Thanks Sir.

Years back, in fact more than two decades back, I read a book called  " The
Bermuda Triangle" and I remembered it when I read your Mail.

If I am not mistaken, there was a film also by that name.

N Sekar

On Fri, Jan 5, 2024, 11:59 AM Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> வட அட்லாண்டிக் கடலில் பெர்முதா (Bermuda) மியாமி (Miami.) பியூர்டோரிகோ (
> Fuerto Rico)  ஆகிய மூன்று துறை முகங்களை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால்
>  கிடைக்கும் பகுதியே பிசாசு முக்கோணம் எனப்படும் பெர்முதா முக்கோணம் ஆகும்.
> உலக விஞ்ஞானிகள் பலருக்கும் புதிராகவும் சவாலாகவும் திகழும் இம்முக்கோணத்தின்
>  இயல்பு  வியப்பானதும்   அச்சமூட்டக் கூடியதும் ஆகும்.
>
>    இம்முக்கோணப்பகுதியில் காணப்படும் கடல் நீரின் மேற்பகுதி   பேரெழிலுடன் 
> காணப்படுவதுடன் கிளர்ச்சி
> ஊட்டுவதாகவும் இருந்த போதிலும் இதன் ஆழத்தில் ஆற்றல் வாய்ந்த நீரோட்டங்கள்
> உள்ளன. கடந்த 160 ஆண்டுக் கணக்கின்படி இவ்வெல்லைக்குள் நுழைந்த கலங்களுள்
>  40 கப்பல்களும்,   20 விமானங்களும்  எண்ணற்ற சிறுமரக்கலங்களும் மாயமாய்
> மறைந்துபோய்விட்டன.
>
>    1872 ஆம் ஆண்டில் மேரி செலஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக்கப்பல்
>  மறைந்த நிகழ்ச்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை பெர்முதா
> முக்கோணப் பரப்பினை (இரண்டரைமில்லியன் சதுரக் கிலோமீட்டர்) கடந்து செல்லும்
> விமானங்கள்,கப்பல்கள் மாயமாய் மறைவதும், பின்னர் அவை பற்றிய ஒரு சிறு
> தடயமும் கிட்டாமல் போவதும் உலகின் மிகப் பெரிய வினாவாக
> நம்முன் காட்சியளிக்கின்றன.
>
>   உலகின் புகழ்பெற்ற விஞ்ஞானி, திரு. ஜெ.எம். வாலண்டைன், இப்படிப்பட்ட
> நிகழ்ச்சிகளில் மறைந்த கப்பல்களும் விமானங்களும் எங்கேயும் போய்விடவில்லை.
> அவை அதே இடத்தில் வேறு பரிமாணத்தில் இருக்கின்றன என்று கூறுகிறார்.
>
>      அமெரிக்க நாட்டின் மேதை எட்கர்கேஸ், தம் அபூர்வ ஜோதிட திறமையின் மூலம்
> அட்லாண்டிக் கடலினுக்குள்   புதைந்திருக்கின்ற    அட்லாண்டிக் நகரம் ஒரு
> சக்திமையத்தால் கடலுக்கடியில் வாழ்பவர்களால் இழுத்துச் செல்லப்பட்டது
>  என்றும்,  அவர்களால் அந்த நகரத்தை மேலே வரச்செய்ய இயலும் என்றும்
>  எழுதியிருக்கிறார்.
>
>   படிகங்களில் இருந்து உருவாகும் சக்திவாய்ந்த ஒளி ரேகைகள் இந்தப் பகுதியில்
> வரும் விமானங்களையும், கப்பல்களையும் வேறு பரிமாணத்திற்க்கு மாற்றிக்
> காற்றில் மாயமாய் மறையச் செய்கின்றன என்பதும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளக்
> கூடியதாய் உள்ளது.
>
>    பெர்முதா முக்கோணப் பகுதியின் நேர் மறுபுறம் உள்ள (பூமி உருண்டையில்
> சரியாக அதன் மறுமுனை)  ஜப்பான் நாட்டுத் தென் கிழக்குக் கடற்பகுதி ‘
> பிசாசுக் கடல்’ என்றே நெடுங்காலமாக அழைக்கப்பட்டுவருகிறது.’ அதுமட்டுமல்ல!
> இங்கேயும் பல கப்பல்கள் மாயமய் மறைந்திருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும்
> காந்த முள் மாறுபாடு (Magnetic Variation) மிகக் குறைவாகவே உள்ளது. என்வே இரண்டு
> கடல் பகுதிகளின் மாயத்திலும் ஏதோ தொடர்பும் ஒரு பொதுக் காரணமும் இருக்க
> வேண்டும்.
>
>   அண்மைக்கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப்பொருள்களும்   தமக்குள்
> உள்ளடக்கிய சக்தியைப் பெற்றிருப்பதாகவும், திடப்பொருள் யாவும் (Congealed Energy)
> மறு வடிவம் என்றும் இந்த சக்தி ஒவ்வோர் அணுவுக்குள்ளும் இயங்குகின்ற
> எலக்ட்ரான் வடிவத்தில் உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.
>
>    இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய ‘காலம்’  ‘Time’
>
>  என்னும் பரிமாணத்தில் திருப்பிச் செயல்படவைத்தால், அதாவது ஒரு திடப்பொருள்
> உருவாவது என்கிற செயல்முறையைத் தலை கீழாகச் செயல்படவைத்தால், அப்படிச் செய்யும்
> போது எல்லாப் பொருளும் மூலப்பொருளாகிற பரமாணுக்களாக மாறிக் காற்றில்
> கலந்துவிடும்.என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
>
>   இப்படிப்பட்ட செயல் முறைக்கு, எதிர்பொருள் ‘செயல் திறன்’ (Anti Matter)
> என்று பெயரிய்யுள்ளார்கள்..
>
>   பெர்முதா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்பொருள் செயல்திறனாக 
> இருக்கலாம்
> என்பது அண்மைக்கால முடிவு. இந்த எதிர்பொருள் செயல்திறனே பொருளின் ஐந்தாவது
> பரிமாணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
>
> -=-=-=-=-=-=-=-=<o><o>-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<o><o>-=-=-==-=-==-=-
>
> நன்றியுடன்: 1986 இல் பதிப்பிக்கபட்ட ஒரு பழைய புத்தகதினின்றும் இக்கட்டுரையை
> எடுத்து தட்டச்சு செய்துள்ளேன். ஆசிரியர் திரு. சாயபு மரைக்காயர், காரைக்கால்.
>
> இந்த மர்மம் தற்போது அவிழ்க்கபட்டுவிட்டதா? தொடர்புடைய ர்தொடர் நிகழ்வுகள்
> ஏதேனும் நிகழ்ந்து வெளிச்சத்திற்கு வந்தனவா என்பதை தெரிந்தவர்கள்
> தெரிவித்தால்  நலம்.
>
> அன்புடன் வெ சுப்பிரமணியன் ஓம்
>
> ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
>
> <https://twitter.com/intent/tweet?url=https%3A%2F%2Fmail.google.com%2Fmail%2Fu%2F0%2F%23drafts%3Fcompose%3DDmwnWsTJtbRcNmPjnSsXWJdxFqPhCnTSwDCTFgbKRGKDfMfKncxpCfMDkMdqMCWbRSTKSnKjqVpG&text=Drafts%20(530)%20-%20v.dotthusg%40gmail.com%20-%20Gmail>
>
> <?subject=Drafts%20(530)%20-%20v.dotthusg%40gmail.com%20-%20Gmail&body=Drafts%20(530)%20-%20v.dotthusg%40gmail.com%20-%20Gmail%0D%0Ahttps%3A%2F%2Fmail.google.com%2Fmail%2Fu%2F0%2F%23drafts%3Fcompose%3DDmwnWsTJtbRcNmPjnSsXWJdxFqPhCnTSwDCTFgbKRGKDfMfKncxpCfMDkMdqMCWbRSTKSnKjqVpG>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvQpTDzpFDGi1zvj6boHgqTqCGDu4gk6CiCZfFBXg4MWQ%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvQpTDzpFDGi1zvj6boHgqTqCGDu4gk6CiCZfFBXg4MWQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zc2K3NPRDwn53PhZFiSSbTj2TgTomyA5EZmvOh-eoVxEA%40mail.gmail.com.

Reply via email to