*திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −1*
<https://vaaranamaayiramsoozha.blogspot.com/2021/12/1.html>

* பத்மா கோபால்  *


*தங்களுடன் ஒரு நிமிடம்...*

*நாம் அனைவருமே "திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியம்" என்று கொண்டாடப்படுகின்ற
திருக்கோளூர் பெண்பிள்ளையின் எண்பத்தியோரு வார்த்தைகளையும் அந்த ஒவ்வொரு
வார்த்தையிலும் ஒளிந்துள்ள நிகழ்வுகளையும் நிச்சயம் அறிந்திருப்போம்..*

*இவ்வார்த்தைகளை ஊன்றிப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும், இதுபோல இன்னும்
எத்தனையோ ஆன்மீக நிகழ்வுகள் மனதில் நிச்சயம் உதயமாகியிருக்கும்!*

*ஆனால், அது அப்பொழுது தோன்றி மறைகின்ற மின்னலைப் போல, சிறிது
நேரத்திற்கெல்லாம் நமது சிந்தையை விட்டு மொத்தமாய் நீங்கியிருக்கும்...*

*அவற்றை எல்லாம் நாமும் ஏடுபடுத்தி இருப்போமானால், அது இனி வருகின்ற
சந்ததியினருக்கு ஒரு ஆன்மீக விருந்தாகவே அமைந்திருக்கும்!..*


*....அப்படிப் பொறுப்புணர்ந்து, பின் சந்ததியினருக்காகச் செயலாற்றியவர்தான்,
நாம் தற்பொழுது காணப் போகிற "திருவல்லிக்கேணி பெண்பிள்ளை" என்பவர்..*

*இவரின் இயற்பெயர் ரங்கநாயகி என்பதாகும்..*

*இவர் திருவல்லிக்கேணியில் ஒரு ஆசார அனுஷ்டானங்கள் நிறைந்த குடும்பத்தில்
ஶ்ரீமான் ஶ்ரீநிவாஸாசாரியர் என்கிற மஹாவித்வானுக்கு மூத்த குமாரத்தியாகப்
பிறந்தவர்..*

*அக்காலத்தில் ஆரம்பப் பள்ளிக்கு மேல் அவரைப் படிக்க வைக்கவில்லை..*

*சிறுவயதிலேயே இவரைச் சிங்கப்பெருமாள் கோயிலை அடுத்த வெங்கடாபுரம் என்கிற
கிராமத்தில் வசித்து வந்த ஒரு ஆசாரசீலருக்குத் திருமணம் செய்து தந்துவிட, அவர்
அங்கேயே குடும்பம் நடத்தி வந்தார்..*

*மஹாவித்வான் உடைய பெண்ணாகிய படியால், இவருக்கு ஆன்மீக நூல்களை வாசிப்பதில்
நிறையவும் ஆர்வம் இருந்தது..*

*தமது ஓய்வு நேரத்தில், இது போன்று ஸத்விஷயங்களைப் படித்து தமது அறிவையும்,
பக்தியையும் வளர்த்து கொண்ட இவர், அக்காலத்திலேயே ஆன்மீகப் பத்திரிகைகளில்
விஷயதானம் செய்திருக்கிறார்...*

*அதுவுமன்றி, திருக்கோளுர் பெண்பிள்ளையின் வார்த்தைகள் இவரைப் பெரிதும்
பாதித்தனாலோ என்னவோ, தாமும் அதுபோன்ற நூற்றெட்டு வார்த்தைகளைத் தொகுத்து,
"திருவல்லிக்கேணி அம்மாள் வார்த்தை" என்று தலைப்பிட்டு ஒரு நூலாகவே எழுதி
வைத்துள்ளார்...*

*இதில் மொத்தம் நூற்றெட்டு வாக்கியங்கள் இருக்கின்றன..*

*ஒவ்வொன்றும் ஒரு ரத்தினமாய் ஜ்வலிக்கிறது..*


*சில நாட்களுக்கு, இங்கே திருவல்லிக்கேணி அம்மாளின் வார்த்தைகளில் ஒரு
சிலவற்றையேனும், அடியேன் அறிந்த வரையில் விளக்கத்தோடு தருவதற்கு
ஆசைப்படுகிறேன்...*

*தங்களிடமிருந்து அதற்கான வரவேற்பு இருக்குமா?...*

*பத்மா கோபால்*

🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


*Selections from Upanyasams Part 51 Thiruvallikeni PeN Rahasyam by
VeLukkudi Sri Krishnan Swami - YouTube*
<https://www.youtube.com/watch?v=HDBHab6LV6w>

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 *Vanakkam Subbu*

 [image:
zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BozXSVQDpm%3DxJ6DoPZfxGnx_ogbsQFS6x8OchkcrXQg%2BA%40mail.gmail.com.

Reply via email to