Based on Earl Stanley Gardner in Tamil, Vasanth Ganesh  Watch annexed
youtube serials of Perry mason. https://youtu.be/L7maOe8gveo
KR IRS 22 6 23

On Wed, 21 Jun 2023 at 17:37, Chittanandam V R <[email protected]>
wrote:

>
>
> *கணேஷ் - வஸந்த் பற்றி சுஜாதா:*
>
> *என் கதைகளில் அவ்வப்போது வரும் கணேஷ் - வஸந்த் பாத்திரங்கள் உண்மையானவர்களா,
> எப்போது முதலில் தோன்றினார்கள் என்று கேட்கிறார்கள். **கணேஷ்தான் முதலில்
> வந்தான். 1968-ல் நான் எழுதிய 'நைலான் கயிறு' என்னும் தொடர்கதையில், பம்பாயில்
> ஒரு லாயராகத் தோன்றினான். பாதிக் கதையில் விடைபெற்றான்.*
>
> *அதன்பின் சில குறுநாவல்களில் தோற்றமளித்தான். அப்போது அவனுக்கு அசிஸ்டெண்டாக
> நீரஜா என்கிற பெண் இருந்தாள். எனக்குக் கல்யாணமானதும் மறைந்துபோனாள்.*
>
> *வஸந்த், கணேஷுடன் சேர்ந்து கொண்டது 'ப்ரியா' - 1973-ல் எழுதிய தொடர்கதையில்.
> அதன்பின் இருவரும் பல *
> *நாவல்களில் ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்தார்கள். **இன்றைக்கு அவர்கள் தோன்றி,
> முப்பத்தோரு வருடங்களாகியும் (1999-ல் எழுதியது) அதே வயசு கணேஷுக்கு!
> கல்யாணமாகவில்லை. அவன் புத்திசாலித்தனத்துக்கேற்ப பெண் கிடைக்கவில்லை.*
>
> *நான் பெங்களூருவில் பி.இ.எல்-லில் பணிபுரியும்போது, ஜலஹள்ளி பிராஞ்ச் ஸ்டேட்
> பாங்க்கில் பர்சனல் பாங்கிங் மானேஜராக ஒரு வசீகரமான இளைஞர் இருந்தார். அவர்
> பெயர் வஸந்த். அந்தப் பெயர் சட்டென்று ஞாபகம் வந்ததால், கணேஷின்
> உதவியாளனுக்குச் சூட்டினேன்.*
>
> *வஸந்த் இன்னமும் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறான். இவ்விரு பாத்திரங்களும்
> நான் பார்த்த பல புத்திசாலி லாயார்களின் குணாதிசயங்களை அவ்வப்போது சேர்த்துக்
> கொண்டு வடிவமைக்கப்பட்டவர்கள்தாம்.*
> *இதனால் கணேஷ், வஸந்தைப் பற்றி ஒவ்வொரு வாசகர் மனதிலும் ஒரு பிம்பம். அவர்கள்
> பார்த்த அதிபுத்திசாலிகளைச் சார்ந்து அமைகிறது. அதனுடன் மாட்ச்
> ஆகவில்லையென்றால் திரையிலோ, டி.வி-யிலோ கணேஷ் - வஸந்தைப் பார்க்கும்போது,
> 'என்ன சார்... நான் நினைத்தபடி இல்லையே?' என்று எனக்குக் கடிதம்
> எழுதுகிறார்கள்.*
>
> *கதையில் உள்ள பாத்திரங்களைக் கற்பனை பண்ணிக்கொள்ளும் அவர்களுடைய
> சுதந்திரத்தில் குறுக்கிடுவதால்தான் அவர்களுக்குச் சலிப்பும் அதிருப்தியும்
> ஏற்படுகிறது. இதுதான் எழுத்தைப் படமாக்குவதில் உள்ள முதன்மையான ஆபத்து. 
> **சத்யஜித்ரேகூட
> இந்த விமரிசனத்துக்குத் தப்பவில்லை. 'பதேர் பாஞ்சாலி' நாவலை எழுதிய பிபூதி
> பூஷன் பட்டாச்சார்யா, 'என்ன படம் எடுத்திருக்கிறார்?' என்று அலுத்துக்
> கொண்டாராம்.*
>
> *சுஜாதா*
>
> *********************************************************
>
> *நன்றி: அந்தமான் தமிழ்நெஞ்சன்*
>
>
> *சித்தானந்தம் *
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorF4sGkPsjcuA0MQqznG%3DYLY5a%2BeUCs2-uXpT6NJ02zOw%40mail.gmail.com.

Reply via email to