Quite interesting. I wrote just now on villi-bharatham, about dravida
datvam kanimozhi etc. Now I read it here. Either way connected to the south
is a matter of certainty.
1   Ramayanam is not less than 10000 years as per modern principles of
time. However, when there is evidence to show that in Africa people lived
50000 years back as nomadics, that will entice me to strengthen my
convictions that a civilised society advanced from raw status ought to have
existed 100000 year before in India. Normally a raw society takes time to
become civilised around 10 to 50000 years as per western science. Rama was
a civilised one bordering Nepal, his father in law home. {incidently today
morning I was commenting ,ayodhya means NO WAR ZONE; and ayogya in Tamil
means bad one; Nepal is the escape route for the bad ones; so all ayogyas
will go to Ayodhya as seeing Rama, and try to escape to Nepal; and so Govt
will have to tighten the security. } Monkeys were half human and maybe
Darwin was right  and one lakk year is only minimum for conversions.
Astrological setup described in V-Ramayanam shows that also; apart from
Sethu bridge measured by carbon dating.
2      Bharatha varsha is believed to be like our present Australia shape.
The width was wider than the length. That region comprised UAE and Greece
of today as well as Russia etc on the east where Name Volga river is
translated as Ganga here. and dandakaranyam and kishkinda were closer to
present Orissa; and Mahendra giri mountain is not only in TN but also in
east of Orissa if you see the map; that means, wide when crushed got
elongated and thrown into pieces of UAE Russia etc later; that means
Ramayana period exactly fit in according to the star position written by
Tilak and Bhatnagar my senior IRS . So Rama travelled across in a short
route than we presome along the length as south does appear.  Only the land
mass movement crushing the south kumari to north created land mass of
height called today as Himalayas. So Srilanka was in orissa close to sea;
even today there is a place called LANGKAWI there. This is not my figment
of imagination but books are so authentic right from Tilak the ORION.
Hence  visit to south is certain by Rama.
2  As Kishkinda ,Mahendra and Pampa river (not kerala but orissa and
andhra) etc spoken in the Valmiki Ramayanam do exist in the present south,
so they have come and gone.  SriLanka also moved down south. Dushyant
Sreedhar said: 1 Gujarat idol krishna had connection with the
Guruvayoorappan as Krishna's Kuladeivam; so too, Rana in Ayodhya had as his
kuladeivam Ranganathan of SriRangam where Vibeeshanna worshipped while
returning back and that sri rangam might have been in the oval shape
bharata varsha also. KR IRS  20124


On Sat, 20 Jan 2024 at 07:09, 'N Sekar' via iyer123 <
[email protected]> wrote:

> Pl Read, a wealth of information.
>
> N Sekar
>
> இராமனுக்கும் தமிழர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை/உண்டு என்று ஒரு
> பெரிய கலவரமே CLUB HOUSE ல் நடந்துகொண்டிருந்தது. நான் என்னதான் பேசுறாங்கனு
> கேட்கலாம்னு உள்ளே போனேனன். நான் உள்ளே சென்றதும் "பா" வந்திருக்கார்னு ஒரு
> சத்தம் கேட்டது. மனதிற்குள் என்னை எப்படிடா உங்களுக்கு தெரியும் என்ற கேள்வி
> எழும்பினாலும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவங்களுக்குள்ள
> என்னை பற்றி பேசினார்கள். பின்பு என்னை பேச அழைத்தார்கள். முக்கியமாக இராமர்
> கோவில் இடிப்பில் ஆரம்பித்து வடநாட்டு கடவுள் என்ற அதே நீர்த்துபோன
> உருட்டைத்தான்‌ உருட்டிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் நேரம்போகவில்லை என்பதால்
> Mind Relax ஆகும்னு இன்வைட் அக்ஸப்ட் பண்ணி உள்ளே போனேன். உடனே குழு தலைவர்
> பவ்வியமாக பா இந்துவன் நீங்க பேசுங்க என்றார்.
>
> நான் உடனே என்ன பேசுறது சார்? இங்கே பேசும் அளவுக்கு நான் வரலாறு எதுவும்
> அறிந்தவன் இல்லை என்றும் உங்களிடமிருந்து எதாவது கற்றுக்கொள்ளலாம் என்றுதான்
> இங்கே வந்தேன் என்று கூறியதும் நீங்கள் யாரோட பக்கம் என்று கேட்டார்கள்.
> அதற்கு நான் ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தன் ஆகவே இராமனுக்கும் தமிழர்களுக்கும்
> மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று நம்புபவன் என்றேன். உடனே அங்கிருந்து ஒரு
> ஓரமாக டேய் இந்த “சங்கிய” குழுவை விட்டு ரிமூவ் பண்ணி விடுங்கடானு ஒரு சத்தம்
> கேட்டது. அதையெல்லாம் எனது அப்பாவித்தனமான பேச்சால் குழு நடுவர் கண்டுகொள்வதாக
> இல்லை.!
>
> குழு தலைவர் என்னிடம், சரி இராமருக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்
> என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் நான் இதற்கு பதில் சொல்லணும்னா உங்களைத்
> தவிர யாரும்  என்னை இடைமறிக்கக் கூடாது என்றேன். அதற்கு குழு தலைவர் சரி
> என்றார். உடனே நான், தமிழர்களுக்கும் இராமனுக்கும் உள்ள தொடர்பானது சங்க
> இலக்கியங்கள் துவங்கி பக்தி இலக்கியங்கள், கல்வெட்டுகள் செப்பேடுகள் என்று மிக
> விரிவானது என்று கூறி அவரிடம் இவற்றில் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று
> கேட்டேன். அதற்கு அவர் தமிழ் இலக்கியங்களா? என்று சற்று வியப்புடன், தமிழ்
> நூல்களில் இருந்து ஆரம்பியுங்கள் தோழரே என்று கூறினார். நானும் ஆரம்பித்தேன்.
>
> "கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
> மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
> தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
> நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே"
>
> - திருவருட்பா.
>
> நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! என்ன தோழரே இதுல ஸ்ரீராமர், தசரதர்
> என்றெல்லாம் வருகிறது? தமிழ் நூல்களில் எப்படி இதெல்லாம்? எதாவது சமஸ்கிருத
> ஸ்லோகத்தை சொல்றீங்கறா?
>
> குழு தலைவரே, இது சமஸ்கிருத ஸ்லோகம் எதுவுமில்லை. "திருவருட்பிரகாச வள்ளலார்"
> எழுதிய திருவருட்பா எனும் பொக்கிஷத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா??? அவர்
> எழுதிய "இராமநாமப் பதிகத்தின்" இரண்டாவது பாடலில் வரும் வரிகள் தான் இவை
> என்றேன்.
>
> ஐயோயோ வள்ளலார் ராமரை புகழ்ந்து எழுதியிருக்காரா? வள்ளலார் ஆரிய ராமனுக்கு
> எதிரானவர்னு தானே சொல்லி குடுத்தாங்க. படுபாவிக ஏமாத்திட்டானுகளா?  இல்ல நீங்க
> ஏமாத்துறீங்களா? ஒண்ணும் புரியலியே
>
> இப்போ நான் தொடர்ந்து சொல்லணுமா இல்லை நிப்பாட்டணுமா நண்பரே? உங்களுக்கு
> சந்தேகம் இருந்தா வீட்ல போய் பொறுமையா நான் சொல்வது சரியா தவறா என்று
> ஆய்ந்துகொள்ளுங்கள். இல்லைனா குழுவில் யாரையாவது இப்பாடலை மறுக்கச்சொல்லுங்கள்
> அல்லது என்னை பேச விடுங்கள் என்றேன்.
>
> குழுவில் ஒருவர், இந்த திருவருட்பா காலத்தால் பிந்தையது இல்லையா? அதுனால 18
> ஆம் நூற்றாண்டிற்கு முன்னாடி இதுபோல எதாவது பாடல் இருக்கா?
>
> உடனே நான் சோழர்கால கட்டிடக்கலைகள் பற்றி சொல்கிறேன் என்று கூறி
> ஆரம்பித்தேன்..
>
> "திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ  பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க
> மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக"
>
> தோழரே! தோழரே! நிப்பாட்டுங்க. நிப்பாட்டுங்க! சோழர் கட்டிடக்கலை பற்றி
> சொல்றதா சொல்லீட்டு இங்கயும் அயோத்தி ராமர்னு அயோத்தில கட்டுற ராமனுக்கு
> ரெபரன்ஸ் சொல்லீட்டு இருக்கீங்க??? ஏன்?
>
> இதுவும் சோழர்களின் கட்டிடக்கலை சம்பந்தமானதுதான் தோழரே. அதாவது காஞ்சிபுரம்
> கைலாசநாதர் கோவிலில் உள்ள காமாக்ஷி அம்மன் சந்நிதியில் கிடைத்த கல்வெட்டுகளின்
> அடிப்படையில் இது ஏற்கனவே இராமர் கோவிலாக இருந்ததாகவும் அது இடிந்துவிட்டதால்
> பிற்காலத்தில் அதை காமாட்சி அம்மன் கோவிலாக கட்டியுள்ளதாகவும் தொல்லியல்
> ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதற்கு சான்றாக பொ.ஆ. 941 ஆம் ஆண்டில்
> முதலாம் பராந்தகச் சோழனின் 34 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட இன்றுள்ள
> காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டு கூறுவதாவது,
>
> “திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ  பெருமாளுக்கு” நுந்தா விளக்கு எரிக்க
> மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக கொடுத்த
> தகவல் உள்ளது. இங்கே இராமன் இருக்குமிடம் அயோத்தி என்பதால்  அயோத்தி
> நின்றருளிய ஸ்ரீராகவன் என்று சான்று பகிர்வதாக குடந்தை சேதுராமன் கூறுகிறார்
> என்றேன்.
>
> ஐயோயோ சோழர்களின் கட்டிடக்கலையிலும் இராமர் கோவிலா தமிழர்களுக்கும்
> இராமருக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னானுக. இங்க பார்த்தால் சோழர்களே இராமர்
> கோவில் கட்டியிருக்காங்கனு சொல்றீங்களே? சரி சோழர்கள் மட்டும்தான்
> இராமர்கோவில் கட்டினார்களா? பாண்டியர்களின் கட்டிடக்கலைகளில் இராமர் கோவில்
> உள்ளதா?
>
> சரி சொல்றேன் கேளுங்க...
>
> "ஸ்ரீ ராகவேந்திர பெருமாளுக்கு வைத்த பத்துமா நிலம்"
>
> ஐய்யய்யோ நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க. என்ன நீங்க வள்ளலார்ல துவங்கி
> சோழர்கள், பாண்டியர்கள் என்று எல்லா இடத்திலும் இராமரை அடையாளப்படுத்துறீங்க?
> "ஸ்ரீ ராகவேந்திர பெருமாள்” என்றால் இராமனை தானே குறிக்கும்?
> இராமரை முன்னிறுத்தாத எதுவுமேஇல்லையா?  தமிழர்களுக்கும் இராமருக்கும்
> சம்பந்தமே இல்லைனு சொன்னானுக, நீங்க என்னடான்னா வள்ளலார் முதல் சோழர்கள்
> பாண்டியர்கள்னு தொடர்பு படுத்திக்கிட்டே போறீங்க? சரி சொல்ல வந்ததை முழுமையா
> சொல்லுங்க.
>
> அதாவது பொ.ஆ 863 ல் பாண்டியன் மாறஞ்சடையனின் இரண்டாம் ஆட்சியாண்டில்
> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி மனோன்மனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள
> கல்வெட்டில் இராமர் கோவிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்ட தகவல் உள்ளது. இந்த
> கல்வெட்டின் காலத்தை குடந்தை சேதுராமன் அவர்கள் இது வரகுணன் காலத்து
> கல்வெட்டாக இருக்கலாம் என்று எழுதியதோடு பொ.ஆ 864 க்கு முன்பே தமிழகத்தில்
> இராமர் கோவில்கள் இருந்துள்ளது என்ற தகவலை இக்கல்வெட்டுடன் சேர்த்து
> பதிவிட்டுள்ளார்..
>
> ஆதாரம் : (South Indian Inscription volume 14)
>
> குழுவில் ஒருத்தன்… அடேய் இவன உள்ள விடாதீங்கனு சொன்னேன் கேட்டீங்களா? இப்ப
> பாரு அவன் சொல்ற ஒண்ணு உண்மையா பொய்யானு தெரிஞ்சிக்குறதுக்குள்ள அடித்தடுத்து
> சொல்லீட்டே இருக்கான்.😡😡😡😡
>
> குழு தலைவர்…(இராமனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பவர்) தெரியாம
> உங்களை உள்ள இழுத்து விட்டுட்டேன் போலயே…இனிமேல் இந்த வாட்சப், முகநூல்
> பார்த்து வரலாறு பேசுறத நிப்பாட்டணும் முதல்ல. சரி தோழரே இராமனை விடுங்க
> இன்னொருநாள் பேசுவோம். எங்கள் முப்பாட்டன் முருகன் பற்றி எதாவது சொல்லுங்களேன்…
>
> (மனதிற்குள் ஓஓஓஓ நீ அண்ணனின் விழுதா???) முருகன் பற்றியா??சரி சொல்றேன்
> கேளுங்க என்றேன்.
>
> "எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக என்கண் வருக
> எனதாருயிர்வருக அபிராம இங்கு வருக அரசேவருக முலை உண்க வருக மலர் சூடிட வருக
> என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்"
>
> - திருப்புகழ்
>
> சகோதரரே நான் முருகனை பற்றிதானே கேட்டேன்? ஆனால் இதில் ரகுநாயகன், அபிராமன்,
> கோசலை என்றெல்லாம் வருகிறதே?
>
> விரிவாக சொல்றேன் கேளுங்க 🙂
>
> அதாவது கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ
> ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய்
> நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இராமனின் இந்த குழந்தைப்
> பருவத்தை உங்க முப்பாட்டனின் பரம பக்தரான "அருணகிரி நாதர்" வர்ணித்து அழகாக
> முருகனுடன் ஒப்பிடுகிறார்.
>
> அடக்கடவுளே எங்கள் முப்பாட்டன் முருகனைப் புகழும் இடத்திலும் இராமனா? இது
> என்ன சோதனை? இது கண்டிப்பாக பார்ப்பனர்கள் எழுதியதாகத்தான் இருக்க வேண்டும்😡
>
> இது திருப்புகழில் வரும் பாடல். இதை எழுதியவர் ஆகச்சிறந்த முருக பக்தரான
> அருணகிரிநாதர்.
>
> குழுவிலிருந்து இன்னொரு சத்தம்…. அடேய் சங்கி சித்தர்கள் இராமரைப் பற்றி
> எதாவது சொல்லி இருக்காங்களா? ( மனசுக்குவதுள்ள இங்க எப்படி இராமர் வறாருனு
> பாத்துக்குறேன்னு ஒரு இளிப்பு)
>
> சரி சொல்றேன் கேளுங்க. கொஞ்சம் கவனமா கேளுங்க நண்பரேனு சொல்லீட்டு
> ஆரம்பித்தேன்.
>
> "நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா? கோனதேது குருவதேது? கூறிடும்
> குலாமரே
> ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம் ஈனதேதூ? ராம ராம ராம என்ற நாமமே"
>
> எதே😳😳😳 இங்கேயும் இராமநாமமா??? ஐயய்யோ தெரியாம வந்து மாட்டிக்கிட்டேனே.
> மானமுள்ள தமிழ் பிள்ளைகள் யாராவது இருந்தால் வந்து என்னை காப்பாத்துங்களேன்.
> இராமனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லைனு நான் சொன்னா சோழர்கள்
> பாண்டியர்கள், அருணகிரிநாதர் முதல் சித்தர்கள் வரை தொடர்புபடுத்துறானே
> முடியலயே….
>
> அண்ணே! இது சித்தர் சிவவாக்கியர் எழுதியது. அவர் இதுமட்டுமின்றி இன்னும் பல
> பாடல்கள் இராமரைப்பற்றி பாடியுள்ளார். அவற்றையும் சொல்லவா???
>
> ஐயய்யோ வேண்டவே வேண்டாம் என்று கூறியவர் தமிழர்களின் மூத்த சமயமான சமண
> காப்பியங்களில் இராமர் பற்றிய குறிப்புகள் உண்டா? என்று கேட்டார்.
>
> நானும் ஆரம்பித்தேன்…..
>
> "மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங்
> கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத
> செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே"
>
> - சிலப்பதிகாரம்.
>
> நிறுத்துங்க! நிறுத்துங்க! நிறுத்துங்க. இதில் இராமனைப்பற்றியோ இராமயணத்தை
> பற்றியோ இல்லை தானே? (ஏதோ பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்)
>
> சகோதரரே இளங்கோவடிகளால் எழுதப்பட்ட இந்த சிலப்பதிகார வரிகளில் இராமனோ,
> இராமயணமோ வருகிறதா? என்பதை நான் அப்பாடலுக்கு கூறும் விளக்க உரைகளில் உள்ளதா
> என்று நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க என்றேன்.
>
> பொருள் : மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும்
> வண்ணம்
> தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும்
> வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும்
> மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும்
> அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின்
> புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?
>
> ஐயய்யோ டேய் வேற யாராவது இவர்கிட்ட பேசுங்கடா. நான் போறேன் எனக்கு கொஞ்சம்
> வேலை இருக்குனு சொல்லீட்டு அவரு போய்டார். அவர் போனதும் இன்னொரு நண்பர் வந்து
> என்ன ப்ரோ சங்ககாலத்தில் இராமர் இருந்தாரா?
>
> "அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
> கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
> வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்"
>
> - புறநானூறு.
>
> அதாவது உன்பொதி பசுங்குடையார் என்ற சங்கப்புலவர் இந்த புறநானூற்று வரிகளால்
> சொல்வது என்னவெனில், பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில்
> இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று,
> கிணைப்பறையைக் கொட்டி வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன்,
> இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய
> அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். வறுமையால்
> வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம்
> கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும்,
> காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும்,
> கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர்.  மிகுந்த
> வலிமையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு
> செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த
> நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத்
> தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். அதுபோல், பெரிய
> சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல
> அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு, நாங்களும் அரிய மகிழ்ச்சியை
> மிகவும் அடைந்தோம்....!
>
> இதுமட்டுமின்றி அகநானூறு, பழமொழி நானூறு போன்ற இன்னபிற சங்க இலக்கியங்களிலும்
> இராமனைப்பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும் குறிப்புகள் உண்டு என்பதை
> கூறிக்கொள்வதோடு தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தம் உண்டு என்பதை
> வள்ளலார் துவங்கி சித்தர்கள், காப்பியக் கவிகள் முதலான சங்கால புலவர்கள் வரை
> நன்கு அறிந்திருந்தனர் என்பதை மேற்கூறிய தரவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள் என
> நம்புகிறேன். என்று முடித்து மைக் ஆஃப் பண்ணேன்.!
>
> நான் முடித்ததும் அங்கிருந்து என்னை ரிமூவ் செய்துவிட்டனர். எனக்கும்
> கொஞ்சநேரம் நேரம்போச்சினு சிரிச்சிட்டே வந்துட்டேன். ஆரம்பத்திலயே தூக்கி
> போட்ருவானுகனு நெனச்சேன். பரவாயில்லை என்னைவிட பொறுமைசாலிகள் தான்🙂🙂🙂!
>
> - பா இந்துவன்.
> Sent from Yahoo Mail on Android
> <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/568789468.503074.1705714738758%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/568789468.503074.1705714738758%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo%2B3aY7BN_QGVZ%3DEJozU8z1WmkvjhnEkOKspe72D1%2BcTg%40mail.gmail.com.

Reply via email to