*(திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம்..)*
*பத்மா கோபால்* *இத்தனை நேரமாகக் காலக்ஷேபம், உபன்யாசம் என்று இடைவெளி இல்லாமல் செய்து* *கொண்டிருந்ததில், மணவாள மாமுனிகள் ரொம்பவும் ஆயாசமாக உணர்ந்தார்...* *சிறிது நாட்களாகவே அவரது உடல் சோர்வு அவரை ரொம்பவும் படுத்தி எடுத்தது...* *இருந்தும் எதையும் பொருட்படுத்தாமல் "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுவாய்" * *சிஷ்யகோடிகளுக்குத் தாம் அறிந்ததை எல்லாம் சொல்லித் தந்து விட வேண்டும் என்று தமது * *சக்திக்கு மீறிக் கடும் முயற்சி செய்ததால், அவரறியாமலேயே அவரது தேகம் ஓய்வை நாடியது..* *சிஷ்ய கோடிகள் இப்போதைக்கு வரமாட்டார்கள்..* *உணவு உண்ட பின்னர், அவர்கள் கற்றுக் கொண்டதை எல்லாம் பயிற்சி (அப்பியாசம்) செய்தாக * *வேண்டும்..* *இதற்கு மேல் மாலையில் தான் மறுபடி உபன்யாசம் என்பதால், அருகிலிருந்த தூணில், சற்று * *தலை **சாய்ந்தார்..* *சிறிது நேரம்தான் சென்றிருக்கும்..* *வாசலருகே ஏதோ சிறு அரவம்...* * நிழல் ஆடவும், யாரோ வந்திருப்பதை உணர்ந்தார்...* *"யாரப்பா அங்க நிக்கறது?.. உள்ள வாயேன்!.."* *.....மாமுனிகள் ஆதாரத்தோடு குரல் கொடுத்தார்..* *அவரே சற்றும் எதிர்பாராத வண்ணம் உள்ளே நுழைந்தாள் ஒரு பெண்மணி...* *வந்த வேகத்திலேயே மாமுனிகளின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்..* *நிமிர்ந்து எழுந்தவளின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது...* *"இவள் யாருன்னு தெரியலையே.." என்ற நினைவோடு, மாமுனிகள் அவளைச் சற்று உற்று * *நோக்கினார்..* *வந்தவளுக்குச் சுமார் அறுபது வயதிருக்கும்..* *ஒடிசலான தேகம்..* *ஆனால் தீக்ஷண்யமான (கண் பார்வையின் கூர்மை · உக்கிரம்) கண்கள்..* *அந்தக் கண்களில் இருந்த பிரகாசம் (ஒளி), * *"இவள் விஷய ஞானம் உள்ளவள்!.." என்பதைச் சந்தேகத்துக்கிடமில்லாமல் கூறியது..* *"யாரம்மா நீ?.. உனக்கு என்ன வேணும்?.."* *.....ஆதரவாய் மாமுனிகள் கேட்டதும் தான் தாமதம்..* *...அந்தப் பெண், மாமுனிகளை வினயத்துடன் கைகூப்பித் தொழுதாள்..* *"தேவரீருக்குக் கைங்கர்யம் செய்யற பாக்யத்தை இந்த அடியாளுக்குத் * *தந்தருளணும்.."* *"கை...ங்....கர்....யமா?... * *....நீ யாரு மா?* *உன்னோட ஊர் எது?.. * *பேர் என்ன?..* *உன்னோட பந்துக்கள்லாம் எங்க இருக்கா?.."* *"ஸ்வாமி... அடியேன் திருவல்லிக்கேணியில பிறந்து வளர்ந்தவள்..* *தற்சமயம் எனக்கு பிதா, மாதா, ஸகானு எல்லாமா இருக்கறவன் அந்தப் பார்த்தசாரதி தான்!.."* *....இதைக் கேட்டதும் பெரிய ஜீயருக்கு (மாமுனிகள்) முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது...* *"இருக்கட்டும் மா!.. ரொம்ப நல்ல விஷயம்தான்!..* *ஆனா... அந்தத் திருவல்லிக்கேணி திவ்யதேசம்...* *...கோவில் (ஸ்ரீரங்கம்), திருமலை (திருப்பதி), பெருமாள் கோவில் (பார்த்தசாரதி) * *எம்பெருமான்கள் **மூணு பேருமே உவப்போடு வந்து **அருளும் திவ்யதேசமாச்சே!..* *அது தானே ஜகத்துக்கே ஆச்சாரியரான நம்ம இராமானுஜரோட திருவவதாரத்துக்கு வித்திட்ட திவ்ய * *தேசம்!..* *"ஒப்பாரில்லாத மாதர்கள் வாழும் திருவல்லிக்கேணி" னு ஆழ்வார் கூடக் கொண்டாடியிருக்கற * *திவ்யதேசமாச்சே அது!..* *அங்க...* *ஒருவர் இருக்கற எடத்துல, பலர் இருந்தாவது அந்த எம்பெருமானை மங்களாசாஸனம் * *பண்ணணும்... * *அதுதான் பெரும் பேறுன்னு சொல்வாளே!..* *நீ அத விட்டுட்டு, இங்க வந்து நிக்கறியே!.."* *.....மாமுனிகளின் கேள்விக்குப் பதில் சொல்ல, இப்பொழுது அம்மாதரசி மெல்ல வாய் திறந்தாள்...* *"ஸ்வாமி!.. க்ஷமிக்கணும்...* *அந்த எம்பெருமானுக்குக் கைங்கர்யம் பண்றவாளுக்கு நடுவே வாழுற தகுதியும் அடியேனுக்கு * *இருக்கா?..* *குணபூர்த்தி இருக்கும் அவா எல்லரும், அடியேனைப் போல ஒரு தகுதியும் இல்லாதவாள * *சேர்த்துப்பாளா?..* *தேவரீர் உலாவும் பெருமாள்!..* *அதனால அடியேனோட குணக் கேடுகள் எல்லாம் பெரிது படுத்த மாட்டேள்!..* *தேவரீர் திருவடி சம்பந்தத்துனால அடியேன் நிச்சயம் பாவனமாயிடுவேன்!..* *அதனால தான் தேவரீர் கிட்ட கைங்கர்யத்தப் ப்ரார்த்திச்சுண்டு வந்து நிக்கறேன்...* *அத்தோட இல்லாம, தேவரீர் திருவடிக் கீழ வாழ்வுக்கு ஏது குறை?.."* *அந்தப் பெண்மணி பேசிய விதத்திலிருந்தே, அவளது பாண்டித்யத்தையும் பண்பையும் பெரிய * *ஜீயரால் ஊகிக்க முடிந்தது..* *அதனால், அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக, "சொல்லும்மா!.. ஒனக்குத் தகுதி இல்லைனு நீ ஏன் நெனைக்கற?.. அந்தப் பார்த்தசாரதியோட * *க்ருபை ஒனக்கு இல்லைனு யார் சொன்னா?.." என்று வினவினார்..* *வார்த்தைகள் தழுதழுத்தன வந்தவளுக்கு....* *...ஸ்வாமி!..அவனோட ப்ரேமைக்கு அடியேன்மட்டும் பாத்திரமாயிருந்தா ஸ்வப்னத்துலயாவது * *அடியேனக் கடாக்ஷித்திருப்பானே!.*. *(வளரும்..)* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *Selections from Upanyasams Part 52 Thiruvallikeni PeN Rahasyam 2 by VeLukkudi Sri Krishnan - YouTube <https://www.youtube.com/watch?v=mfmBC5lsSe0&t=34s>* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* [image: zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Boh1jXzBmnbEJZpJN79V0DzRc%3Dg_p%2B7UObuScHgakhOqA%40mail.gmail.com.
