---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Fri, 28 Jul 2023 at 09:25
Subject: Re: Peyaalvar by Sujatha
To: Rajaram Krishnamurthy <[email protected]>


The two lines from  திருவாய் மொழி :-
 ;-
  உளனெனில் அவன் உருவம் இவ்வுருகள் !
உளனலன் எனில் அவன் அருவுகள்  இவ்வருவுகள் !

   There is also this திருவாய்மொழிப்பாசுரம்;-

அவரவர் தமதமது  அறிவறி வகைவகை
அவரவர் இறையவர்  எனவழி அடைவர்கள் !
அவரவர் இறையவர்  குறைவிலர் இறைவர்கள் !
அவரவர் விதிவழி அடையநின்றனரே !

       Sridharan




On Fri, Jul 28, 2023 at 9:00 AM Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:

> வடிவமோ வடிவமற்ற தோ நம்பினால் சரி. sujatha. சுஜாதாவின் கடவுள் நம்பிக்கை
> கமல்ஹாசனியும் பற்றிக்கொண்டது .அவர்கள் கூறியது, கடவுள் இல்லை என்று கூறவில்லை
> ; இருந்திருக்கலாம் எனக் கூறுகிறோம் . ஆழ்வார் பாசுரம் விளக்கங்கள் எல்லாம்
> இது மாதிரியே சந்தேகப் பாணியிலேயே இருக்கும். கடவுள் என்பது உட்கிடை ,உள்ளதைக்
> கடப்பது, ஊனைக் கடப்பது; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். ஐம்புலன் அறிவது,
> எண்ணத்தின் உருவம்;குண,கர்மா, நிற, பேதம்,மத, மாச்சரியங்கள் உள்ளது. அருவம்
> ஏதும் அற்றது. உணர்வது உருவமல்ல. எனவே எல்லாவற்றையும் கடந்தது .தமிழின்
> தொல்காப்பியர் , திருவள்ளுவர், நாயன்மார் ,ஆழ்வார் மற்ற ஏனையோரின் இறை
> விளக்கம், சமஸ்கிருத  வேத, உபநிடதங்களை பற்றியே வந்துள்ளது. ப்ரஹதாரண்யக,
> ஐத்ரேய, கடோ,  மற்றும் என்னய்யா உபநிடதங்களும், ஒன்றையே கூறுகின்றன. பார்த்ததை
> பார்த்தவாறு, மனம் எண்ணியவாறு, மூளை தெரிந்து கொண்ட விதத்தில் உரைக்கலாம்.
> புரிந்து கொள்ள முடியாததாய், மெய்ஞ்ஞானத்தை அங்ஙனம் விவரிக்க இயலாது.
> சமஸ்க்ரிதத்தில், நேதி நேதி அல்லது ந இதி ந இதி என்ற விவரணம் உள்ளது . அது அது
> இதுவல்ல எனக் கூறுவது. தெரிந்ததை வைத்து தெரியாததை அறிவது . உணர்வின்
> வெளிப்பாடு வெறும் வார்த்தைகளில். திரும்பத் திரும்ப  எல்லோரும் அதையே தான்
> கூறுகிறார்கள்.    K Rajaram  IRS  28723
>
> On Fri, 28 Jul 2023 at 08:21, Chittanandam V R <[email protected]>
> wrote:
>
>>
>> *இறைவனுக்கு நிறம் உண்டா?*
>>
>> *இறைவனை ஆண்பாலாகச் சொல்லுவதையே இப்போதெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். **இறைவன்
>> எப்படி இருப்பான்? வெள்ளையா, சிவப்பா, பச்சையா, கறுப்பா என்ன அவன் உருவம்? **இதை
>> யார் அறிவார், யாரால் சொல்ல முடியும் என்று கேட்டுவிட்டு பேயாழ்வார் அருமையான 
>> **பதில்
>> சொல்கிறார்.*
>>
>> *இயற்பாவின் மூன்றாம் திருவந்தாதியில் வருகிறது இந்த வெண்பா:*
>>
>> *நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது என்று *
>> *இறை உருவம் ** யாம் அறியோம், எண்ணில் - நிறைவு உடைய *
>> *நா-மங்கைதானும் நலம் புகழ வல்லளே*
>> *பூ மங்கை கேள்வன் பொலிவு?     *
>>
>> *(வெளிது - வெள்ளை, செய்து - சிவப்பானது, பசிது - பச்சை, கரிது கறுப்பானது,*
>> *நாமங்கை - சரஸ்வதி, பூமங்கை - லக்ஷ்மி, கேள்வன் - கணவன், பொலிவு - உருவம்,
>> அழகு)*
>>
>> *இறைவன் வெளுப்பா, சிவப்பா, பச்சையா, கறுப்பா என்று அவன் உருவத்தை என் 
>> **போன்றவர்களால்
>> சொல்ல முடியாது. எண்ணிப் பார்த்தால், கல்வி அறிவு நிறைந்த **சரஸ்வதிதான்
>> லட்சுமி மணாளனின் உருவத்தை வருணிக்க வல்லவள்.*
>>
>> *பிரம்மனின் நாக்கில் சரஸ்வதி உறைவதாகச் சொல்வார்கள். அதனால் அவள் நாமங்கை. 
>> **தாமரைப்பூவில்
>> பிறந்தவள் என்று லக்ஷ்மியைச் சொல்வார்கள். அதனால் அவள் பூமங்கை. **இந்தப்
>> பாடலில் சரஸ்வதி கல்வியின், அறிவின் தீட்சண்யத்தின் குறியீடு. இறைவனை 
>> **இத்திறத்தவன்
>> என்று சொல்லுவதற்கே சரஸ்வதியின் அறிவு முதிர்ச்சி வேண்டும். இறைவன் **கறுப்பா,
>> சிவப்பா என்கிற கேள்விக்கெல்லாம் அவளால்தான் பதில் சொல்ல முடியும் **என்கிறார்
>> பேயாழ்வார்.*
>>
>> *அவளைக் கேட்டால் இந்தக் கேள்வியெல்லாம் அர்த்தமற்றது என்று சொல்லலாம்.*
>>
>> *இறைவன் உருவமுள்ளவனா, அற்றவனா என்ற கேள்வியை எல்லா நம்பிக்கைகளும் **கேட்டு
>> விடைதர முயல்கின்றன. திருக்குர்ரான் - "In the name of God, the Merciful,
>> the **Compassionate. Say (O Muhammed) He is God the one God, the
>> Everlasting Refuge, who has **not begotten, nor has been begotten, and
>> equal to Him is not anyone" என்கிறது.*
>>
>> *திருமங்கையாழ்வார் 'பின்உருவாய் முன்உருவில் பிணி மூப்பில்லாப்
>> பிறப்பிலியாய் **இறப்பதற்கே எண்ணாதவன்' என்று இறைவனை வர்ணிக்கும்போது
>> ஏறக்குறைய **இதே கருத்து வெளிப்படுகிறது. நம்மாழ்வார் ஏகமூர்த்தி இரண்டு
>> மூர்த்தி மூன்று **மூர்த்தி பலமூர்த்தி என்பதுடன் உருவங்களுடன் அருவும் ஆகி
>> என்று சூட்சும **வடிவத்தையும் விட்டுவைக்கவில்லை.*
>>
>> *வடிவமோ வடிவமற்றதோ நம்பினால் சரி.*
>>
>> *- சுஜாதா *
>>
>> ***************************************
>>
>> *சித்தானந்தம் *
>>
>>
>>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq6kE39CQeuxefeEGCeQVCV26S0Hfvm9uHp%3D3Scjkt3vg%40mail.gmail.com.

Reply via email to