ஆண் மூளைக்கும் பெண் மூளைக்கும் வேறுபாடுகள் உண்டு!
மனிதர்களின் மரபணுவில் 99.9 விழுக்காடு அனைவருக்கும் பொதுவானது, அப்படியென்றால்
0.1 விழுக்காடு மட்டுமே ஒருவரின் தனித்துவத்தை நிர்ணயிக்கிறது. அந்தவகையில்
பார்க்கும்போது ஆண்களும் - பெண்களும் உடலளவில் மட்டுமே வேறுபட்டவர்கள் என்று
பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும்
வேறுபடுகிறது. ஆண்களின் மூளையும், பெண்களின் மூளையும் வெவ்வேறு கோணங்களில்
செயலாற்றுகிறது என்பதே மருத்துவ உலகத்தின் கூற்று.
ஒரு பெண், ஆண் போல் வேலை செய்வது கடினம், அதேபோல் ஓர் ஆணால், பெண்ணைப்போல்
செயல்படுவதும் கடினம். இயற்கையின் படைப்பில் பெண் என்பவள் அனைவரையும்
அரவணைத்துச் செல்லக்கூடியவள். ஆண் என்பவன் அளவாகப் பேசிக் காரியத்தைச் செய்து
முடிப்பவன். இதற்குக் காரணம் ஆண் மூளையும், பெண் மூளையும் அமைப்பிலும்,
செயல்திறனிலும்
வேறுபடுவதே ஆகும். என்ன அந்த வேறுபாடு, இப்பகுதியில் பார்ப்போமா?
யார் அறிவானவர்கள்?
பெண்ணின் மூளையைவிட ஆணின் மூளை 10 விழுக்காடு (பெண் மூளை 1350கி, ஆண் மூளை 1450கி)
பெரியதாக உள்ளது. அதாவது ஆண் மூளை, பெண் மூளையைவிட 100-150 கிராம் எடை அதிகம்
உள்ளது. அதற்காக ஆண், பெண்ணைவிட அறிவானவன் என்று நீங்கள் யாரும் தப்புக்
கணக்குப் போட்டுவிட வேண்டாம். அறிவுத்திறன் என்பது மூளையில் உள்ள
மேடுபள்ளங்களைப் (Sulci and Gyri) பொறுத்துத்தான் உள்ளது. நாம் நம் மூளையின்
100 விழுக்காட்டில் 5 முதல் -10 விழுக்காடு வரை மட்டுமே
உபயோகப்படுத்துகின்றோம். ஒவ்வொருவரும் தன் மூளையில் எவ்வளவு விழுக்காடுகள்
பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன.
சிலர் பிறவியிலேயே புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, இருபாலரில்
எவர் வேண்டுமானாலும் அறிவாளிகளாக இருக்கலாம்.
பெண் ஏன் அதிகம் பேசுகிறாள்?
பெண்களால் ஒரு நாளைக்கு 40,0,0-6,000 வார்த்தைகளை எளிதில் பேச முடியும்.
ஆனால், ஆண்களால் ஒரு நாளைக்கு 20,0,0-4,000 சொற்களே பேச முடியும். பேச்சுத்
திறனுக்கான இடப்பக்க மூளையில் உள்ள பகுதி பெண்ணுக்கு நன்கு வளர்ச்சி
அடைந்துள்ளதே இதற்குக் காரணம். ஆனால், ஓர் ஆண் அளவாகத்தான் பேசுவான், எல்லாப்
பெண்களும் கண்டிப்பாக அதிகமாகத்தான் பேசுவார்கள் என்று 100 விழுக்காடு கூறுவது
கடினம்தான். விதிவிலக்கு என்பது இதற்கும் பொருந்தும்.
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள் ஆண்களா? பெண்களா?
நம் வலப்பக்க அரைக்கோளம் இடப்பக்க உடலையும், இடப்பக்க அரைக்கோளம் வலப்பக்க
உடலையும் இயக்குகிறது. இந்த இரண்டு அரைக்கோளங்களையும் இணைப்பது கார்பஸ் கலோசம்
(Corpus Colosum) எனப்படும் கமிசுரல் ஃபைபர் (Commissural Fiber). இந்த ஃபைபர்
ஆண்களைவிடப் பெண்களுக்கு 30 விழுக்காடு அதிகமாக இருக்கும். இதனால்தான் ஒரு
பெண் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறனைப் பெற்றிருக்கிறாள். ஓர்
ஆணால் ஒரே நேரத்தில் ஒரு வேலையைத்தான் முழுக்கவனத்துடன் திறம்படச்
செய்யமுடியும். பொதுவாக ஆண்கள், குறிபிட்ட ஒரு பணியை மையமாகக் கொண்ட வேலைகளில்
(பொற்கொல்லர்) சிறந்து விளங்குகிறார்கள். ஒரு வேலையை இரு பாலரும் செய்கையில்
இருவருக்கும் மூளையில் எட்டு பகுதிகள் வேலை செய்யும். எந்த எட்டுப் பகுதிகள்
என்பது இருவருக்கும் மாறுபடுகிறது.
பெண்கள் சிக்கல்களை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?
பெண்களின் மூளையில் உள்ள ப்ரீஃப்ரான்டல், ஆர்பிடோ ஃப்ரான்டல், சுப்பீரியர்
டெம்போரல், லேட்டரல் பரைட்டல் கார்டெக்ஸ் (Frontal, Orbito frontal, Superior
Temporal, Lateral Parietal Cortex) மற்றும் இன்சுலா போன்ற பகுதிகள்
ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்றுப் பெரிய அளவில் உள்ளது. மேலும் மூளையில் உள்ள
ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவுடன் இணைந்திருக்கும் விகிதம் பெண்களுக்கு 30
விழுக்காடு அதிகம், எனவேதான் பெண்கள் ஒரு செயலைப் பல கோணங்களில் ஆராய்ந்து
பார்த்துச் சிந்திக்கக் கூடியவர்கள், அதனால் சில நேரங்களில் சிக்கல்களைப்
பெரிதாக்கிவிடுகிறார்கள். சிக்கல்கள் என்று வரும்போது, பெண்கள் அவை
எப்படி, எங்கிருந்து
வந்தன? என்று சிந்திப்பார்களே தவிர அதற்கு என்ன தீர்வு? என்று சிந்திக்க
மாட்டார்கள். ஆனால், ஆண்கள் அதற்கான தீர்வை எளிதில் கண்டுபிடித்து
விடுவார்கள். ஆண்களுக்குச் சட்டென முடிவெடுக்கும் திறன் பெண்களைவிட அதிகம்.
வாகனம் ஓட்டுவதில் வல்லவர்கள் ஆண்களே ஏன்?
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஆண்களால் எளிதில் சென்று
வரமுடியும். இதற்கான இடம் மூளையில் பரைட்டல் (Parietal) பகுதியில் உள்ளது, இந்தப்
பகுதி இடங்களையும், பாதைகளையும் நினைவில் வைத்துக் கொள்வதற்கான பகுதியாகும்.
ஆண்களுக்குப் பெண்களைவிட இந்தப்பகுதி நன்கு வளர்ந்துள்ளதுதான் இதற்குக்
காரணம். அதனால் பெண்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருவது என்பது ஆண்களைப்போல்
எளிதான செயல் அல்ல.
ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் அதிகநேரம் எடுத்துக்கொள்கிறார்கள்?
கண்களில் கோன்ஸ் (Cones) எனப்படும் ஒரு அணு ரெட்டினாவில் உள்ளது. இது
ஆண்களைவிட 30 விழுக்காடு அதிகமாகப் பெண்களுக்கு உள்ளதால், ஆண்களைவிடப்
பெண்களால் வர்ணங்களை எளிதில் பிரித்தறிய முடியும். எனவேதான் நிறங்களில் உள்ள
சிறிய மாறுதல்களைக் கண்டு பிடிப்பதில் மிகவும் சிறந்தவர்களாகப் பெண்கள்
இருக்கிறார்கள். அதனால் தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் அதிக நேரம்
எடுத்துக் கொள்கிறார்கள்.
வாழ்க்கைத் துணையை ஆண்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?
ஆண்களின் மூளை அமைப்பு, கண்களின் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிறது.
எனவேதான் ஆண்கள் அழகான பெண்களையே வாழ்க்கைத் துணையாக ஏற்க ஆசைபடுகிறார்கள்.
ஆனால் பெண்களுக்கோ காட்சிகளினால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, மனம் விட்டுப்
பேசுவதினாலும், நன்கு பேசும் ஆண்களினாலும் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது.
அதனாலேயே ஓயாது பேசிக்கொண்டு இருக்கும் ஆண்களைப் பெண்களுக்கு அதிகம்
பிடிக்கிறது. இதற்கு ஆண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பெண்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
பெண்களின் மூளையில் அதிக கிரேமேட்டர் (Graymatter) இருப்பதற்கான சான்றுகள்
உள்ளன. கிரேமேட்டரில் உள்ள நரம்பணுக்கள் உடல் இயக்கத்திற்கானவை, மேலும் இது
தசைக் கட்டுப்பாடு, ஐம்புலன்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய மூளையின்
பகுதியாகவும் இருக்கிறது. மேலும் மூளைக்குள் உள்ள தொடர்புகளை ஆய்வு
செய்யும்போது, பெண்கள் வலுவான இணைப்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது,
இது சிறந்த உள்ளுணர்வு, சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை எடுப்பதற்கு
வழிவகுக்குகிறது. எனவேதான் பெண்கள் எந்த வேலை செய்தாலும் உணர்வுப்பூர்வமாகச்
செய்ய முயற்சிப்பார்கள். பிறந்த தினம், திருமண நாள் ஆகியவற்றை நன்கு நினைவில்
வைத்திருப்பார்கள். அவற்றைக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும்.
மூளை வேதியியலில் ஆண், பெண் வேறுபாடு உள்ளதா?
மூளையின் செயல்பாடு வேதியியல் பொருட்களைப் பொறுத்துத்தான் உள்ளது. ஆண்கள்
மற்றும் பெண்களுக்கு வெவ்வேறு மூளை வேதியியல் பொருட்கள் உள்ளன எனக்
கண்டறியப்பட்டுள்ளது. இரண்டும் ஒரே நரம்பியல் இரசாயனங்களை செயலாக்கும்போது அவை
வேறுவிதமாக செயலாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, செரோடோனின் மகிழ்ச்சி மற்றும்
மனச்சோர்வுடன் தொடர்புடையது. இது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒரே மாதிரியாக
செயல்படுவது இல்லை. அதனால்தான் ஆண்களைவிட பெண்கள் கவலை மற்றும் மனச்சோர்வுக்கு
அடிக்கடி ஆளாகிறார்கள். இதற்கு மூளைவேதியியல் செயல் திறனில் உள்ள மாற்றங்களே
காரணம்.
இப்படி இருபாலருக்கும் மூளை வித்தியாசப்படும் காரணத்தால், இருவரும் தங்களை
முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும்
மூளையின் செயல்திறனில் பல முதன்மையான வேறுபாடுகள் உள்ளன என்பதைப் புரிந்து
கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்
என்றே நினைக்கிறேன்.
- மரு.அ.வேணி, மூளை நரம்பியல் நிபுணர்
Male brain and female brain are different!
99.9 percent of the human genome is common to all, so only 0.1 percent
determines a person's uniqueness. Looking at it that way, many people think
that men and women are different only physically. But, not only the body
but also the brain is different for both of them. The medical world claims
that male and female brains work differently.
It is difficult for a woman to act like a man, and it is also difficult for
a man to act like a woman. In the creation of nature, woman is the one who
can embrace everyone. A man is a man who speaks volumes and gets things
done. This is because male and female brains differ in structure and
function. What is that difference, let's see in this area?
Who is wise?
The male brain is 10 percent larger than the female brain (female brain
1350 kg, male brain 1450 kg). That means the male brain weighs 100-150
grams more than the female brain. For that reason, don't make the mistake
of thinking that men are more intelligent than women. Intelligence depends
on sulci and gyri in the brain. We only use 5 to -10 percent of our 100
percent brain. Research is underway to determine what percentage of the
brain each person uses. Some people are born intelligent. Therefore, anyone
of both sexes can be intelligent.
Why does the girl talk more?
Women can easily speak 40,000-6,000 words per day. But men can only
speak 20,000-4,000 words per day. This is because the left side of the
brain for speech is better developed in women. But it is difficult to say
100 percent that a man will talk only moderately and all women will
definitely talk more. Exception applies to this as well.
Are men multitaskers? Women?
Our right hemisphere controls the left side of the body and the left
hemisphere controls the right side of the body. Connecting these two
hemispheres is a commissural fiber called Corpus Colosum. Women have 30
percent more of this fiber than men. This is why a woman has the ability to
multitask. A man can effectively do only one job at a time. Men generally
excel in jobs that focus on a specific task (goldsmithing). Eight areas of
the brain work in both sexes when doing a job. Which eight parts are
different for both.
Why do women exaggerate problems?
Women's brain regions such as the prefrontal, orbito frontal, superior
temporal, lateral parietal cortex (Frontal, Orbito frontal, Superior
Temporal, Lateral Parietal Cortex) and insula are slightly larger in women
than in men. And the rate at which one neuron connects to another neuron in
the brain is 30 percent higher in women, which is why women are more likely
to analyze an action from multiple angles and sometimes magnify problems.
When it comes to complications, how and where do women get them? What is
the solution to that except thinking that? They will not think that. But,
men can easily find a solution for that. Males have more ability to make
quick decisions than females.
Why are men good at driving?
Men can easily move from one place to another. The
location for this is in the parietal region of the brain, which is the area
responsible for remembering places and routes. This is because this region
is more developed in males than in females. So women going to publications
is not an easy task like men.
Why do women take so much time to choose clothes?
In the eyes, there is a nucleus called cones in the retina. As it is 30
percent more in women than men, women can distinguish colors more easily
than men. That's why women are so good at spotting subtle changes in color.
That is why women take more time in choosing clothes.
How do men choose a life partner?
Men's brain structure places emphasis on visual cues. That's why men
want to marry beautiful women. But women get more pleasure from
heart-to-heart talk and well-spoken men than from visuals. That's why women
like men who talk endlessly. This does not require men to be handsome.
Why is the emphasis on women's feelings?
There is evidence that women have more gray matter in their brains. Neurons
in the gyrus are for body movement, and it's also the part of the brain
associated with muscle control, senses, and emotions. And when examining
the connections within the brain, women have been found to have stronger
connections, leading to better intuition, thinking, analysis and
decision-making. That's why women try to do whatever work they do
emotionally. They remember birthdays and weddings very well. There will be
a lot of desire to celebrate them.
Are there male and female differences in brain chemistry?
Brain function depends on chemical substances. Men and women have been
found to have different brain chemicals. While both process the same
neurochemicals they act differently. For example, serotonin is associated
with happiness and depression. It does not work the same for women and men.
That is why women suffer from anxiety and depression more often than men.
This is due to changes in brain chemistry.
Because the brains of both sexes are different, both of them stumble
without being able to fully understand themselves. I think that if we
understand that there are many fundamental differences in brain function
between men and women, we can end many problems in the family.
- Maru. A. Veni, brain neurologist KR IRS 290423
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopz1sEO-oO8%2B2V9EDXuam0qD6LsZZvuBGBOUw_i547sYA%40mail.gmail.com.