ஐந்தாம் திருமுறை
பாடல் எண் : 1

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.
082 திருவான்மியூர்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நாக பாசம் பிணித்தது போன வாறும் நீ, அமா நினையாய்! மாள நினைத்தியோ! நெறியிலா
ரால் ஆயமா மாயம்; ஒன்று அஞ்சலை அன்னம் அன்னாய்!” என்றும், 'கண்ட அக்கனவும்,
பெற்ற நிமித்தமும், நினது கற்பும் தண்டவாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம்
தாங்கும் அண்டர் நாயகன் தன்வீரத் தன்மையும், அயர்த்தாய் போலும் புண்ட
ரீகற்கும் உண்டோ இறுதி, இப்புலையர்க்கு அல்லால்' என்றும், 'மாருதிக்கு இல்லை
அன்றே மங்கை நின் வரத்தினாலே ஆருயிர் நீங்கல்; நின்பால் கற்புக்கும்
அழிவுண்டாமோ? சீரியது அன்று இது ஒன்றும்; திசை முகன் படையின் செய்கை; பேரும்
இப்பொழுதே, தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ?” என்றும் சீதையின் கற்பின்
வலிமையை எடுத்துக் கூறினாள் திரிசடை என்னும் நல்லாள். திரிசடையின் ஆறுதல்
மொழிகளைக் கேட்டுச் சீதை சற்று அமைதியானாள். மாயச் சீதை அனுமன் வடதுருவம்
சென்று சஞ்சீவி மலையை எடுத்து வந்தான். மாண்டவர் அனைவரும் உயிர் பெற்று
எழுந்தனர்.  KR IRS 13 5 23

On Sat, 13 May 2023 at 07:46, Chittanandam V R <[email protected]>
wrote:

>
> மறைந்திருந்து காட்டும் கம்பன் (1) - அந்தமான் தமிழ்நெஞ்சன்
>
> கம்பன் தனது 10000 பாடல்களில் கம்பராமாயண காப்பியம் படைத்துள்ளார். ஒரு சில
> கதைப் பாத்திரங்களையே அடிக்கடி சுட்டிக் காட்ட வேண்டிய சூழல். கம்பன்
> அச்சிக்கலை எளிதாக கையாள்கிறார். பெயரினை அடிக்கடி குறிப்பிடாமல், மறைத்து
> அவர்களின் குணங்கள் அல்லது பொருள்கள் பற்றி சொல்லவிழைகிறார்.
>
> மறைந்திருந்து காட்டிய கம்பன் பெயர்களை, கொஞ்சம் நாமும் தினமும்
> ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா?
>
> இன்று....
>
>  'அண்டர் நாயகன் அருள் தூதன் யான்' என்பது கம்பன் வரிகள். அண்டர் நாயகன்
> அருள் பெற்ற தூதன் யான் என்று சீதையிடம் அனுமன் அறிமுகம் செய்து கொள்ளும் இடம்
> இது.
>
> அண்டர் நாயகன் என்றால் தேவர்களின் தலைவன்.
> இராமனைத்தான் இப்படி கம்பன் சொல்கிறார்.
>
> இதோ முழுப் பாடல்.
>
> *கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;*
> *கொண்டனன் துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,*
> *'அண்டர் நாயகன் அருள் தூதன் யான்' எனா,*
> *தொண்டை வாய் மயிலினைத் தொழுது,தோன்றினான்.*
>
> [அனுமன்பிராட்டியைப் பார்த்தான் ; பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்)
> திடுக்குற்றான்; பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; தேவர்களின்
> தலைவனான இராமபிரானின் திருவருள் பெற்ற தூதன் யான் என்றுகூறி கோவைக் கனிபோலும்
> வாயை உடைய மயில்போன்ற பிராட்டியை வணங்கி வெளிப்பட்டான்.]
>
> தொண்டை வாய்மயில்
>
> தொண்டைவாய் மயிலினைத் தொழுது,தோன்றினான் என்பது கம்பன் வரிகள்.
>
> கோவைக் கனி போலும் வாயினை உடைய மயில் போன்ற....  எனச் சொல்லும் போதே
> சீதையினைத்தான் கம்பன் சொல்கிறார் என்ற உங்கள் ஊகம் சரியேதான்.
>
> சோகத்தில் இருக்கும் சீதைகூட, அனுமன் பார்வையில் எப்படி இருந்தார் என்பதை நம்
> கண் முன் நிறுத்திய வரிகள் அவை.
>
> ஒரே பாடலில் இராமனையும், சீதையினையும் பெயர் கூறாமல் அவர்களின் குணங்களால்
> குறிப்பிட்டமைதான் கம்பனின் சிறப்புக் குணம்.
>
>
>
> [சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]
>
> நாளையும் பார்ப்போம்.
>
> *அந்தமான் தமிழ்நெஞ்சன்*
>
> *******************************************
>
> சித்தானந்தம்
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqpjNxbZKV%2B_j_Smtn76P0bptG_Ak%2B%3D1J88oQAxZut7gA%40mail.gmail.com.

Reply via email to