வட அட்லாண்டிக் கடலில் பெர்முதா (Bermuda) மியாமி (Miami.) பியூர்டோரிகோ (
Fuerto Rico)  ஆகிய மூன்று துறை முகங்களை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால்
 கிடைக்கும் பகுதியே பிசாசு முக்கோணம் எனப்படும் பெர்முதா முக்கோணம் ஆகும்.
உலக விஞ்ஞானிகள் பலருக்கும் புதிராகவும் சவாலாகவும் திகழும் இம்முக்கோணத்தின்
 இயல்பு  வியப்பானதும்   அச்சமூட்டக் கூடியதும் ஆகும்.

   இம்முக்கோணப்பகுதியில் காணப்படும் கடல் நீரின் மேற்பகுதி
பேரெழிலுடன் காணப்படுவதுடன் கிளர்ச்சி
ஊட்டுவதாகவும் இருந்த போதிலும் இதன் ஆழத்தில் ஆற்றல் வாய்ந்த நீரோட்டங்கள்
உள்ளன. கடந்த 160 ஆண்டுக் கணக்கின்படி இவ்வெல்லைக்குள் நுழைந்த கலங்களுள்   40
கப்பல்களும்,   20 விமானங்களும்  எண்ணற்ற சிறுமரக்கலங்களும் மாயமாய்
மறைந்துபோய்விட்டன.

   1872 ஆம் ஆண்டில் மேரி செலஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக்கப்பல் மறைந்த
நிகழ்ச்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை பெர்முதா
முக்கோணப் பரப்பினை
(இரண்டரைமில்லியன் சதுரக் கிலோமீட்டர்) கடந்து செல்லும் விமானங்கள்,கப்பல்கள்
மாயமாய் மறைவதும், பின்னர் அவை பற்றிய ஒரு சிறு தடயமும் கிட்டாமல் போவதும்
உலகின் மிகப் பெரிய வினாவாக நம்முன் காட்சியளிக்கின்றன.

  உலகின் புகழ்பெற்ற விஞ்ஞானி, திரு. ஜெ.எம். வாலண்டைன், இப்படிப்பட்ட
நிகழ்ச்சிகளில் மறைந்த கப்பல்களும் விமானங்களும் எங்கேயும் போய்விடவில்லை. அவை
அதே இடத்தில் வேறு பரிமாணத்தில் இருக்கின்றன என்று கூறுகிறார்.

     அமெரிக்க நாட்டின் மேதை எட்கர்கேஸ், தம் அபூர்வ ஜோதிட திறமையின் மூலம்
அட்லாண்டிக் கடலினுக்குள்   புதைந்திருக்கின்ற    அட்லாண்டிக் நகரம் ஒரு
சக்திமையத்தால் கடலுக்கடியில் வாழ்பவர்களால் இழுத்துச் செல்லப்பட்டது
 என்றும்,  அவர்களால் அந்த நகரத்தை மேலே வரச்செய்ய இயலும் என்றும்
 எழுதியிருக்கிறார்.

  படிகங்களில் இருந்து உருவாகும் சக்திவாய்ந்த ஒளி ரேகைகள் இந்தப் பகுதியில்
வரும் விமானங்களையும், கப்பல்களையும் வேறு பரிமாணத்திற்க்கு மாற்றிக் காற்றில்
மாயமாய் மறையச் செய்கின்றன என்பதும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளக்  கூடியதாய்
 உள்ளது.

   பெர்முதா முக்கோணப் பகுதியின் நேர் மறுபுறம் உள்ள (பூமி உருண்டையில் சரியாக
அதன் மறுமுனை)  ஜப்பான் நாட்டுத் தென் கிழக்குக் கடற்பகுதி ‘ பிசாசுக் கடல்’
என்றே நெடுங்காலமாக அழைக்கப்பட்டுவருகிறது.’ அதுமட்டுமல்ல! இங்கேயும் பல
கப்பல்கள் மாயமய் மறைந்திருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் காந்த முள்
மாறுபாடு (Magnetic Variation) மிகக் குறைவாகவே உள்ளது. என்வே இரண்டு கடல்
பகுதிகளின் மாயத்திலும் ஏதோ தொடர்பும் ஒரு பொதுக் காரணமும் இருக்க வேண்டும்.

  அண்மைக்கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப்பொருள்களும்   தமக்குள்
உள்ளடக்கிய சக்தியைப் பெற்றிருப்பதாகவும், திடப்பொருள் யாவும் (Congealed Energy)
மறு வடிவம் என்றும் இந்த சக்தி ஒவ்வோர் அணுவுக்குள்ளும் இயங்குகின்ற
எலக்ட்ரான் வடிவத்தில் உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

   இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய ‘காலம்’  ‘Time’

 என்னும் பரிமாணத்தில் திருப்பிச் செயல்படவைத்தால், அதாவது ஒரு திடப்பொருள்
உருவாவது என்கிற செயல்முறையைத் தலை கீழாகச் செயல்படவைத்தால், அப்படிச் செய்யும்
போது எல்லாப் பொருளும் மூலப்பொருளாகிற பரமாணுக்களாக மாறிக் காற்றில்
கலந்துவிடும்.என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

  இப்படிப்பட்ட செயல் முறைக்கு, எதிர்பொருள் ‘செயல் திறன்’ (Anti Matter)
என்று பெயரிய்யுள்ளார்கள்..

  பெர்முதா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்பொருள் செயல்திறனாக இருக்கலாம்
என்பது அண்மைக்கால முடிவு. இந்த எதிர்பொருள் செயல்திறனே பொருளின் ஐந்தாவது
பரிமாணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

-=-=-=-=-=-=-=-=<o><o>-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<o><o>-=-=-==-=-==-=-

நன்றியுடன்: 1986 இல் பதிப்பிக்கபட்ட ஒரு பழைய புத்தகதினின்றும் இக்கட்டுரையை
எடுத்து தட்டச்சு செய்துள்ளேன். ஆசிரியர் திரு. சாயபு மரைக்காயர், காரைக்கால்.

இந்த மர்மம் தற்போது அவிழ்க்கபட்டுவிட்டதா? தொடர்புடைய ர்தொடர் நிகழ்வுகள்
ஏதேனும் நிகழ்ந்து வெளிச்சத்திற்கு வந்தனவா என்பதை தெரிந்தவர்கள் தெரிவித்தால்
நலம்.

அன்புடன் வெ சுப்பிரமணியன் ஓம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
<https://twitter.com/intent/tweet?url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2Fu%2F0%2F%23drafts%3Fcompose%3DDmwnWsTJtbRcNmPjnSsXWJdxFqPhCnTSwDCTFgbKRGKDfMfKncxpCfMDkMdqMCWbRSTKSnKjqVpG&text=Drafts%20(530)%20-%20v.dotthusg%40gmail.com%20-%20Gmail>
<?subject=Drafts%20(530)%20-%20v.dotthusg%40gmail.com%20-%20Gmail&body=Drafts%20(530)%20-%20v.dotthusg%40gmail.com%20-%20Gmail%0D%0Ahttps%3A%2F%2Fmail.google.com%2Fmail%2Fu%2F0%2F%23drafts%3Fcompose%3DDmwnWsTJtbRcNmPjnSsXWJdxFqPhCnTSwDCTFgbKRGKDfMfKncxpCfMDkMdqMCWbRSTKSnKjqVpG>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvQpTDzpFDGi1zvj6boHgqTqCGDu4gk6CiCZfFBXg4MWQ%40mail.gmail.com.

Reply via email to