Read through. But is it a verse of Kamba Ramayanam to analyse in such
detailed length? Has he given any solution for righteousness? NO; he
narrated what anna wrote as Keemayanam; it is ok as a story; but it is not
one that needs such a stamping. Writing as a comedy that truth will not
succeed will succeed a few times, is testing the SriRangam preached dharna;
ghe told Kamala hassen that "if god can exist that would have been better'.
I have no brief in a person who carries half truths which are supposed to
be a bundle of contradictions.   KR IRS 26 10 23

---------- Forwarded message ---------
From: 'venkat giri' via iyer123 <[email protected]>
Date: Wed, 25 Oct 2023 at 21:10
Subject: [iyer123] About sujhata..Just read
To: N. Sekar <[email protected]>
Cc: Iyer <[email protected]>, Gopala Krishnan <[email protected]>


"வாய்மையே சிலசமயம் வெல்லும்" - சுஜாதா
- ஒரு சிறப்புப் பார்வை
*1984ல் சுஜாதா ஆனந்த விகடனில் "வாய்மையே சிலசமயம் வெல்லும்" என்று ஒரு
தொடர்கதை எழுதினார். அது பின்னர் தூர்தர்ஷனில் சீரியலாக வரத் தொடங்கியது.*


*முதல் அத்தியாயத்திலேயே சுஜாதாவின் அட்டகாசமான வர்ணனை துவங்கிவிடுகின்றது.கதை
ஆரம்பிக்கும் ஜூன் மாதம் பதிமூன்றாம் தேதி கெட்ட காரியங்கள் பண்ணிய சென்னை
நகரத்தைப் பவுன் கலர் சூரியன் எழுப்பியது. தூக்கம் நனைந்த கண்களுடன் தொண்ணூறு
சதம் பதிவிரதா ஸ்தீகள் ப்ளாஸ்டிக் பை பால் வாங்கப் போனார்கள்.*
*தேர்தல் எழுதிய சுவரொட்டிகளை வாக்காளர்கள் நின்றபடி நனைத்துக்
கொண்டிருந்தார்கள். கண்ணம்மாப்பேட்டை பெண்கள் இரவில் குடித்த கணவர்களை
கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். மெயின் ரோடின் விளிம்பில் வயதானவர்கள்
நீண்ட ஆயுளை வேண்டி கான்வாஸ் கால்களில் ஓடினார்கள்.*
*பிள்ளையார் கோயில் தாண்டி மூசாசேட் தெருவில் நுழைந்து, கேபி பிக்சர்ஸ்
போர்டைக் கடந்து மத்தியதர மொட்டை வீடுகள் சிலவற்றில் மஞ்சள் வர்ணம் அடித்த
பழைய காலத்து வீடு தெரிகிறதே, அதன் கேட்டுக் கதவைக் திறந்துகொண்டு உள்
நுழையுமுன் நாய் குரைக்கிறது. பாதகமில்லை. அந்த நாய் அப்பிராணி. ஏதோ
சாஸ்திரத்துக்குக் குரைக்கும்; மோர்க் குழம்பு நக்கும். அப்பளம் தின்னும்.
பெயர் சீனு.*
*ரங்கசாமி அய்யங்காரின் வீட்டில் ஒரு நாள் வந்து ஒட்டிக்கொண்டு விட்ட நாய்.
ஒரு ஜம் பிஸ்கட் போட்டால் பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் காட்டிக்
கொடுக்கும். பார்த்தீர்களா...! குரைத்துவிட்டு, உடனே பரிபூரண அந்நியரான
உங்களைப் பார்த்து வாலாட்டுகிறது. அதைக் கடந்து இடது பக்கம் வந்தால் அறை
வாசலில் ஏவி.விஜயகுமார் என்று போர்ட் போட்டிருக்கிரதே. அங்கேதான் நமக்கு ஜோலி.
கதவைத் தட்ட வேண்டாம். திறந்தே இருககிறது. ஏவி.வி முகச்சவரம் செய்து
முடிக்கும் வரை அறையைப் பார்க்கலாம்.*
*கதாநாயகன் விஜயகுமாரைப் பற்றி அறிமுகம் செய்ய இவ்வளவு விவரங்கள் தருகின்றார்.
ஆனால் எதுவுமே போரடிக்கவில்லை. கதைச் சுருக்கம் என்னவென்றால் ஏவி.வி
குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரரின் பதின்மவயது மகளை ஒரு தடியன் டூரின்
போது பொய் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் ஆபாசப் படங்கள் எடுத்துவிடுகின்றான்.
ஏண்டா எடுத்தான் என்றால் அவனுக்குள் ஒரு 'சிவப்பு ரோஜாக்கள்' கதை. கதாநாயகன்
உதவியால் விஷயம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது. ஆனால் சமூக சேவகர்களும்,
ஊடகங்களும் சும்மா இருக்க மாட்டேங்கிறார்கள், தங்கள் தேவைக்காக விஷயத்தைப்
பெரிது பண்ணுகின்றன. நாயகி விஜியின் எதிர்காலம் பற்றி அவர்களுக்குக் கவலை
இல்லை.*




*ரங்கசாமி அய்யங்கார் தனது மகள் சூர்யாவுக்கு கணக்குப் பாடம் சொல்லி
கொடுத்துக் கொண்டிருகின்றார். சூர்யா மழலையுடன், "ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரு
வேலையை ஒரு மணிநேரத்தில் செய்தால், இரண்டு ஆணும், இரண்டு பெண்ணும் அதே வேலையை
எத்தனை மணி நேரத்தில் செய்வார்கள்?" என்று அப்பாவைப் பார்த்தாள். அய்யங்கார்
நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, "ஒரு ஆணும், ஒரு பெண்ணும் செய்யறதை 'எக்ஸ்' னு
வெச்சுக்கோ..." என்றார். உள்ளே நுழைந்த மனைவி, "இதெல்லாம்தான் குழந்தைக்குச்
சொல்லித் தரதா?" என்கிறாள். 'என்னடி பண்றது. பொஸ்தகத்தில்
போட்டிருக்கே...?"மேற்படி நகைச்சுவை சமாச்சாரங்களுக்குப் பிறகு எடுக்கிறது
எக்ஸ்பிரஸ் வேகம். டூர் போகும் விஜியை வினோத் திட்டம் போட்டு அழைத்துப் போகும்
நேரத்தில் படிக்கும் அனைவருக்கும் பதைபதைக்கும். சமூக சேவகர்களும், ஊடகங்களும்
எப்படிப் பொறுப்பற்று இயங்கி, விஜியின் கையறு நிலைக்குக் காரணமாகின்றன என்று
தெரியும்போது சுஜாதா எப்படி வாசகர்களைப் பாதிக்கிறார் என்று
புரிகின்றது.சிறுகதை என்றால் மட்டும்தான் நச்சென்ற முடிவு அவசியமா? குறு
நாவல்களிலும் இது சாத்தியமே என்று இறுதி அத்தியாயத்தில் சுஜாதா தனது
முத்திரையைப் பதித்து தலைப்பை நியாப்படுத்துகின்றார்.*
*பெற்றோரின் அன்பு அரவணைப்பின்றி விடுதியில் வளர்ந்து தாய் தந்தையின்
பணக்காரச் சீர்கேடுகளால் வெறுப்புற்று விரக்தியில் அலையும் கோடீஸ்வரர்
ராம்கோபாலின் மகன் வினோத்துக்கு பெண்களை ஆடையின்றி புகைப்படம் பிடிப்பதில் ஒரு
ஆத்ம திருப்தி. அவன் சித்ரா என்ற பதினேழு வயது மாணவியை பிக்னிக்கில் இருந்து
பொய் சொல்லிக் கடத்தி போட்டோ எடுக்கிறான்.அந்தச் சம்பவம் சித்ராவின்
வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதையும் அச் சம்பவத்தின் பின்னர்
நடக்கும் நிகழ்வுகளையும் விவரிக்கிறது வாய்மையே சில சமயம் வெல்லும்.*
*அப்பாவிப் பிராமணப் பெண் சித்ரா, சித்ரா மீதான அன்பினாலும்
குற்றவுணர்ச்சியாலும் அவளுக்கு தன்னால் இயன்ற அத்தனையையும் செய்யத்துடிக்கும்
விஜி என்கின்ற விஜயகுமார், பெண்ணியவாதி நித்யா, அந்தச் சம்பவத்தை வைத்து தொடர்
எழுதி 'பெண்' பத்திரிகையினை பிரபலமாக்க முயலும் முத்துசாமி , டாக்டர்
சாரதாம்மா என பாத்திரப் படைப்புகள் பிரமாதம். பெற்றோரின் தவறுகள் எப்படி
பிள்ளைகளை பாதிக்கின்றது என்பதை வினோத் மூலம் காட்டிய விதம், சாரதாம்மா
நித்யாவுக்கிடையான உரையாடல்கள், ராம்கோபால் - முத்துசாமி சந்திப்பு, இறுதி
அத்தியாயத்தில் முத்துசாமி நித்யாவுக்கு இடையான உரையாடல் மற்றும் சித்ரா -
விஜி உரையாடல் எல்லாம் மிகச்சிறப்பாக இருந்தது.வினோத்தை ஒரு வில்லனாக
சித்தரிக்காமல் தவறான வளர்ப்புமுறை மற்றும் பெற்றோரின் ஒழுக்கமின்மை காரணமாக
பாதிக்கப்பட்ட ஒருவனாக சித்தரிப்பதில் சுஜாதா வெற்றியடைந்திருக்கிறார்.*
*சுஜாதா எழுதிய சமூக நாவல்களில் "வாய்மையே சில சமயம் வெல்லும்" தான்
மிகச்சிறந்தது என்று எண்ணுகிறேன்.*
*செவந்த் சேனல் மாணிக்கம் நாராயணனின் இப்பேட்டியில் வந்தது. செவந்த் சேனல்
நாராயணன் அவர்கள் சுஜாதாவின் “வாய்மையே (சில சமயம்) வெல்லும்” நாவலை
தூர்தர்ஷனில் சீரியலாக எடுத்து நான்கு எபிசோட் முடித்தபோது, தொடரை டீவீயில்
வெளியிட முடியாது என்றார்களாம். தொடரின் தலைப்பானது, இந்திய அரசின் மோட்டோவாக
ஏற்கப்பட்ட வாக்கியமான “சத்யமேவ ஜயதே” - (“வாய்மையே வெல்லும்”) என்பதை கிண்டல்
செய்வதுபோல் உள்ளதால் அரசாங்கத் தொலைக்காட்சியில் அனுமதிக்க முடியாது என்ற
போது “மறக்க முடியவில்லை” என்று தலைப்பை மாற்றித் தொடரை வெளியிட்டார்கள்*






*இதை தொலைக் காட்சி தொடராக வெளியிடலாம் என் எண்ணி, தூர்தர்ஷனில் அது
ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜன்
சுஜாதவுக்குப் போன் செய்கிறார் அவசரமாக. அந்தச் சீரியலுக்கு சில மாதர்
அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும், எனவே அவர் உடனே
நிலையத்திற்கு வர வேண்டுமென்றும் சொல்கிறார்.தொடரை உடனே நிறுத்த வேண்டும்.
இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதமோ அல்லது சாலை மறியலோ செய்யப்போவதாகச்
சொல்கிறார்கள் தூர்தர்ஷன் அலுவலகத்தில் வீற்றிருந்த மாதரசிகள். சுஜாதாவை
கண்ணகி பார்வை பார்க்கிறாரகள்."இந்தக் கதை தொடர்கதையாக வந்தபோது லட்சக்கணக்கான
வாசகர்களால் படிக்கப் பெற்று, அதன்பின் புத்தகமாக நான்கு பதிப்புகள்
வந்துவிட்டது. இதுவரை யாருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே! இதுதான்
ஆச்சரியமாக இருக்கிறது!" சொல்லியிருக்கிறார் வாத்யார். அவர்கள்
கவலைப்படவில்லை. கதை நிறுத்தப்பட வேண்டும். இல்லை திருத்தப்பட வேண்டும்.
அவ்வளவுதான். பீரியட்!நடராஜன் ஓர் அரசாங்க அதிகாரியின் சாமர்த்தியத்துடன்
தீர்ப்பளித்தார். "இதை நான் டில்லிக்கு ரிப்போர்ட்டாக அனுப்புகின்றேன்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து தக்க நடவடிக்கை எடுக்கலாம்,"
என்றார். டில்லிக்குப் போய் திரும்பி வருவதற்குள் அந்த சீரியலின் குறுகிய வாழ்
நாளான பதிமூன்று வாரம் முடிந்து விட்டது. அதன்பின் அதை யாரும்
கண்டுகொள்ளவில்லை.*
*இந்தத் தொடருக்கு மாதர் சங்கங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தன என்று சுஜாதா
போலவே நாமும் குழம்பிப் போகின்றோம். ஒரு பெண்ணை ஆபாசப் படம் எடுத்ததற்கா?
இல்லை தகாத உறவு வைத்திருக்கும் சில பாத்திரங்களுக்காகவா? புரியவில்லை.*
*புரியாதுதான்.இன்றைய காலகட்டத்தில்,  அருவருக்கத்தக்க உறவுகள் இல்லாத டி.வி.
சீரியல்களே இல்லை என்ற நிலைமையில் இப்போதைய மக்களுக்கு முப்பது சொச்சம்
வருடங்கள் பின்னோக்கிப் பயணிப்பது கடினம்தான்.*
------
*TRUTH SOMETIMES TRIUMPHS*

*Sujatha- A special lookIn 1984, Sujatha wrote a series on Ananda Vikatan,
"Mouth itself wins sometimes". And then it started coming in serial on
Doordarshan.Sujada's stunning commentary starts in the first episode.The
brown colour sun raised the city of Chennai which did bad things on June
thirteenth when the story starts. With sleepy eyes, ninety cent of steegals
went to buy plastic bag milk.Voters were wetting the posters written by the
election. Kannamapettai women took drunk husbands in hand. Elders ran on
canvas legs for longevity on the edge of Main Road.The old-fashioned house
which entered Moosasset Street past the Pillaiyar temple, past the KP
Pictures board and painted yellow in some of the central terrace houses,
the dog barks before entering. There is no adversity. The dog is a pet.
Something barks at Shastra; Mork licks curry. Eating appalam. The name is
Seenu.The dog who came and stuck at Rangasamy Ayyangar's house for a day. A
jum biscuit shows the mother and the golden mother. Have you seen...!
Barking and instantly wagging at you perfect alien. Av at the room entrance
if past that left. The board has been put as Vijayakumar. That's where
Jolly is for us. Don't knock on the door. And it remains open. Avie. Room
can watch until the V mask is done.Hero gives so much details to introduce
Vijayakumar. But nothing is boring. Story brief is Evie. V lies to her
homeowner's teenage daughter on a thick tour and takes pornography. Why did
he take, there is a 'red roses' story inside him. The matter is being read
with the help of the hero. But social workers and media don't just stay,
making things big for their needs. They don't care about Viji's
future.Rangasamy Ayyankar teaching maths to his daughter Surya. Surya with
infant, "If a man and a woman do the same thing in an hour, how many hours
will two men and two women do the same thing? " That's what she looked at
daddy. Shrink the Iyangar forehead, "What a man and a woman do is keep it
as 'X'... Said ". The wife who entered, "Is this what the child is telling?
" She is saying. 'What to do. It is put in the book...? "Express speed
takes after more comedy. To all the studies who are studying while Vinod is
planning to take Viji who is going to tour. How Sujata affects readers when
they know how social workers and media operate irresponsible and causes
Viji's handloom.Short story only means a toxic decision is necessary?
Sujada makes her mark and justify the title in the final episode that it is
possible in short novels.Vinoth, the son of millionaire Ramgopal, who grows
up in a hotel without the love and embrace of his parents and wandering in
hatred and frustrated due to the rich disorders of his parents, is a
soulful satisfaction in photographing women without clothes. He is
kidnapping a seventeen year old girl named Chitra from picnic by lying.
That incident describes how Chitra's life changed and the events that
happen after that incident. Honesty sometimes wins.Innocent Brahmin woman
Chitra, Vijayakumar, who makes her do everything she can with love and
crime towards Chitra, feminist Nithya, who writes a series on the incident
and tries to make the 'Girl' magazine famous, the character works like
Muthusamy, Dr. Saradamma are amazing. The way Vinod showed how parental
mistakes affect their children, conversations with Saradamma Nithya,
Ramgopal - Muthusamy meeting, Muthusamy Nithya interaction in the final
episode and Chitra - Viji conversation were all outstanding. Sujada
succeeded in portraying Vinoth as a villain but suffering from misparenting
and parental lack of discipline.Among the social novels written by Sujatha,
I think "TRUTH i sometimes wins".Sevant channel gem came in Narayanan's
inbox. Sevant Channel Narayanan said that when he took Sujatha's novel
"Vaimaiye (sometimes) wins" as a serial on Doordarshan and completed four
episodes, the series cannot be published on TV. The serial title is like
telecasting "Satyameva Jayate" - ("Verbality will win") as the sentence of
Indian government moto, they changed the title to "Can't forget" when it
cannot be allowed on government TV.Thinking this can be published as a
television series, Doordarshan director Natarajan calls sujada when it was
telecasting on Doordarshan. Some mother organizations are protesting that
serial so he should come to the station immediately.The series needs to be
stopped immediately. Madrasis in the Doordarshan office say they are going
to fast or roadblock till death. Kannagi is looking at Sujada."When this
story came into a series, it was read by millions of readers, and then it
appeared four versions as a book." No one has ever protested this! This is
what is amazing! " Wathyar has said. They don't care. The story needs to
stop. No need to be corrected. That's it. Period!Natarajan judged with the
strength of a government officer. "I am sending this as a report to Delhi.
Let's take action by seeing what they are saying," said. Thirteen weeks of
short life of the serial is over before returning from Delhi. So nobody
cared about it.We are also confused just like Sujatha as to why Mathar
unions opposed this series. Is it for taking a porn picture of a girl? Nah
for some roles having a bad relationship? Just don't understand.Just don't
understand. Nowadays, acid eggs, disgusting    relations free T. V. It is
difficult for people to travel back thirty years in a situation where there
are no serials.*

-- 
You received this message because you are subscribed to the Google Groups
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/iyer123/1450550902.1518275.1698248440204%40mail.yahoo.com
<https://groups.google.com/d/msgid/iyer123/1450550902.1518275.1698248440204%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopB987%2B%3Dx%3D9LCtgR6yxhwHh5qbP23crm4qjdxUS%2BJz%3DPQ%40mail.gmail.com.

Reply via email to