* <https://ta.quora.com/profile/Rajesh-Sathya-2>*
*This is sent to me from Quora: People do mistake me that I criticise Quora. But Quora man does it. Tamil knowing will find it interesting. English will some idea. * *KR IRs 19//20/2/23* *xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx* *RAJESH SATYA *வாழ்க்கை பள்ளியில் பயிலும் மாணவன் செப். 26 <https://ta.quora.com/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2/answers/387512093> * <https://ta.quora.com/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2>* *ஐயர், அய்யங்கார் போல பிராமணர்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன? <https://ta.quora.com/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2>* முதலில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஆண்கள் பெண்கள் என்று சொல்லுவார்கள். வேஷ்டி கட்டிக் கொண்டிருப்பவர் ஆண்! பெண்கள் மடிசார் கட்டுவார்கள்! ஹிந்து பேப்பரில் எழுதுபவர்கள் ஒரு பிரிவினர் என்றால், கோராவில் எழுதுபவர்கள் வேறொரு பிரிவு. ஹிந்து வில் எழுத Journalism படித்திருக்க வேண்டும். கம்யூனிசம் தெரிந்திருக்க வேண்டும். கோரா அப்படி இல்லை. அறிவு இருந்தால் போதும். ( இந்த கேள்வி அதற்குத்தான் சொல்லும் இந்த பதில், அறிவிற்கு பொருத்தமாக இருக்காது ) சங்கீதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் இங்கீதம் தெரிந்திருக்க வேண்டும். நான் கோரா பிரிவில் இருப்பதால், இந்த கேள்விக்கு கூட, என் சிற்றறிவுக்கு எட்டிய பதில் சொல்கிறேன். ஆண்கள் இரண்டு வகைப்படுவார்கள். என்னைப் போல் படிப்பை தவிர, விளையாட்டு சினிமா என்றெல்லாம் பொழுதை கழிப்பவர்கள், மார்க் வாங்குவார்கள், ஆனால் 80% மார்க் தான் வாங்குவார்கள். ( படிப்பதை விட்டு சினிமா பார்த்தால், பக்கத்து வீட்டு பங்கஜத்தை சைட் அடித்துக் கொண்டிருந்தால், எப்படி 100 மார்க் வரும்? அது புரியாமல் வீட்டில் திட்டுவார்கள்!) ஆனால் இரண்டாவது வகையினர், 99 % மார்க் வாங்குவார்கள். பெரும்பாலும் படிப்பாளிகள் பெயர் ஸ்ரீனிவாசன் என்று இருக்கும். (பெருமாள் பெயரை ஒருவன் வைத்துக் கொண்டால், அவன் அமெரிக்கா போய்விடுகிறான்!! எப்படி என்று தெரியவில்லை ?) நான் படிக்கும்போது என் கூட ரங்கராஜன் என்று ஒரு பையன் படித்தான். நான் ஐயர், அவன் அயங்கார்!! நான் கோராவில் NASA பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அவன் நாசாவில் வேலை பார்க்கிறான்! ஆனால் பெண்களில் இரண்டு வகை கிடையாது. பிராமண பெண்கள் ஒரே வகை!! 100 மார்க்குக்கு கீழே வாங்க மாட்டார்கள். வெளியே போகும் போது தண்ணி பாட்டில் உடன் செல்வார்கள். சினிமா பார்க்க மாட்டார்கள் ( ஆனால் மணிரத்னம் கமலஹாசன் படம் பார்ப்பார்கள் ) ஆனால் படித்த பிராமண பெண்களில் இரண்டு வகை உண்டு. தமிழ் தெரியாத பெண்கள், தமிழ் தெரிந்த பெண்கள். இதில் தமிழ் தெரியாத பெண்களுக்கு இளையராஜா பாட்டு பிடிக்காது. ரகுமான் பாட சொன்னால் சுருதி சுத்தமாக பாடுவார்கள். ஆனால் தமிழ் தெரிந்த பெண்கள், தமிழிலும் 100 மார்க் வாங்குவார்கள். எனக்கு தெரிந்து ஒரு தமிழ் பிராமண பெண், தமிழ் மூலம், தமிழ் முக்கிய பேப்பராக எடுத்து IAS பரிட்சை, Topper ஆக இந்தியாவிலேயே முதல் 100 மாணவிகளில் வந்தார். தமிழ் படித்தால், அதிலும் 100 மார்க் தான். என்னால் பெண்களுடன் போட்டி போடவே முடியவில்லை. சரி பெண்களுடன் படிப்பில் போட்டி போட முடியவில்லை என்று, நல்ல மார்க் வாங்கிய ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டேன். அது பெரிய வம்பாக போய்விட்டது! இன்று கூட நான் வீட்டில் பெஞ்ச் மேல ஏறி நிற்கவைக்கப்படுகிறேன். பெண்கள், ஒரு சிலருக்கு தான் மனைவியாக இருப்பார்கள். அது ஒரு பிரிவினர். நான் இரண்டாவது பிரிவு!! திருமணத்திற்கு பிறகு எனக்கு கிடைத்தது மனைவி அல்ல, ஒரு அற்புதமான ஆசிரியர்!! நான் இளமையில் சரியாக கல்வி கற்கவில்லை என்று இப்போது முதியோர் கல்வி எடுக்கிறார்கள்!! வாழ்க்கைப் பள்ளியில் பயிலும் மாணவன், என்று நான் சும்மா ரீல் விடவில்லை, பாடம் படிச்சாதான் சோறு! என் வாத்தியார் அடித்தார். பயங்கரமாக அடித்தார். என்னை கண்டித்தார். என்னிடம் உள்ள குறைகள் அனைத்தையும் கண்டுபிடித்தார். பிராமண பெண்களை கல்யாணம் செய்து கொண்டால் , நமக்கு ஒரு ஆசிரியர் போல் நடந்து கொள்வார்கள். அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். படிக்கவில்லை என்றால் பிராமண வீடுகளில் மதிக்கவே மாட்டார்கள். இப்போது கலாச்சாரம் கொஞ்சம் மாறி உள்ளது. பணம் இல்லை என்றால், யாருமே மதிக்க மாட்டார்கள். சொந்தக்காரர்கள் உங்கள் வீட்டுக்கு வர மாட்டார்கள். கல்யாண வீடுகளில், ஏழைகளுக்கு தனி மரியாதை!! பெரும்பாலும் பிராமணர்கள் உடை விஷயத்தில், இரண்டு வகைப்படுவார்கள். வேட்டி கட்டியவர்கள், pant போட்டவர்கள். Pant போட்டவர்கள், வெளிநாடு செல்லும் பொழுது, Coat Suit கூட போடுவார்கள்! ஆனால், coat suit போட்டவர்கள், ஓட்டு போட மாட்டார்கள். Democracy in India என்ற தலைப்பில், TED TALK ஆங்கிலத்தில் செய்வார்கள். நமக்கு ஒன்றுமே புரியாது!! Reservation அதாவது இட ஒதுக்கீடு என்பது, ஒரு கிருமி மாதிரி!! இந்தக் கிருமி பிராமண ஆண்களை மட்டும் தான் தாக்கும். பிராமண பெண்கள் 100 மார்க் வாங்கி விடுகிறார்கள். அதனால் அவர்கள் இட ஒதுக்கீட்டால் பாதிப்படைவதில்லை. ஆனால் பிராமண ஆண்கள் சிலர் ( என்னை போல் ), சரியாக படிக்காத காரணத்தால், 80 % போதும் என்று நிறுத்தி விடுகிறார்கள். இது மாதிரி, படிக்கிற காலத்தில் சினிமா டிராமா என்ற பொழுதை கழித்துவிட்டு, ஊரில் இருக்கும் ஒரு பெண் விடாமல் எல்லோரையும் சைட் அடித்து விட்டு, வாழ்க்கையை கோட்டை விட்டவர்கள் தான், கோராவில் எழுதுகிறார்கள். Be careful!! ஏய், யாரை சொல்லறே?? யார் அது?? கோராவில் எழுதுபவர்?? Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx Rajesh Sathya Student at Life School Sep. 26 Quora: Like Iyer and Iyengar, how many sects of Brahmins are there? Answer: First there are two categories. Men say women. The one who is tying the clothes is a man! Women will make madisar! If the writers of the Hindu paper are one sect, the writers of Quora are another. You should have studied Journalism to write in The Hindu. Communism should be known. Quora is not like that. Knowledge is enough. (This answer to this question is not relevant to knowledge) It is not necessary to know the Psalms. But English should be known. Since I am in the quora section, I will answer this question to the best of my knowledge as well. Men are of two types. People like me who spend their time in sports cinema apart from studies, will buy marks, but only 80% marks. (If you watch movies instead of studying, how can you get 100 marks if you are side-slapping Pankaj at next door? They will scold you at home without understandig it!) But the second category will get 99% marks. Most of the students name is Srinivasan. (If one takes the name Perumal, he goes to America!! Don't know how?) A boy named Rangarajan also read while I was reading. I am Iyer, he is Iyengar!! I am writing about NASA on Quora. He's working at NASA! But there are no two types of women. Brahmin women are the same type!! They will not buy below the 100 mark. They take water bottles with them when they go out. They won't watch movies (but they will watch Mani Ratnam Kamal Haasan movies) But there are two types of educated Brahmin women. Girls who don't know Tamil, girls who know Tamil. Women who don't know Tamil don't like Ilayaraja songs. If Raghuman asks them to sing, they will sing with clean pitch. But girls who know Tamil will get 100 marks in Tamil too. I know a Tamil Brahmin girl who took Tamil as the main paper in the IAS exam and became a topper in the top 100 students in India through Tamil. If you read Tamil, it will be 100 marks. I could never compete with girls. Well, I married a girl who got good marks because I couldn't compete with girls in studies. It's gone with great fanfare! Even today I am made to stand on the bench at home. Women are the wives of only a few. It is a sect. I am the second division!! What I got after marriage was not a wife but a wonderful teacher!! Now the elders are taking education that I was not educated properly in my youth!! A student in the school of life. My father beat me. He was terribly beaten. He scolded me. He found all my flaws. If we marry Brahmin women, they will act like a teacher to us. All of that has a payoff. If you are not educated, you will not be respected in Brahmin houses. Now the culture has changed a bit. If there is no money, no one will respect you. The natives will not come to your house. In marriage houses, special respect for the poor!! Mostly Brahmins fall into two categories when it comes to dress. Those who wear vests and pants. Those who wear pants will also wear a coat suit when they go abroad! But those who wear coat suits will not vote. He will give a TED TALK in English on the topic Democracy in India. We don't understand anything!! Reservation is like a germ!! This germ only affects Brahmin men. Brahmin women buy 100 marks. So they are not affected by reservation. But some Brahmin men (like me), due to lack of education, stop at 80%. For example, people who have spent time in cinema dramas during their studies, left everyone aside and left their lives behind, except for a girl in the town, write on Quora. Be careful!! Hey, who are you talking about?? who is that?? A writer on Quora?? KR IRS 19/20//2//23 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooCpPsWeXK6LKGmb5JBoa6Lc5WWac0H-OCbpfXb94ge7Q%40mail.gmail.com.
