வடிவமோ வடிவமற்ற தோ நம்பினால் சரி. sujatha. சுஜாதாவின் கடவுள் நம்பிக்கை
கமல்ஹாசனியும் பற்றிக்கொண்டது .அவர்கள் கூறியது, கடவுள் இல்லை என்று கூறவில்லை
; இருந்திருக்கலாம் எனக் கூறுகிறோம் . ஆழ்வார் பாசுரம் விளக்கங்கள் எல்லாம்
இது மாதிரியே சந்தேகப் பாணியிலேயே இருக்கும். கடவுள் என்பது உட்கிடை ,உள்ளதைக்
கடப்பது, ஊனைக் கடப்பது; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். ஐம்புலன் அறிவது,
எண்ணத்தின் உருவம்;குண,கர்மா, நிற, பேதம்,மத, மாச்சரியங்கள் உள்ளது. அருவம்
ஏதும் அற்றது. உணர்வது உருவமல்ல. எனவே எல்லாவற்றையும் கடந்தது .தமிழின்
தொல்காப்பியர் , திருவள்ளுவர், நாயன்மார் ,ஆழ்வார் மற்ற ஏனையோரின் இறை
விளக்கம், சமஸ்கிருத  வேத, உபநிடதங்களை பற்றியே வந்துள்ளது. ப்ரஹதாரண்யக,
ஐத்ரேய, கடோ,  மற்றும் என்னய்யா உபநிடதங்களும், ஒன்றையே கூறுகின்றன. பார்த்ததை
பார்த்தவாறு, மனம் எண்ணியவாறு, மூளை தெரிந்து கொண்ட விதத்தில் உரைக்கலாம்.
புரிந்து கொள்ள முடியாததாய், மெய்ஞ்ஞானத்தை அங்ஙனம் விவரிக்க இயலாது.
சமஸ்க்ரிதத்தில், நேதி நேதி அல்லது ந இதி ந இதி என்ற விவரணம் உள்ளது . அது அது
இதுவல்ல எனக் கூறுவது. தெரிந்ததை வைத்து தெரியாததை அறிவது . உணர்வின்
வெளிப்பாடு வெறும் வார்த்தைகளில். திரும்பத் திரும்ப  எல்லோரும் அதையே தான்
கூறுகிறார்கள்.    K Rajaram  IRS  28723

On Fri, 28 Jul 2023 at 08:21, Chittanandam V R <[email protected]>
wrote:

>
> *இறைவனுக்கு நிறம் உண்டா?*
>
> *இறைவனை ஆண்பாலாகச் சொல்லுவதையே இப்போதெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். **இறைவன்
> எப்படி இருப்பான்? வெள்ளையா, சிவப்பா, பச்சையா, கறுப்பா என்ன அவன் உருவம்? **இதை
> யார் அறிவார், யாரால் சொல்ல முடியும் என்று கேட்டுவிட்டு பேயாழ்வார் அருமையான 
> **பதில்
> சொல்கிறார்.*
>
> *இயற்பாவின் மூன்றாம் திருவந்தாதியில் வருகிறது இந்த வெண்பா:*
>
> *நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது என்று *
> *இறை உருவம் ** யாம் அறியோம், எண்ணில் - நிறைவு உடைய *
> *நா-மங்கைதானும் நலம் புகழ வல்லளே*
> *பூ மங்கை கேள்வன் பொலிவு?     *
>
> *(வெளிது - வெள்ளை, செய்து - சிவப்பானது, பசிது - பச்சை, கரிது கறுப்பானது,*
> *நாமங்கை - சரஸ்வதி, பூமங்கை - லக்ஷ்மி, கேள்வன் - கணவன், பொலிவு - உருவம்,
> அழகு)*
>
> *இறைவன் வெளுப்பா, சிவப்பா, பச்சையா, கறுப்பா என்று அவன் உருவத்தை என் 
> **போன்றவர்களால்
> சொல்ல முடியாது. எண்ணிப் பார்த்தால், கல்வி அறிவு நிறைந்த **சரஸ்வதிதான்
> லட்சுமி மணாளனின் உருவத்தை வருணிக்க வல்லவள்.*
>
> *பிரம்மனின் நாக்கில் சரஸ்வதி உறைவதாகச் சொல்வார்கள். அதனால் அவள் நாமங்கை. 
> **தாமரைப்பூவில்
> பிறந்தவள் என்று லக்ஷ்மியைச் சொல்வார்கள். அதனால் அவள் பூமங்கை. **இந்தப்
> பாடலில் சரஸ்வதி கல்வியின், அறிவின் தீட்சண்யத்தின் குறியீடு. இறைவனை 
> **இத்திறத்தவன்
> என்று சொல்லுவதற்கே சரஸ்வதியின் அறிவு முதிர்ச்சி வேண்டும். இறைவன் **கறுப்பா,
> சிவப்பா என்கிற கேள்விக்கெல்லாம் அவளால்தான் பதில் சொல்ல முடியும் **என்கிறார்
> பேயாழ்வார்.*
>
> *அவளைக் கேட்டால் இந்தக் கேள்வியெல்லாம் அர்த்தமற்றது என்று சொல்லலாம்.*
>
> *இறைவன் உருவமுள்ளவனா, அற்றவனா என்ற கேள்வியை எல்லா நம்பிக்கைகளும் **கேட்டு
> விடைதர முயல்கின்றன. திருக்குர்ரான் - "In the name of God, the Merciful,
> the **Compassionate. Say (O Muhammed) He is God the one God, the
> Everlasting Refuge, who has **not begotten, nor has been begotten, and
> equal to Him is not anyone" என்கிறது.*
>
> *திருமங்கையாழ்வார் 'பின்உருவாய் முன்உருவில் பிணி மூப்பில்லாப்
> பிறப்பிலியாய் **இறப்பதற்கே எண்ணாதவன்' என்று இறைவனை வர்ணிக்கும்போது
> ஏறக்குறைய **இதே கருத்து வெளிப்படுகிறது. நம்மாழ்வார் ஏகமூர்த்தி இரண்டு
> மூர்த்தி மூன்று **மூர்த்தி பலமூர்த்தி என்பதுடன் உருவங்களுடன் அருவும் ஆகி
> என்று சூட்சும **வடிவத்தையும் விட்டுவைக்கவில்லை.*
>
> *வடிவமோ வடிவமற்றதோ நம்பினால் சரி.*
>
> *- சுஜாதா *
>
> ***************************************
>
> *சித்தானந்தம் *
>
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooZtXWnyobn%2BEsknrpUqKMRcBqCKZ8kAJwWq3XFtoT%3DBw%40mail.gmail.com.

Reply via email to