ATTACHED WORD DOC SINCE 33 PAGES KR IRS 21 7 23 On Thu, 20 Jul 2023 at 08:02, Chittanandam V R <[email protected]> wrote:
> > > திறம்பாமல் > > > வழக்கொழிந்துபோன பல அழகான சொற்களை மறுபடி நோக்கி ஒரு லேசான பெருமூச்சு > விடுவதற்கான > வாய்ப்புகள் ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றில் உள்ளன. > > 'திறம்புதல்' என்ற சொல்லைக் கொஞ்சம் கவனிக்கலாம். இதற்குத் தப்புதல் என்பது > பொருள். இதன் எதிர்ப்பதம் திறம்பாமை. திறம்பாத கடல் என்றால் அலை அடித்து > சலிக்காத கடல். திறம்பாத உலகம் - சலியாதிருக்கிற உலகம், திறம்பாது நான் > சொல்வதை என்றால் தப்பாமல், தவறாமல்... இப்படித் தீர்மானிக்கப்பட்ட > நெறியிலிருந்து தவறாமையைக் குறிக்கும் வார்த்தை இது. > > நம்மாழ்வார் திருவாய்மொழியில் இதனை அத்தனை வேறுபட்ட பொருள்களிலும் ஒரே > பாசுரத்தில் > பயன்படுத்தியுள்ளார். > > திறம்பாமல், மண் காக்கின்றேன் யானே என்னும்; > திறம்பாமல், மலை எடுத்தேனே என்னும்; > திறம்பாமல், அசுரரைக் கொன்றேனே என்னும்; > திறம் காட்டி, அன்று ஐவரைக் காத்தேனே என்னும்; > திறம்பாமல், கடல் கடைந்தேனே என்னும்; > திறம்பாத கடல் வண்ணன் ஏறக்கொலோ? > திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? > திறம்பாது என் திருமகள் எய்தினவே? > > ஒரு தாய் தன் மகள் மேல் கண்ணன் வந்து என்ன என்னவோ பிதற்றுகிறாளே என்று > கவலைப்படுவதாகப் பத்துப் பாடல்களின் வடிவில் ஆழ்வார், பகவத் கீதையின் 18-ம் > அத்தியாயக் கருத்துகள் அத்தனையையும் அழகாகச் சொல்லிவிடுகிறார். > > "இந்தப் பெண் நான்தான் பூமியைத் தவறாமல் காக்கிறேன் என்கிறாள். நான்தான் > மலையைத் தூக்கினேன் என்கிறாள். என் திறமையைக் காட்டி அன்று பாண்டவர்களைக் > காப்பாற்றினேன் > என்கிறாள். பாற்கடலைக் கடைந்ததும் நான்தான் என்கிறாள். அலை ஓயாத (திறம்பாத) > கடல் வண்ணனான திருமால் வந்து புகுந்ததால் இது நிகழ்ந்ததா! தவறு செய்யாத > (திறம்பாத) உலகத்தவர்களுக்கு என்ன சொல்வேன்? என் மகளுக்குத் தப்பாது > (திறம்பாது) இது வந்துவிட்டதே!" > > ஏழு முறை இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ஆழ்வார், ஏழு முறையும் > திறம்பாமல். > > - சுஜாதா > > அன்புடன், > > சித்தானந்தம் > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqWjupijSd9WqH%3D%2B6dAmREXQ6cj2Ff6OmYmtPQzPCP_1Q%40mail.gmail.com.
nammazhvar pasuram use of words.docx
Description: MS-Word 2007 document
