*எந்தை தந்தை தந்தைக்கே * *'நாள் என் செயும்' என்று துவங்கும் பாடல் அருணகிரிநாதருடையது, கந்தர் அலங்காரத்தில் * *வருகிறது என்று அன்பர்கள் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. **அதில் ஒரு * *அன்பர், இந்தத் தவறினால் சுஜாதாவுக்குத் தமிழே தெரியவில்லை என்று **கண்டுபிடித்து, என் * *மேல் உள்ள வெறுப்பைக் கொட்டியிருந்தார். நாம் ஒருவரைத் **திட்டி எழுதும்போது, நம்மை நாமே * *அற்பமாக்கிக் கொச்சைப்படுத்திக் கொள்கிறோம் **என்பதை அறிந்தால்தான் வார்த்தைகளில் * *கண்ணியம் வரும். எனக்குத் **தமிழ் தெரியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க மற்றவர்கள் * *இருக்கிறார்கள்.*
*திருவாய்மொழியில் இராப்பத்து உற்சவத்தில் 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி'* *என்று துவங்கும் பாசுரங்கள் சேவிக்கும்போது, நான் ஒருமுறை திருவரங்கத்தில் இருந்தேன்.* *அந்தப் பாசுரம் இப்போது நினைக்கத் தக்கது.* *ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி,* *வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -* *தெழி குரல் அருவித் திருவேங்கடத்து * *எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.* *'உரத்து ஒலிக்கும் அருவிகள்கொண்ட திருவேங்கடத்துள் உறையும் எங்கள் தந்தைக்குத் * *தந்தைக்கும் தந்தையான திருமாலுக்கு, எல்லாக் காலங்களிலும் கூடவே இருந்து குற்றமற்ற * *சேவை செய்ய வேண்டும்' என்பது ஆழ்வாரின் விருப்பம்.* *திருமாலைத் தமது தந்தைக்குத் தந்தை என்று கூறிக்கொள்வதில் ஒரு அன்யோன்யம், நெருக்கம் * *தெரிகிறதல்லவா! முன்னோர்களின் முன்னோரில் முதன்மையானவராகத் திருமாலைக் * *கருதுவது வைணவ வழக்கம். நம்மாழ்வார் திருவாய்மொழியில் உள்ள இந்தப் பத்துப் * *பாசுரங்களிலும் திருவேங்கடமுடையானைத் திகட்டத் திகட்டப் பாடுகிறார்.* *'அண்ணல், மாயன், அணிகொள் செந்தாமரைக் கண்ணன்,செங்கனிவாய்க் கருமாணிக்கம்,* *சோதி ஆகி எல்லா உலகம் தொழும் ஆதி மூர்த்தி' இப்படியெல்லாம் அழைத்துத் தொழுதால்,* *நம் வினைகள் அனைத்தும் ஓயும் என்கிறார்.* *திருவேங்கடத்தை எல்லா ஆழ்வார்களும் பாடியுள்ள இருநூற்றிரண்டுக்கு மேற்பட்ட பாடல்களில்,* *நம்மாழ்வாரின் ஐம்பத்திரண்டு பாடல்களும் அற்புதமானவை. * *- சுஜாதா * *************************************************** ancestral The song that starts with 'Naal En Cheyum' is by Arunagirinathar, in Kandar Akaraman Dear friends, mentioned that it was wrong. . Thanks to them. One of them Anbar, finding out that Sujata doesn't know Tamil because of this mistake, He had poured out his hatred. When we criticize someone, we write about ourselves In words only when we know that we trivialize and denigrate Dignity will stay. Let, Others decide whether I know Tamil or not At Tiruvaimozhi's night festival, 'Forgiveness is with you forever' I was once in Thiruvaranga when the Pasurams beginning with that were being served. That verse is worth thinking about now. Forgiveness with all time in the end, We must enslave the slippery leaf - Thiruvengadatu with a beautiful voice Get up and find out, father. 'To our father who is frozen in Tiruvenkata with roaring waterfalls For Father and Father Thirumal, together in all ages and innocent To serve' is Alvar's wish. There is an intimacy, a closeness in claiming Tirumal as father to his father Don't you know? Tirumal is the first among ancestors It is a Vaishnava custom to assume. Nammalwar Tiruvaimozhi is Pattu He also sings Thiruvenkatamudayan in pasuras. 'Annal, Mayan, wear it to Sentamarai Kannan, Senganivaik Karumanikam, Adi Murthy, who becomes a sodhi and all the world worships him. He says that all our actions will cease. Among the more than two hundred and two songs sung by all the Alvars in Thiruvenkadam, Nammalwar's fifty two songs are wonderful.- Sujata *xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx* KR திகட்ட பாடுதலும், திட்டிப் படுத்தலும், கொன்றை வாய் மொழியோ, கொச்சை வாய் மொழியோ, யாம் அறியோம் பராபரமே. சுஜாதா நக்கலாக எழுதும் பொழுது , அது கொச்சைப் படுத்துதல் இல்லை போலும். மன்னிப்போம் மறப்போம் என்பதும் இன்னொரு எதுகை தானே? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? பக்தி என்பது அன்பின் வெளிப்பாடே. பக்தி வழி இலக்கியம் வளர்த்தவர் , தமிழன் அல்லாது போனதே, மற்றுமொரு, கொச்சைப் படுத்துதல் தானே?. கி ராஜாராம் இ வ ப. 2523 On Tue, 2 May 2023 at 07:25, Chittanandam V R <[email protected]> wrote: > > > *எந்தை தந்தை தந்தைக்கே * > > *'நாள் என் செயும்' என்று துவங்கும் பாடல் அருணகிரிநாதருடையது, கந்தர் > அலங்காரத்தில் * > *வருகிறது என்று அன்பர்கள் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு > நன்றி. **அதில் ஒரு * > *அன்பர், இந்தத் தவறினால் சுஜாதாவுக்குத் தமிழே தெரியவில்லை என்று > **கண்டுபிடித்து, > என் * > *மேல் உள்ள வெறுப்பைக் கொட்டியிருந்தார். நாம் ஒருவரைத் **திட்டி > எழுதும்போது, நம்மை நாமே * > *அற்பமாக்கிக் கொச்சைப்படுத்திக் கொள்கிறோம் **என்பதை அறிந்தால்தான் > வார்த்தைகளில் * > *கண்ணியம் வரும். எனக்குத் **தமிழ் தெரியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க > மற்றவர்கள் * > *இருக்கிறார்கள்.* > > *திருவாய்மொழியில் இராப்பத்து உற்சவத்தில் 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் > மன்னி'* > *என்று துவங்கும் பாசுரங்கள் சேவிக்கும்போது, நான் ஒருமுறை திருவரங்கத்தில் > இருந்தேன்.* > *அந்தப் பாசுரம் இப்போது நினைக்கத் தக்கது.* > > *ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி,* > *வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -* > *தெழி குரல் அருவித் திருவேங்கடத்து * > *எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.* > > *'உரத்து ஒலிக்கும் அருவிகள்கொண்ட திருவேங்கடத்துள் உறையும் எங்கள் > தந்தைக்குத் * > *தந்தைக்கும் தந்தையான திருமாலுக்கு, எல்லாக் காலங்களிலும் கூடவே இருந்து > குற்றமற்ற * > *சேவை செய்ய வேண்டும்' என்பது ஆழ்வாரின் விருப்பம்.* > > *திருமாலைத் தமது தந்தைக்குத் தந்தை என்று கூறிக்கொள்வதில் ஒரு அன்யோன்யம், > நெருக்கம் * > *தெரிகிறதல்லவா! முன்னோர்களின் முன்னோரில் முதன்மையானவராகத் திருமாலைக் * > *கருதுவது வைணவ வழக்கம். நம்மாழ்வார் திருவாய்மொழியில் உள்ள இந்தப் பத்துப் * > *பாசுரங்களிலும் திருவேங்கடமுடையானைத் திகட்டத் திகட்டப் பாடுகிறார்.* > > *'அண்ணல், மாயன், அணிகொள் செந்தாமரைக் கண்ணன்,செங்கனிவாய்க் கருமாணிக்கம்,* > *சோதி ஆகி எல்லா உலகம் தொழும் ஆதி மூர்த்தி' இப்படியெல்லாம் அழைத்துத் > தொழுதால்,* > *நம் வினைகள் அனைத்தும் ஓயும் என்கிறார்.* > > *திருவேங்கடத்தை எல்லா ஆழ்வார்களும் பாடியுள்ள இருநூற்றிரண்டுக்கு மேற்பட்ட > பாடல்களில்,* > *நம்மாழ்வாரின் ஐம்பத்திரண்டு பாடல்களும் அற்புதமானவை. * > > *- சுஜாதா * > > *************************************************** > > *சித்தானந்தம் * > > > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoozA5PtS8bETw1zzgA%2B8u0%2BX9OX%2BdTndfskbztRwmuN9Q%40mail.gmail.com.
