Thank you for pointing out since 2 folders opened but one only used; and
the wrong one was sent Now pl open  K R iRS  21723

On Thu, 20 Jul 2023 at 18:11, Chittanandam V R <[email protected]>
wrote:

> Sir,
>
> I opened the Document and it is blank please.
>
> Chittanandam
>
> On Fri, Jul 21, 2023 at 12:59 AM Rajaram Krishnamurthy <
> [email protected]> wrote:
>
>> ATTACHED WORD DOC SINCE 33 PAGES  KR IRS 21 7 23
>>
>> On Thu, 20 Jul 2023 at 08:02, Chittanandam V R <[email protected]>
>> wrote:
>>
>>>
>>>
>>> திறம்பாமல்
>>>
>>>
>>> வழக்கொழிந்துபோன பல அழகான சொற்களை மறுபடி நோக்கி ஒரு லேசான பெருமூச்சு 
>>> விடுவதற்கான
>>> வாய்ப்புகள் ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றில் உள்ளன.
>>>
>>> 'திறம்புதல்' என்ற சொல்லைக் கொஞ்சம் கவனிக்கலாம். இதற்குத் தப்புதல் என்பது
>>> பொருள். இதன் எதிர்ப்பதம் திறம்பாமை. திறம்பாத கடல் என்றால் அலை அடித்து
>>> சலிக்காத கடல். திறம்பாத உலகம் - சலியாதிருக்கிற உலகம், திறம்பாது நான்
>>> சொல்வதை என்றால் தப்பாமல், தவறாமல்... இப்படித் தீர்மானிக்கப்பட்ட
>>> நெறியிலிருந்து தவறாமையைக் குறிக்கும் வார்த்தை இது.
>>>
>>> நம்மாழ்வார் திருவாய்மொழியில் இதனை அத்தனை வேறுபட்ட பொருள்களிலும் ஒரே 
>>> பாசுரத்தில்
>>> பயன்படுத்தியுள்ளார்.
>>>
>>> திறம்பாமல், மண் காக்கின்றேன் யானே என்னும்;
>>> திறம்பாமல், மலை எடுத்தேனே என்னும்;
>>> திறம்பாமல், அசுரரைக் கொன்றேனே என்னும்;
>>> திறம் காட்டி, அன்று ஐவரைக் காத்தேனே என்னும்;
>>> திறம்பாமல்,  கடல் கடைந்தேனே என்னும்;
>>> திறம்பாத கடல் வண்ணன் ஏறக்கொலோ?
>>> திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
>>> திறம்பாது என் திருமகள் எய்தினவே?
>>>
>>> ஒரு தாய் தன் மகள் மேல் கண்ணன் வந்து என்ன என்னவோ பிதற்றுகிறாளே என்று
>>> கவலைப்படுவதாகப் பத்துப் பாடல்களின் வடிவில் ஆழ்வார், பகவத் கீதையின் 18-ம்
>>> அத்தியாயக் கருத்துகள் அத்தனையையும் அழகாகச் சொல்லிவிடுகிறார்.
>>>
>>> "இந்தப் பெண் நான்தான் பூமியைத் தவறாமல் காக்கிறேன் என்கிறாள். நான்தான்
>>> மலையைத் தூக்கினேன் என்கிறாள். என் திறமையைக் காட்டி அன்று பாண்டவர்களைக் 
>>> காப்பாற்றினேன்
>>> என்கிறாள். பாற்கடலைக் கடைந்ததும் நான்தான் என்கிறாள். அலை ஓயாத
>>> (திறம்பாத) கடல் வண்ணனான திருமால் வந்து புகுந்ததால் இது நிகழ்ந்ததா! தவறு
>>> செய்யாத (திறம்பாத) உலகத்தவர்களுக்கு என்ன சொல்வேன்? என் மகளுக்குத் தப்பாது
>>> (திறம்பாது) இது வந்துவிட்டதே!"
>>>
>>> ஏழு முறை இந்தச் சொல்லைப்  பயன்படுத்தியுள்ளார் ஆழ்வார், ஏழு முறையும்
>>> திறம்பாமல்.
>>>
>>> - சுஜாதா
>>>
>>> அன்புடன்,
>>>
>>> சித்தானந்தம்
>>>
>>>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor5ZtkxqgtgwZ4yS7W-Y9-We50s9PpMOsn%3DvB_-TnKWnw%40mail.gmail.com.

Attachment: NAMMALVAR PASURAM.docx
Description: MS-Word 2007 document

Reply via email to