👍

On Tue, 20 Sept 2022 at 12:56, subra manian <[email protected]> wrote:

>
>
> *சுதந்திரம் பறிபோன கதை தொடர்ச்சி(11)*
>
>
>
>
> * சுதேச சமஸ்தானங்கள் ஆங்கில ஆதிக்கத்தில் வருதல்*
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> *காரன்வாலீஸ் பிரபுவுக்குப்பின்னர சர் ஜான் ஷோர் என்பவர் 1763-ஆம் ஆண்டு
> கவர்ணர் ஜெனரல் பொறுப்பு ஏற்று பாரதத்திற்கு வந்தார்.
> இவர் பொறுப்பிலிருந்த காலத்தில் பாரதத்தின் உள்நாட்டு விவகாரங்களில் அதிகமாகத்
> தலையிடாமல், பாரதத்தில் ஆங்கில ஆட்சி நின்று நிலைக்கும் நடவடிக்கை
> மேற்கொண்டார்.  சர் ஜான் ஷோருக்குப் பிறகு 1793-ஆம் ஆண்டில் வெல்லஸ்லி பிரபு
> என்பவர் கவர்னர் ஜெனரல் பதவி ஏற்றார்.     அ ந்தச் சமயத்தில்  பாரத நாட்டில்
> துண்டு துண்டாக ஆட்சி நடத்திவந்த சுதேச மன்னர்களுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக
> விரிவடைந்து வரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் போக்கு அச்சத்தை
> அளித்தது. ஆங்கிலேயர்களை பாரத நாட்டைவிட்டு
>  விரட்டியடிக்காவிட்டால் தங்களுடைய எதிர்கால வாழ்வு நிர்மூலமாகிவிடும் என்று
> அவர்கள் பயந்தனர்.  ஆகவே, ஆங்கிலேயர்களை எதிர்த்துப்
> போரிடுவதற்காகத்   தங்களைப் பலப்படுத்திக்  கொள்ள அவ்ரகள் திட்டமிட்டனர்.
> தங்களுக்கு உதவுமாறு பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர்.
> பிரெஞ்சுக்காரகளின் உதவியுடன் தங்கள் படைகளுக்கு மேல்நாட்டு முறைப்படி பயிற்சி
> அளித்தனர்.  வெல்லஸ்லி பிரபு, சுதேச மன்னர்களின் மன நிலையை உணர்ந்தார்.
> முரட்டு நடவடிக்கைகள் மூலம் அவர்களைச் சமாளிக்க முற்படக்கூடா
> தென்று முடிவெடுத்தார்.  தந்திரமாக  அவர்களை வழிக்குக் கொண்டுவர மறைமுகத்
> திட்டமொன்றை வகுத்தார்.   சுதேசி மன்னர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பை
> நிறைவேற்றுவது தொடர்பாக  கிழக்கிந்தியக் கம்பெனி எந்தவித குறுக்கீடும்
> செய்யாது எனவும், அவர்கள் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் வெல்லஸ்லி பிரபு
> சுதேச மன்னர்களுக்கு உறுதியளித்தார்.  தங்கள் சொந்த நாட்டின் பாதுகாப்புக்கு
> என சுதேச மன்னர்கள் தத்தம் நாடுகளில் ஆங்கிலேய துணைப்படை
> ஒன்றினை வைத்துக்கொள்ள   வேண்டும் என்றும், அந்தப் படைகளுக்கான செலவை அந்த
> அந்த நாடுகளே தரவேண்டும் என்றும் கெட்டுக்கொண்டார்.  படைகளுக்கான செலவைப்
> பொருளாகக் கொடுக்க வசதியற்றவர்கள் அச்செலவுக்கு ஈடாக தங்கள்  பிரதேசத்தில் ஒரு
> பகுதியை ஆங்கிலேயக் கம்பெனிக்குக் கொடுத்துவிட வேண்டும்.  ஆங்கிலேயர்
> அனுமதியில்லாமல் சுதேச மன்னர்கள் தமக்குள் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.
> ஆங்கிலேயர்கள் அல்லாத பிற ஐரோப்பியர்  களுடனும் உறவு வைத்துக்
> கொள்ளக்கூடாது. சுதேச மன்னர்களின் நாட்டை யாராவது தாக்கினால் ஆங்கிலக்
> கம்பெனி  அவ்ர்களுடைய உதவிக்குச் சென்று பாதுகாப்பளிக்கும்.  இந்தத்
> திட்டங்களை ஏற்றுக்கொண்டால் சுதேச மன்னர்கள் நிம்மதியுடனும் பாதுகாப்புடனும்
>  வாழலாம் என வெல்லஸ்லிப் பிரபு அறிவித்தார்.  ஆங்கிலேயர்களின் திட்டத்தை
> உடனடியாக ஹைதராபாத் நிஜாம் ஏற்றுக்கொண்டார்.  அவர் ஆங்கிலேயர்களின்
> படைச் செலவுக்கென, கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களை அளித்தார்.
> ‘கொடையாக அந்த மாவட்டங்களை  அளிக்கப்பட்டதால் அவை  கொடை மாவட்டங்கள் என்று
> அழைக்கப்பட்டன.  அயோத்தி நவாபும் ஆங்கிலேயரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
> அவர் படைச் செலவுக்கென ஆங்கிலேயர்களுக்கு கங்கை யமுனை பிரதேசங்களை அளித்தார்.
>   பீஷ்வா, கெய்க்வார் ஆகிய மன்னர்களும் அந்தத் திட்டத்திற்கு ,ஒப்புதல்
> அளித்தனர்.  ஆனால், திப்பு சுல்தானும் மற்ற மராத்தியத்   தலைவர்களும்
> வெல்லஸ்லியின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.  ஆகவே,
> வெல்லஸ்லி பிரபு திப்பு சுல்தானை ஒடுக்கிப் போடத் திட்டமிட்டாடார்.  1799-ஆம்
> ஆண்டு தனது படைகளுடன் திப்பு சுல்தானை ஸ்ரீரங்கப் பட்டனத்தில் எதிர்த்தார்.
> அந்தப் போர்   திப்பு சுல்தானுடன் ஆங்கிலேயர்கள் நடத்திய நான்காவது போர்
> ஆகும்.  திப்பு சுல்தான் வெள்ளையரை எதிர்த்துப்  போர்புரிந்து போர்
> களத்திலேயே    வீர மரணம் அடைந்தார்.  திப்பு சுல்தான் வீர சுவர்க்கம் அடைந்த
> பிறகு, மைசூர் ராஜ்ஜியத்தின் பெரும் பகுதியை   ஆங்கிலேயர்கள்  தன் வசப்
> படுத்திக்கொண்டனர். ஒரு கணிசமான பகுதியை ஹைதராபாத் நிஜாம்
> மேற்கொண்டுவிட்டார்.  இவ்வாறாக, தன்மானத்துடன் ஆங்கில ஏகாதி  பத்தியவாதிகளை
> எதிர்த்த ஒரு மாவீரனின் நாடு சின்னா பின்னமாக்கப்பட்டுவிட்டது.  *
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/368566205.201034.1663658784875%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/368566205.201034.1663658784875%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorahfVKVT4NWeEO-qNoM_zB%3Db_K%2BU9rFhg8Fn_XD9aMFw%40mail.gmail.com.

Reply via email to