ஏன் கிங்? செய்வன திருந்த செய் ; செயற்கரிய செய்வர் பெரியார் ; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் திருத்தமாகச் செய்துவந்தால் அந்தச் செயல்களின் தொகுப்பு மொத்தமாக சேர்ந்து வாழ்நாள் சாதனையாக வளர்ந்து நிற்கும். அப்போது நாமும் சாதனையாளர் வரிசையில் இடம்பெறும். நாம் செய்யும் செயல்கள் பொதுநல நோக்குடன் இருந்தால் உலகமே நம் வெற்றியை மகிழ்ச்சியோடு வரவேற்கும்..தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. KR IRS 6 8 23
Read more at: https://tamil.oneindia.com/art-culture/kural/68.html?story=1 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sun, 6 Aug 2023 at 07:40 Subject: Fwd: Tamilnayagam - kamba Ramayanam - Surpanaka (7) To: கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (7) *தமிழ்நாயகம் * தவம் செய்த தவம் IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் சில பல மாதங்கள் தனியாக பயிற்சி எடுத்துக் கொள்ளவார்கள். IIT போன்ற நிறுவனங்களில் சேர்வது என்பது அவ்வளவு எளிதல்ல. இந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்வதும் அவ்வளவு எளிதல்ல. அவற்றில் சேர்வதற்கும் நுழைவு தேர்வு உண்டு. வருகிற எல்லோரையும் அவர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. அந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, பயிற்சி பெற்று IIT ல் சேர முடியும். இப்போது என்ன ஆகிறது என்றால், அந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். அதில் சேர்ந்து பயிற்சி பெற்று, இந்த பயிற்சி நிறுவனங்களில் நுழைந்து, அங்கு மீண்டும் IIT க்கு பயிற்சி பெற்று, IIT ல் சேர வேண்டும். சரி, அதுக்கும், இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம் ? IIT எங்கே இருக்கிறது, இராமாயணம் எங்கே இருக்கிறது ? இராமன் தவம் செய்ய கானகம் வந்தான். தவம் செய்யவா வந்தான் ? ஆம். அப்படித்தான் கைகேயி சொல்லி அனுப்பினாள். *'"ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய், தாழ் இரும் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற் கொண்டு,பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி, ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று இயம்பினன் அரசன்' என்றாள்.* "பரதன் நாட்டை ஆளட்டும். நீ காட்டில் போய் தவம் செய்" என்று சொல்லித்தான் அனுப்பினாள். எனவே இராமன் தவம் செய்ய காட்டுக்கு வந்திருக்கிறான். சூர்ப்பணகை பார்க்கிறாள். எல்லோரும் தவம் செய்து அதன் பலன்களைப் பெறுவார்கள். ஆனால், இந்த இராமன் தவம் செய்ய, இந்த தவம் , என்ன தவம் செய்ததோ என்று வியக்கிறாள். இராமன் தவம் செய்கிறான் என்றால் அது தவத்திற்கே பெருமையாம். நாம் எல்லாம் தவம் செய்தால் அது நமக்குப் பெருமை. இராமன் தவம் செய்தால் அதனால் தவத்துக்கு பெருமை. இராமன் தவம் செய்ய வேண்டுமே என்று அந்த தவம் முன்பு தவம் செய்ததாம். பாடல் *'எவன் செய, இனிய இவ் அழகை எய்தினோன்அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான்?நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்தவம் செய, தவம் செய்த தவம் என்?‘ என்கின்றாள்.* பொருள் எதைப் பெறுவதற்காக இனிமையான இந்த அழகை அடைந்தவன் துன்பப்பட்டு அவனுடைய இந்த உயர்ந்த உடம்பு நோகும்படி தவம் மேற்கொள்கிறான்? புதுமையை உண்டாக்கக் கூடிய இந்த நளினமான கண்களை உடைய இராமன் தவம் செய்ய, தவம் செய்த தவம் என்ன? என்கிறாள் இவன் தவம் செய்ய, அந்த தவம் என்ன தவம் செய்ததோ என்கிறாள். நீங்க எங்க வீட்டுக்கு வர இந்த வீடு என்ன புண்ணியம் பண்ணியதோ என்று சொல்லுவதைப் போல. IIT ல் சேர கோச்சிங் சென்டர். கோச்சிங் சென்டரில் சேர ஒரு டுடோரியல் சென்டர் மாதிரி. தவம் செய்ய, தவம் செய்த தவம் . கம்பனின் கவித் திறமைக்கு ஒரு உரைகல். மேலும், நாம் ஒரு வேலை செய்கிறோம் என்றால், நம்மால் அந்த வேலை பெருமை அடைய வேண்டும். அந்த அளவுக்கு நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். இராமன் உயர்த்திக் கொண்டான். இராமாயணம் படிப்பது கம்பனின் கவித்திறமையை இரசிக்க மட்டும் அல்ல, அதில் உள்ள கதையைப் படிப்பதற்கு மட்டும் அல்ல, அதில் உள்ள பாடங்களையும் படித்துக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்ய வேண்டும். நம்மால் அந்த காரியத்துக்கு பெருமை வந்து சேர வேண்டும். அணு ஆராய்ச்சி செய்தாலும் சரி, தெருப் பெருக்கினாலும் சரி....மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும். மார்ட்டின் லூதர் கிங் சொல்லுவார் “If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, 'Here lived a great street sweeper who did his job well.” அது பாடம். *- தமிழ்நாயகம் * *********************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop7%2B-pPYXxggCETv6BbpsFByn2%3DBZ_wb47TrvroF28afg%40mail.gmail.com.
