கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து

அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்

ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை

எப்படிநான் நம்புவேன்? இறைவா! கச்சியேகம்பனே!

Pattinathaar

மகளிர் சிந்தை நல்நெறிப் பால அல்ல" KAMBA RAMAYANAM SOORPANAGAI PADALAM

Before getting into the illiterate translation here, ascribing generally
the woman, we ought to have thought about it a little, whether what Valmiki
did not say, Kamban indebted in gratitude to Vallal and Kings, would have
intended thus?

Magalir sindai nalneri pal alla= the thoughts of women (or women?) is not
in the right course.

2     பொதுமகளிரைத் திருவள்ளுவர் ‘வரைவின் மகளிர்’ எனக் குறிப்பிடுகிறார்.
வரைவு என்னும் சொல் ஒருவன் ஒருத்தி என்று வரையறை செய்துகொள்ளும் (
வரைந்துகொள்ளும்) திருமணத்தை உணர்த்தும். திருமணம் செய்துகொள்ளாமல்
கட்டுப்பாடின்றிக் காசுக்காகத் தன் உடலின்பத்தை விற்கும் மகளிர் வரைவின் மகளிர்
.

இருமனப் பெண்டிர், பண்பில் மகளிர், பிறர் நெஞ்சில் பேணிப் புணர்பவர், புன்னலம்
பாரிப்பார், பொதுப்பெண்டிர், பொதுநலத்தார், பொருள் விழையும் ஆய்தொணியார்,
பொருட் கொருளாளர், மாய மகளிர், வரைவிலா மாணிழையார் என்றெல்லாம் திருக்குறள்
குறிப்பிடும் தொடர்கள் இவர்களது பண்பைப் புலப்படுத்துகின்றன.

இவர்களைப் பரத்தையர் என்றும் கூறுவர். பரம் என்னும் பரம்பொருள் எல்லாருக்கும்
உரியது. பரத்தன், பரதர், பரத்தை என்னும் சொற்கள் வரையறுத்துக்கொண்ட ஒழுக்கம்
இல்லாதவராய் பரந்துபட்ட ஒழுக்கம் பூண்டு வாழ்பவரை உணர்த்துன.

இவர்களைப் பொதுமகன் பொதுமகள் என்னும் சொற்களாலும் குறிப்பிடுவர்

“Magalir” is a general category of “many” as well as a “single” woman.
Magalir is a general term and indicators as adjectives alone differentiates
the varieties of men and women or even other species; and the quality is
indeterminate to predict the characters of the category as universally
that. Tiruvalluvar existed prior to Kambar; and he had defined in one
adikaram @ chapter about the other bad character of a woman, as he defined
, many bad characters of the men and human and species.

        பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்

நயன்தூக்கி நள்ளா விடல்

Who weigh the gain, and utter virtuous words with vicious heart,

Weighing such women’s worth, from their society depart.

கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல்‌ கூறுகின்ற
பண்பற்ற பொது மகளிரின்‌ இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல்‌ விடவேண்டும்‌.

One must ascertain the character of the ill-natured women who after
ascertaining the wealth (of a man) speak (as if they were) good
natured-ones, and avoid intercourse (with them).  Tirukkural said the women
who speak highly of someone to achieve their ends; and the magalir sect
(not the whole but only such sweet worded women category) alone Kambar
sites here in the words of Rama. Soorpanagai is a magalir. She is the only
woman in front of Rama while Seetha is inside the Parnasala. Rama described
Seetha differently at the time of marriage as” annalum nokkinal avalum
nokkinal “and not the vice versa. In that verse which I am not quoting ,
Seetha was also a magalir and had the term , MAGALIR SINDAI NARPALALALA
were to be true, Rama was supposed to have desired the varaivin magalir and
then there is no Kappium at all. The woman in front of Rama, makes Rama
think that soorpnaka words are not going in a good direction. Interpreting
as all women is erroneous. Pattinathar poem is / was, an individual
narration ; it is as good as abusers who castrate people when they cannot
measure the other people’s high  standards . Interpretation alone is wrong
and not Poet Kamban.

K Rajaram  IRS  11 9 23

On Mon, 11 Sept 2023 at 06:16, Chittanandam V R <[email protected]>
wrote:

>
> *கம்ப இராமாயணம் - சூர்ப்பணகை (21)*
>
> *தமிழ்நாயகம் *
>
> மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல
>
>
> "உன்னிடம் ஒரு காரியம் ஆக வேண்டும்" என்று சூர்ப்பணகை சொன்னாள். அதை
> கேட்டவுடன் இராமன், "பெண்கள் மனதை யாராலும் அறிய முடியாது. பெரும்பாலும் அது
> நல்ல வழியில் செல்வது அல்ல. போகப் போக இவள் எண்ணம் என்ன என்று தெரியும்" என்று
> மனதில் நினைத்துக் கொண்டு "அழகிய வளையல்களை அணிந்த பெண்ணே, நீ மனதில் நினைத்து
> வந்த காரியத்தை கூறு. முடிந்தால் செய்து தருகிறேன்" என்றான்.
>
> பாடல்
>
>
>
>
>
> *அன்னவள் உரைத்தலோடும், ஐயனும், 'அறிதற்கு ஒவ்வா நல் நுதல் மகளிர் சிந்தை
> நல் நெறிப் பால அல்ல; பின் இது தெரியும்' என்னா, 'பெய் வளைத் தோளி!
> என்பால் என்ன காரியத்தை? சொல்; அஃது இயையுமேல் இழைப்பல்' என்றான்.*
>
> பொருள்
>
> அந்த சூர்ப்பணகை  சொன்னவுடன், இராமனும் "அறிந்து கொள்ள முடியாத
> சிறந்த  நெற்றியை உடைய பெண்கள் சிந்தனை நல்ல நெறியில் செல்பவை அல்ல;
> பின்னால் இது தெரியும்" என்று "வளையல்களை அணிந்த கைகளை உடையவளே
> என்னிடம் என்ன காரியம் வேண்டி வந்தாய்? சொல்! அதை முடிந்தால்
> செய்து தருகிறேன்" என்றான்.
>
>
> *"அறிதற்கு ஒவ்வா  நல் நுதல் மகளிர் சிந்தை"*
>
> பெண்கள் மனதை அறிந்து கொள்ள முடியாது. பெரிய பெரிய ஞானிகள், மேதாவிகள்
> எல்லாம் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
>
>
>
> *ஆழி என்ன அளவு படா வஞ்ச நெஞ்சப்பாழான மாதர் மையல் பற்று ஒழிவது எந்நாளோ!*
>
> கடல் போன்ற ஆழம் உள்ள வஞ்ச நெஞ்ச பாழான மாதர் என்று குறிப்பிடுகிறார்
> தாயுமானவர் என்ற மிகப் பெரிய ஞானி.
>
>
>
>
> *அத்தி மலரும்  அருங்காக்கை வெண்ணிறமும் கத்துபுனல் மீன் பதமும்
> கண்டாலும் -பித்தரே கானார் தெரியற் கடவுளரும் காண்பாரோ **மானார் விழியார்
> மனம்.*
>
> என்பது நீதி வெண்பா
>
> பெண்ணின் மனம், கடவுளுக்கும் தெரியாது என்கிறது.
>
>
> பெண் என படுவோ கேண்மோ ....ஓராயிரம் மனத்தவாகும் என்கிறது சீவக சிந்தாமணி.
>
> ஒரு மனம் அல்ல, ஆயிரம் மனம் என்கிறது.
>
> இராமன் ஒரு படி மேலே போகிறான்.
>
> பெண் மனம் என்பது அறிய முடியாதது மட்டும் அல்ல, அது நல்ல வழியில் செல்வதும்
> அல்ல  என்கிறான்.
>
> "மகளிர் சிந்தை நல்நெறிப் பால அல்ல"
>
> சீதை உள்ளே இருக்கிறாள். அது இராமனுக்கும் தெரியும். இருந்தும் இராமன்
> சொல்கிறான்.
>
> "....நித்தநித்தம் பொய்யடா பேசும் புவியின் மட மாதரை விட்டு உய்யடா உய்யடா
> உய்"
>
> என்பார் பட்டினத்தடிகள்.
>
> கணவன் தூங்கிய பின், அவன் கையை மெல்ல, அசையாமல்  எடுத்து தள்ளி வைத்து விட்டு
> , வெளியில் சென்று விட்டு வந்து உறங்குபவளை எப்படி நான் நம்புவேன் இறைவா
> கச்சியேகம்பனே என்று பாடுகிறார் பட்டினத்து ஸ்வாமிகள்
>
>  கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
> அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
> ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
> எப்படிநான் நம்புவேன்? இறைவா! கச்சியேகம்பனே!
>
>
> கம்பன் பல பாடல்களை கவி கூற்றாக சொல்லி இருக்கிறான். அதாவது, இது என்
> கருத்து.  எந்த கதாபாத்திரத்தின் கருத்தும் அல்ல என்று கூறி இருக்கிறான்.
> ஆனால், இந்தக் கருத்தை , இராமன் வாயிலாக சொல்ல வைக்கிறான் கம்பன்.
>
> என்ன காரணமாக இருக்கும்?
>
> *-* *தமிழ்நாயகம் *
>
> **************************
>
> *சித்தானந்தம் *
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooEfPbOafxF%3DTnXm-8XV3U5yTW0woSftBXq9vCZTWcN8Q%40mail.gmail.com.

Reply via email to