Thanks.

I have heard this pasuram being sung beautifully by Jesudas.

I did not know the full meaning then but now know it and enjoy it even more.

Thanks again.

N Sekar

Sent from Yahoo Mail on Android
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_>

On Wed, Nov 15, 2023 at 7:56 AM, Chittanandam V R
<[email protected]> wrote:

*தாயின் தவிப்பு *

*சுஜாதா *

திருவாய்மொழியில், ஒரு தாய் தன் மகளை பற்றிக் கவலைப்படுவதாக,
சில சுவையான பாடல்களை நம்மாழ்வார் இயற்றியிருக்கிறார்.

இந்தப் பெண்ணை என்ன செய்வதென்று தெரியவில்லை என ஆதங்கப்படுகிறார்.
ராஜாக்களைப் பார்த்தால், பெருமாளைப் பார்த்தேன் என்கிறாள்; எந்த சித்திரத்தைப்
பார்த்தாலும் பெருமாள் படம் என்கிறாள்; எந்தக் கோயிலைப் பார்த்தாலும்
பெருமாள் கோயில் என்கிறாள்; துக்கமோ, சந்தோஷமோ எப்போதும் ஓயாமல்
கண்ணனின் பாதங்களை விரும்புகிறாள்.

பாடலைப் பார்க்கலாம்.

*திருஉடை மன்னரைக் காணில், திருமாலைக் கண்டேனே என்னும்,*
*திருவுடை வண்ணங்கள் காணில், உலகளந்தான் என்று துள்ளும்;*
*கருவுடைத் தேவு இல்கள் எல்லாம் கடல் வண்ணன் கோயிலே என்னும்;*
*வெருவிலும் வீழ்விலும் ஓவாள்; கண்ணன் கழல்கள் விரும்புமே!*

(திருவுடை = செல்வந்தரான; உருஉடை வண்ணங்கள் = நல்ல வர்ணமயமான
சித்திரங்கள்; உலகளந்தான் = உலகத்தை அளந்த வாமனன்; கருவுடைத்
தேவு இல்கள் = கர்ப்பக் கிரஹங்களில் உள்ள தெய்வங்கள்; வெருவிலும்
வீழ்விலும் = அஞ்சியபோதும், மோகித்த போதும்)

பெண்கள் காதல் வசப்பட்டால் பெற்றோருக்கு எப்போதும் கவலைதான்.
அது மனிதக் காதலோ, தெய்வக் காதலோ... எதுவாயினும். இந்தப் பெண்
'கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று' தாவி ஏறிக்கொள்ளத்
தவிப்பாளாம். அந்தத் தாயால், இவளை என்ன செய்ய முடியும்?

பாவம் அந்தத் தாய்!

*- சுஜாதா *

*************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/iyer123/1590507231.3067996.1700020705832%40mail.yahoo.com
<https://groups.google.com/d/msgid/iyer123/1590507231.3067996.1700020705832%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcvPp%3D0dT1qXAYphB%2Bs%2BJM795fqmG9YOtC4FW6DxgY0bQ%40mail.gmail.com.

Reply via email to