I agree with you. V.Subramanian aum

On Tue, Sep 27, 2022, 9:02 AM Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:

> WRT the disease and its nagging pressures and the solutions to defy and
> come over-well it is encouraging as a panacea for many Thank u sir KR IRs
> 27922
>
> On Mon, 26 Sept 2022 at 21:59, subra manian <[email protected]> wrote:
>
>>
>> *தங்கள் தனி வாழ்க்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து
>> ஒளித்துக்கொள்ளவிரும்பும் மூவரின் குறிப்புகள்.. *
>> ஓம்.
>> தன்னைக் கடத்தல்.
>> ஆசிரியர் திரு ஜெயமோகன்.
>> முதல் பதிப்பு 2022 வெளியீடு: தன்னறம் நூல் வெளி,
>> குக்கூ காட்டுப்பள்ளி, புளியனூர் கிராமம்,
>> சிங்காரப் பேட்டை 635307- கிருஷ்ணகிரி மாவட்டம்
>>  பேச 9843870059
>> <[email protected]>
>> <w.w.w.thannaraam.in>. .
>>  அச்சாக்கம்: ஜோதி எண்டர்பிரைசஸ், சென்னை -5
>> நன்கொடை ரூ.160
>>  காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டே யிருக்கும் ‘டின்னிடஸ் ’என்னும் நோய்
>> கொண்ட ஒருவர்,. ’தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக’  மாறிக்கொண்டே இருக்கும்
>> நோய் கொண்ட ஒருவர் என இருவர் அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள்
>> சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு
>> உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள்.
>>  தங்கள் தனி வாழ்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து
>> ஒளித்துக் கொள்ள விரும்பும் மூவரின் குறிப்புகள் இதில் உள்ளன.
>> அவர்களைப் போன்ற பல்லாயிரவர் நம் சமூகத்தில் உண்டு. அவர்களின் உளவியலும்,
>> சிக்கல்களும் அவர்களின் சொற்கள் வழியாகவே பதிவாகி இருக்கின்றன.
>>   இந்நூல் வெவ்வேறு வகையில் வெளியே தயங்கி நின்றிருப்பவர்களுக்கு
>> தன்னம்பிக்கையை, ஊக்கத்தை அளிப்பதாக அமையும். ஏனென்றால் இது தன் எல்லையைக்
>> கடந்தவர்கள் மற்றும் கடக்க முற்படுபவர்களின் கதை.
>>  டின்னிடஸ்
>>
>>  அன்புள்ள ஜெ,
>> நம்முடைய சமூகத்தில் டின்னிடஸ் என்ற நோய் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக
>> இல்லை. நான் முதன் முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என் நண்பர்களிடம் கூறிய
>> போது, யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள  வில்லை. சிலர் சிரித்துக்கொண்டே
>> கேட்கவும் செய்தார்கள்.
>>
>> டின்னிடஸ் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். என்று நம்புகிறேன்.
>> இருபத்தி நான்கு மணி நேரமும் கூடவே வரும் அந்த சத்தத்தைத் தாங்கிக் கொள்ள
>> முடியாமல் அந்தப் பெண் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு
>> குழந்தைகள். தான் செத்தே ஆகவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு
>> விளக்கிவிட்டு இறந்திருக்கிறார். இதையெல்லாம் கேட்ட போது மிகவும் வருத்தமாக
>> இருந்தது. அந்தப் பெண்ணின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள
>> முடியுமா? என்று தெரியவில்லை.
>>
>> ஒரே வித்தியாசம் .அவர் சாவைத் தேர்ந்தெடுத்துவிட்டார்.   நான் வாழ்வைத்
>> தேர்ந்தெடுத்து  விட்டேன்.
>>
>> பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம் என்று ஒரு திரைப்
>> படத்தில் நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்குப் பேய் பற்றிய
>> பயமெல்லாம் இல்லை. ஆனால், இந்த டின்னிடஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க
>> உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த அரக்கன்
>> டின்னிடஸ், அத்துடனான என் அனுபவங்களை நிறைய விவரமாக உங்களைச் சந்திக்க
>> நேர்ந்தால் கூறுகிறேன். தூக்கம் வரும் போது தூங்க முடியாது என்பது போன்ற
>> கொடுமை எதுவுமே இருக்க முடியாது. எனக்குக் கேன்ஸர் பற்றியெல்லாம் தெரியாது.
>> ஆனால், இந்தச் சத்தத்தோடு போடும் யுத்தத்தைப் போன்ற கொடுமையான வலி வேறொன்று
>> இருக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய வலியைப்
>> புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொலியைப் பார்த்தாலே போதும்.
>> எப்படியோ டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய  கொடுங் கனவில் இருந்து என்னை மீட்டு
>> வெளியே கொண்டு வந்து விட்டேன். டின்னிட்ஸுக்குப் பல காரணங்கள். எனக்கு
>> வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்கப் பலமுறை  MRI  ஸ்கேன்கள்
>> எடுத்தாகிவிட்டது. எதை எதையோ வெல்லாம் முயன்று பார்த்து விட்டார்கள் இங்குள்ள
>> மருத்துவர்கள்.  எல்லாம் இயல்பாகவே இருக்கின்றன; நலமுடன் இருக்கிறேன்
>> என்கிறார்கள்.
>>
>> இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது.
>> ஆனால், மருத்துவர்கள் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. திறன்
>> மிகுந்தவர்கள். அதில் எதுவும் சொல்வதிற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப்
>> போல் செயற்படு  கின்றனர். மருத்துவர்கள் மட்டுமல்ல. பெரும்பாலான மற்றவர்களும்
>> தான். ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றன
>> என்பது உண்மைதான். ஆனால், நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதை விட
>> மிக மிக அதிகமாகவே இருக்கிறது.  Especially, human aspects.
>>
>>  டின்னிடஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்த போது, இந்தியாவிலுள்ள என்னுடைய
>> குடும்ப மருத்துவரை அழைத்தேன். அவரோ,’ அதெல்லாம் ஒண்ணுமில்லடா’  என்று
>> கூறியபோதே என் பாதிப் பிரச்சினை தீர்ந்துவிட்டது போல் இருந்தது.என் தந்தையார்
>> ஒரு யோகா தெரப்பிஸ்ட் என்பதால் அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து யோகா
>> செய்துவந்தேன். தீவிர உணவுக்கட்டுப்பாடு, எப்போதும் எதையாவது செய்துகொண்டு
>> சுறு சுறுப்பாக இருப்பது என்பது மட்டுமே ஒரே வழி என்று புரிந்தது.
>>
>> டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள்
>> இதற்கான தீர்வைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அமைதி வேண்டு  மென்
>> கிறார்கள். இவர்கள் சும்மாவே அமைதி விரும்பிகள்.  அர்த்தமற்ற அமைதியின் மீது
>> அப்படி என்ன காதலோ? ஆனால், அவர்கள் வேண்டும் அமைதிக்கு நிச்சயம் சாத்தியமில்லை
>> என்பதே உண்மை. எனவே தான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்  கொண்டேன்.
>> நண்பர்களாக்கிக் கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து  விட்டேன். அதன் மீது
>> தியானம் செய்ய ஆரம்பித்து  விட்டேன். இப்போது அதைக் கேட்காமலாக்கி விட்டேன்.
>> அது இருக்கிறது, ஆனால், இல்லை. ஏனெனில் கண்டுகொள்வதில்லை. மனதை வலிமையாக
>> ஆக்கிக் கொள்வது மட்டுமே ஒரே வழி.
>>
>> ஆனால், இவர்களுக்கு அதை எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை  தற்கொலை
>> செய்து கொள்வதை விட வேறு வழியே தெரியவில்லை என்று சொல்லிக்  கொண்டிருக்கும்
>> நண்பன் ஒருவனை, ’ஒரு முறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச்
>> சென்றுவா’ என்று தீர்வு சொல்வேன். இந்திய நகரங்களின் இரைச்சல் ஒருவேளை இதற்கு
>> ஒரு தீர்வாக அமைந்துவிடுமல்லவா? ஆனால், அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. என்
>> நண்பனின் சகோதரி டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று
>> கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணி நேரம்
>> பேசிகொண்  டிருந்தேன். அழுதுவிட்டாள்.
>>
>> இங்கிருக்கும் நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து
>> மீண்டுவந்துவிட்டதால் என்னைக் கடவுளைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். எனக்கு
>> என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னால் முடிந்த அத்தனையும் செய்து வருகிறேன்.
>> அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணி
>> நேரமும் மரம் வெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்க்கிறதாம்.
>>
>> ஒரு புறம் சாகத் துடிக்கும் நண்பர். இன்னொரு புறம் அவரது முடிவு சரி என்று
>> ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் Euthanasia  முடிவைப் பற்றிய
>> இந்தக் காணொளி.  இந்த நேர்காணலை அந்த பெண்மணி யூதனேசிய (கருணைக்கொலை என்கிற
>> வார்த்தை எனக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை)  செய்துகொள்வதற்குச்
>> சில வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளி வருவதற்கு
>> முன்பே அவர் இறந்துவிட்டார்.
>>
>> நான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம்
>> அனுமதிக்கிறது. உண்மையில் யுதேனிசியா பற்றிய என்னுடைய பார்வையே மாறிவிட்டது.
>>   ஒருவேளை நான் அவரிடம் பேசி இருக்கலாமோ அது அவருக்கு உதவியிருக்கும்மோ?
>> என்றெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் வந்து விழுகின்றன. உண்மையில் இதைப் பார்த்த அன்று
>> இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.
>>
>> எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும்
>> இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும்
>> வேண்டிக்கொள்கிறேன். இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி உங்களுக்குச் சொல்ல
>> வேண்டியதில்லை அவரைப் பற்றி யெல்லாம் கூறிவருகிறேன்.
>>
>> இருபத்தோரு வயதில் அவருக்கு 'Motor Neurone Disease' வந்து உடல் முழுவதும்
>> செயலிழந்து போய், அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தான் உயிர் வாழ்வார் என்று
>> மருத்து  வர்கள் கூறிக் கைவிரித்துவிட்டனர். ஆனால்,, ஸ்டீபன்  ஹாக்கிங் ஒரு
>> நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது கேட்டால் அவருடைய
>> வாழ்க்கையைத்தான் காட்டுவேன்.
>>
>> இன்றைக்கு அவருக்கு வயது எழுபத்திநான்கு. அவரால் பேசமுடியாது; நடக்க
>> முடியாது;  அவரால் அவரது உடலைக்  கொண்டு எதுவும் செய்யமுடியாது.அவருடைய வலது
>> பக்கக் கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டும் சற்றுச் செயல்படும். அதன்
>> மூலமாக அவர் தட்டச்சு செய்வதை, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டுப்
>> பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மற்றவர்களிடம் வாசித்துக்
>> காண்பிக்கும். அவரே அவருக்குப் பிரியமான குரலைத் தெரிவு செய்துள்ளார்.  இந்தக்
>> குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு. ஒருமுறை அவரிடம், எப்படி
>> இவ்வளவு நாள் இது போன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்? என்று கேட்டபோது, அவர்
>> கூறியது,”While there is life, there is hope " இந்த வரிகள் தான் எல்லா
>> மாயும்  இருந்திருக்கின்றன.
>>
>> ஹாக்கிங்கால் முடிந்திருக்கிறது. நானோ இப்போது டின்னிடஸ் நண்பனுடன்
>> கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த
>> யூதனேசியா எல்லாம் தேவையா? அதைப்பற்றி உங்கள் கருத்துக்களை அறிய
>> விரும்புகிறேன்.
>> நீண்ட கடிதத்திற்கு மன்னிக்கவும்.
>>  குழந்தைகளுக்கு என் அன்பு.
>>
>>                                        என்றென்றும் அன்புடன்
>>                                     மாதவன் இளங்கோ, பெல்ஜியம்
>>                                     [email protected]
>>
>> இன்னும் சில கடிதங்கள் வர  உள்ளன. தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். யாரோ
>> ஒரு அன்பர் பயனடைவார் என்று இதைச் செய்து கொண்டிருக்கிறேன். பதிப்புரிமை யை
>> இப்பகிர்வு பாதிக்காது என்று நம்புகிறேன்.
>> அன்புடன் வெ.சுப்பிரமணியன். ஓம்
>>
>>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsPnpMfMSwk3577YwTJMP562W5DZFHJ0bMcXhnOZJqLDQ%40mail.gmail.com.

Reply via email to