபாத் நிஜாம் மேற்கொண்டுவிட்டார்.

  இவ்வாறாக, தன்மானத்துடன் ஆங்கில ஏகாதி  பத்தியவாதிகளை எதிர்த்த ஒரு மாவீரனின் 
நாடு சின்னா பின்னமாக்கப்பட்டுவிட்டது.
   |

 |

 |

 |

  

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/368566205.201034.1663658784875%40mail.yahoo.com.

Reply via email to