ரூ.2000 அனுப்ப இனி படாத பாடு.. Google Pay, Paytm யூசர்களுக்கு புதிய விதிகள்..
ஜன.1முதல் அமலுக்கு வந்தது!

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 5 புதிய யுபிஐ விதிகள்  மற்றும்
ஒழுங்குமுறைகள் (New UPI Rules and Regulations) அமலுக்கு வந்துள்ளன.
நடைமுறைக்கு வந்துள்ள புதிய யுபிஐ விதிகள் பற்றி ஒவ்வொரு கூகுள் பே, பேடிஎம்,
போன்பே ஆப் பயனர்களும் தெரிந்துகொள்ள வேண்டியவிஷயங்கள் இதோ:

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI) அறிவித்துள்ள புதிய யுபிஐ
விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆனது ஆன்லைன் பேங்கிங் (Online Banking)
மற்றும் கட்டண பரிவர்த்தனை (Payment Transaction) அனுபவத்தில் கணிசமான
மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்ககத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

01. யுபிஐ ஐடி செயலிழக்கும்! ஆக்டிவ் ஆக உள்ள யுபிஐ ஐடிகளை (UPI ID)
சரிபார்த்து பராமரிக்க கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) போன்ற
பேமெண்ட் ஆப்கள் கட்டாயம் தேவை. இல்லையென்றால் என்பிசிஐ (NPCI) என்று
அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation
of India), ஒரு வருடத்திற்கு பிறகு செயலற்ற யுபிஐ ஐடிகளை செயலிழக்க செய்யும்.

02. ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம்! மருத்துவமனைகள் மற்றும் கல்வி
நிறுவனங்களுக்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பானது ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5
லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பணக் கொள்கை குழு கூட்டத்தை (Monetary policy
committee meeting) தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதியானது அதிக
அளவிலான பத்தை ஆன்லைன் வழியாக மிகவும் எளிமையாக செலுத்த உதவும் என்பதில்
சந்தேகமே வேண்டாம்!

03. ரூ.2000 அனுப்ப 4 மணி நேரம்! முதல் முறையாக ஒரு புதிய பெறுநர்களுக்கு ரூ.
2,000 க்கு மேல் பணம் செலுத்த 4 மணிநேர விண்டோவை (அதாவது குறிப்பிட்ட
நடவடிக்கைக்காக ஒதுக்கப்படும் கால அளவை) ஆர்பிஐ முன்மொழிகிறது. இந்த
கட்டுப்பாடானது டிரான்ஸ்சாக்ஷன் ரிவர்சல் (Transaction reversal) அல்லது
டிரான்ஸ்சாக்ஷன் மாடிஃபிகேஷன் (Transaction modification) விருப்பத்தில் பெரிய
அளவிலான மேம்பாடுகளை கொண்டுவரும்.

04. 1.1% கட்டணம்! குறிப்பிட்ட மெர்ச்சண்ட் யுபிஐ (Merchant UPI)
பரிவர்த்தனைகள் ரூ.2,000 க்கு மேல் இருந்தால் மற்றும் ஆன்லைன் வாலட்கள் (Online
wallets) போன்ற ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகளை (Prepaid Payment Instruments -
PPI) உள்ளடக்கியிருந்தால்.. 1.1 சதவீதவீம் பரிமாற்ற கட்டணம் (Interchange fee)
இருக்கும்.

05. பேங்க் அக்கவுண்ட் பெயர் காட்சிப்படுத்தப்படும்! 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1
ஆம் தேதி முதல், நீங்கள் ஒருவருக்கு யுபிஐ ஆப்களை (UPI Apps) பயன்படுத்தி பணம்
செலுத்தும்போது, அந்த நபரின் வங்கி கணக்கின் உண்மையான பெயர் (Actual Name of
the Person's Bank Account) ஸ்க்ரீனில் காட்டப்படும்.

ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசவீஸ் (Hitachi Payment Services) ஆனது என்பிசிஐ உடன்
இணைந்து, இந்தியாவின் முதல் யுபிஐ ஏடிஎம்-ஐ (UPI ATM) அறிமுகப்படுத்தி உள்ளது
என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது க்யூஆர் குறியீட்யீ டை ஸ்கேனிங்
செய்வதன் மூலம் பணத்தை எடுக்க அனுமதிக்கும் ஒரு வசதியாகும். இவ்வகை யுபிஐ
ஏடிஎம்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்வதற்கான திட்டங்கள் உள்ளன.

கடைசியாக என்பிசிஐ-யின் யுபிஐ ஃபார் செகண்டரி மார்க்கெட் (UPI for Secondary
Market) பீட்பீ டா கட்டத்தில் (Beta Phase) நுழைகிறது என்பதும் இங்கே
குறிப்பிடத்தக்கது. இது ஃபண்ட்ஸ் போஸ்ட்-ட்ரேட் கான்பிரமேஷனை பிளாக்
செய்வது (Block
funds post-trade confirmation) மற்றும் கிளியரிங் கார்ப்ரேஷன்ஸ் (Clearing
Corporations) வழியாக டி1 அடிப்படையில் பணம் செலுத்துதல் (Settle payments on
a T1 Basis) போன்றவைகளை செய்ய வரையறுக்கப்பட்ட பைலட் கஸ்டமர்கள் அனுமதிக்கிறது.

---------------------------------------------------------------------------

No need to send Rs.2000 anymore.. New rules for Google Pay, Paytm users..
Effective from Jan. 1!

New UPI Rules and Regulations have come into effect from 1st January 2024.
Here's what every Google Pay, Paytm, PhonePay app user needs to know about
the new UPI rules that have come into effect:

The new UPI rules and regulations announced by the Reserve Bank of India
(RBI) are designed to bring significant improvements in the online banking
and payment transaction experience.

01. UPI ID will fail! Payment apps like Google Pay and PhonePe are required
to verify and maintain active UPI IDs. Otherwise the National Payments
Corporation of India, also known as NPCI, will deactivate inactive UPI IDs
after one year.

02. From Rs.1 lakh to Rs. 5 lakh! UPI transaction limit for hospitals and
educational institutes has been increased from Rs.1 lakh to Rs. 5 lakh has
been raised. There is no doubt that this new rule announced after the
Monetary policy committee meeting will make it much easier to pay large
amounts of tax online!

03. 4 hours to send Rs.2000! The RBI proposes a 4-hour window (i.e. a time
frame set aside for a specific activity) for first-time payments above Rs
2,000 to a new recipient. This control provides major improvements in the
option of transaction reversal or transaction modification.

04. 1.1% Fee! If certain Merchant UPI transactions are above Rs.2,000 and
involve Prepaid Payment Instruments (PPI) such as online wallets, there
will be an interchange fee of 1.1 percent.

05. Bank account name will be displayed! From January 1, 2024, when you pay
someone using UPI Apps, the Actual Name of the Person's Bank Account will
be displayed on the screen.

It is also worth noting here that Hitachi Payment Services has partnered
with NBCI to launch India's first UPI ATM. It is a facility that allows you
to withdraw money by scanning a QR code. There are plans to introduce such
UPI ATMs across the country.

Finally, NBCI's UPI for Secondary Market is entering Beta Phase. It allows
limited pilot customers to block funds post-trade confirmation and settle
payments on a T1 Basis through Clearing Corporations.            K RAJARAM
IRS  3 1 24

------------------------------------------------------------------------------

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoom_r9fMt-fO9iyyS%3DxQOknBeJZbtk%2Bd289fxqz7HCdsw%40mail.gmail.com.

Reply via email to