Kumbakarnan vadaIP PADALAM Many objects of war list may be seen here also: 103கும்பகருணன் புறப்பாடுஆயிரம் கோள் அரி, ஆளி ஆயிரம்,ஆயிரம் மத கரி, பூதம் ஆயிரம்,மா இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவதுஏய் இருஞ் சுடர் மணித் தேர் ஒன்று ஏறினான்.
104தோமரம், சக்கரம், சூலம், கோல், மழு, நாம வேல், உலக்கை, வாள், நாஞ்சில், தண்டு, எழு, வாம வில், வல்லையம், கணையம், மற்று உள சேம வெம் படை எலாம் சுமந்து, சென்றவால். 105நறையுடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன்குறைவு இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு,பிறையுடை எயிற்றவன் பின்பு சென்றனர்,முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார். 106ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறைபின்ற அரும் பிலனிடைப் பெய்யுமாறு போல்,வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே,சென்றனன், யாவரும் திடுக்கம் எய்தவே. KR IRS 26 623 On Sun, 25 Jun 2023 at 18:06, Chittanandam V R <[email protected]> wrote: > > > *மறைத்துக் காட்டும் கம்பன் - 12* > > கம்பன் மறைத்துக் காட்டிய பெயர்களில் இன்று.... > > இன்றும் ஆண் தகையின் பயணம் தொடர்கிறது. > > எம் எஸ் அக்சஸ் Microsoft Access போன்ற டேட்டாபேஸ் மென்பொருள்களில், சில > தொடர்பு உறவுகள் Relationship சொல்கிறார்கள். > > எளிதாய் விளங்கிக் கொள்ள ஏதுவாய் சின்ன உதாரணம்... > > நான்; என் ஒரே மனைவி; ஒரே மகள்; ஒரே மகன் இப்படிப்பட்ட தகவல்கள் முறையே > One to One Relation என்பார்கள். > > எனது பல வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களை One to Many Relation இல் > அடக்குவர். > > என் குடும்பத்தார் பலரின், பல வங்கி கணக்குகள் பற்றிய தகவல் தொகுப்பை Many to > Many Relation எனச் சொல்லுவர். > > கம்ப்யூட்டர் தொடாத ஒரு Relation ஐ கம்பர் தொட்டுத் தருகிறார். ஆம் Many to > One Relationதான் அது. (டேட்டா பேஸிலேயே இல்லையாம்!) > > ஒரு பாடலில் பல பெயர்களை (ஆண் தகை உட்பட) ஒரே நபருக்கு சுட்டிக் காட்டுவது > போல் அமைத்திருக்கிறார் கம்பன். > > 1. ஆண்தகை என தயரதனைப் புகழ்கின்றார் இப்பாடலில், ஆண்மைப் பண்புகள் > நிறைந்தவன் என்ற பொருள் படும்படியாக. > > 2. மண்ணுறு முரசு இனம் வயங்கு தானையான் - தயரதனை மற்றொரு சிறப்பான பெயர் > கொண்டு மேலும் புகழ்கிறார் கம்பன். > > மார்ச்சனை (தோற்கருவிகள் சிலவற்றுள் தக்கவாறு ஒலியெழும்புதற்கேற்ப > அடிக்கும் இடத்தைத் தகுதியாக அமைத்தற்கு உதவுவது) பொருந்திய பேரிகைகளின் > கூட்டம் விளங்குகின்ற சேனையையுடைய தயரதன் > > சேனைகளின் தலைவன். > > சேனை எப்படி? > > பேரிகைகள் இருக்கும்படி. > > பேரிகைகள் எப்படி? > > இதுக்கும் கம்பனிடம் பதில் உண்டு. > > இதோ ஒரே பாடலில், ஒரே தயரதனுக்கு இரு பெயர் தந்த அப்பாடல்: > > *நண்ணினர், இன்பத்து வைகும் நாளிடை,* > *மண்ணுறு முரசு இனம் வயங்கு தானையான்,* > *அண்ணல், அப் பரதனை நோக்கி, ஆண்தகை,* > *எண்ண அருந் தகையது ஓர் பொருள் இயம்புவான்:* > > (யாவரும் அயோத்தியை) அடைந்தவர்களாய் இன்பத்தில் திளைக்கும் நாளில் (ஒரு > நாள்) ஆண்மைப் பண்புகள் நிறைந்தவனும், மார்ச்சனை (தோற்கருவிகள் > சிலவற்றுள் தக்கவாறு ஒலியெழும்புதற்கேற்ப அடிக்கும் இடத்தைத் > தகுதியாக அமைத்தற்கு உதவுவது) பொருந்திய பேரிகைகளின் கூட்டம் > விளங்குகின்ற சேனையையுடையவனுமான தயரதன்; பெருமைக்குரிய அப்பரதனைப் > பார்த்து யாவரும் எண்ணாத ஒரு பொருளை சொல்லலானான். > > [பால காண்டம்; பரசுராமப் படலம்] > > ஆண் தகைகளின் வரிசைகள் தொடரும். > > அந்தமான் கிருஷ்ணமூர்த்தி > > ************************************* > > சித்தானந்தம் > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooy07Asdx_DGPEzcOo3PBy4%3DgCgeg%3DoX_-cf9cc1JsEyw%40mail.gmail.com.
