J: நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசனின் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால் தான் ஈசனின் அருளைப் பெற முடியும். எனவே தான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்" என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. KR நந்தி என்பவர் ஈசன் வாயில் காப்பாளர். அவ்வளவுதான். அவருக்கு யாரையும் தடுத்து நிறுத்த முடியாது. வந்தவரை மரியாதையுடன் இருக்கச் சொல்லிவிட்டு, எஜமானனின் உத்தரவு எதுவோ அதுதான் செய்ய முடியும். Nandi is only a gate keeper of Esan. So he can request only the visitor to wait and implement what his boss tells him to do. KR IRS 131123
---------- Forwarded message --------- From: Jambunathan Iyer <[email protected]> Date: Mon, 13 Nov 2023 at 09:27 Subject: Happy Pradhosam To: Rajaram Krishnamurthi <[email protected]>, ARR < [email protected]>, YM - markandeya101091 < [email protected]>, venkat giri <[email protected]>, Yeddanapudi Markandeyulu <[email protected]>, SRIRAMAJAYAM < [email protected]>, Sridhar Srinivasan(Sanadhana Gmail) < [email protected]>, gopala krishnan <[email protected]>, Chittanandam V R <[email protected]>, N. Sekar <[email protected]> நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்.. நந்தி பெருமானின் சிறப்பம்சங்கள் என்னென்ன? நந்தி தேவரின் சிறப்பம்சங்கள்..!! நந்தி சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் ஒரு காளையாக சித்தரிக்கப்படுகிறார். இவர் கைலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார். நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசனின் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால் தான் ஈசனின் அருளைப் பெற முடியும். எனவே தான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்" என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. சிவன் கோயில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி தேவரை "தர்ம விடை" என்று சொல்வார்கள். அழிவே இல்லாமல் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம் தான் ஈசனைத் தாங்கி நிற்கின்றது. கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது. நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார். சிவராத்திரியின் போதும், பிரதோஷ காலத்தின் போதும் இறைவனுடன் அங்கு அருள்பாலிக்கும் நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பர். நந்தியின் நான்கு கால்களும் சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் ஆகிய நான்கு வகையான குணத்தை வெளிப்படுத்துவதாக ஐதீகம். சிவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். சிவாலயங்களில் உள்ள நந்தி மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி உள்ளபடி இருக்கும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவபெருமானின் ஆணைக்கேற்ப அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தி தான். இவரை வழிபட்டாலே சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். நந்தியின் காதுகளில் நமது பிரச்சனைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார் எனபது நம்பிக்கை. பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக்கொண்டார். அதைத் தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம். பிரதோஷ பூஜையில் நந்திக்குத் தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிபட்டதற்கு ஒப்பாகும். N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004 *" What you get by achieving your goals is not as important as what you become by achieving your goals. If you want to live a happy life, tie it to a goal, not to people or things "* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZood7WgR-mx4HsGxyXkc4S8FGh1mAeKK72fz9pGoLSaY3A%40mail.gmail.com.
