கிராமி கிடைத்தது தேசத்துக்குப் பெருமை!”
இந்தியாவில் கிராமி விருதை வென்றிருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த வரிசையில் இணைந்திருக்கிறது ஷக்தி இசைக்குழு. இவர்களின் ‘This Moment’ ஆல்பம் ‘Best Global Music Album’ விருது வென்றுள்ளது. சினிமாவிற்கு ஆஸ்கர் விருது எப்படி ஒரு சர்வதேச அங்கீகாரமோ, அப்படி இசைக்கான உயரிய விருது கிராமி. அந்த விருதை வென்றிருக்கும் குழுவின் அங்கம், சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர் வி.செல்வகணேஷ். கஞ்சிரா கலைஞரான செல்வகணேஷ், விக்கு விநாயக்ராமின் மகன். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் இசையமைப்பாளர் இவரே! வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்த செல்வகணேஷிடம் பேசினோம். “கிராமி கிடைத்தது தேசத்துக்குப் பெருமை!” ‘‘ரொம்ப பெருமையா இருக்கு. இதை தேசத்துக்கான விருதா நினைக்கறோம். எங்களோட ஷக்தி பேண்ட்... ஒரு ஃபேமிலி போல! இதுல நிறைய பேர் இருக்காங்க. ஜான் மெக்லாக்லின், தபேலா உஸ்தாத் ஜாகீர் உசேன், சங்கர் மகாதேவன், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் என இந்தக் குடும்பத்துல நிறைய பேர் இருக்கோம். சிறந்த ஆயிரம் ஆல்பங்கள்ல இருந்து 5 ஆல்பங்கள் நாமினேட் ஆகும். அதில் இருந்து சிறந்த ஒரு ஆல்பமா தேர்வாகி விருது கிடைச்சிருக்கு. நான் ஆல்பத்தின் இணை தயாரிப்பாளர் என்பதால எல்லோர் சார்பிலும் விருதை வாங்கினேன். விருது விழாவில் ரஹ்மான் சாரும் இருந்ததால, முதல் பாராட்டு அவர்கிட்ட இருந்தே வந்தது. கிராமி விருது இன்னும் உற்சாகத்தையும், இன்னும் தீவிரமா உழைக்கணும்னு உத்வேகத்தையும் கொடுத்திருக்கு. இசை ரசிகர்கள் இல்லேன்னா நாங்க இல்ல. ஒவ்வொரு கச்சேரியின் போதும் அவங்க கொடுக்கற உற்சாகம்தான் எங்களை அடுத்தடுத்த கட்டத்துக்கு அழைச்சிட்டுப் போகுது. என் அப்பா ஷக்தி இசைக்குழுவில் 25 ஆண்டுகள் இருந்தார். நான் இதில் இணைந்து 25 ஆண்டு ஆகுது. 50 வருஷ உழைப்புக்கு இப்ப விருது கிடைச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு!’’ - பூரிப்புடன் பேசுகிறார் செல்வகணேஷ். ``உங்களோட ஷக்தி இசைக்குழு பயணத்தைப் பற்றிச் சொல்லுங்க...’’ ‘‘1970-களிலேயே ஆரம்பித்த குழு. பாப் இசையில மைக்கேல் ஜாக்சன் எப்படி புகழ்பெற்ற பாப் பேண்டாகத் திகழ்ந்தாரோ, அப்படி ஃப்யூஷன் இசையில இந்த ஷக்தி பேண்ட். பிரான்ஸில் இருந்த ஜான் மெக்லாக்லின், நம்ம ஜாகீர் உசேன், ஹரிபிரசாத், அப்புறம் எங்க அப்பா இவங்க நாலுபேர் சேர்ந்து தொடங்கினதுதான் ஷக்தி இசைக்குழு. அதன்பிறகு மாண்டலின் னிவாசனும், எல்.சங்கர், சங்கர்மகாதேவனும் குழுவில் இணைந்தார்கள். உலகம் முழுக்க நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சோம். லாக்டௌன் காலகட்டத்தில்தான் ஷக்தியோட 50-வது ஆண்டு வந்தது. அப்ப தோணின ஐடியாதான் ‘திஸ் மொமண்ட்’ ஆல்பம். இந்த ஆல்பத்தில் கணேஷ் ராஜகோபாலனும் உண்டு. நானும் அப்ப பிரான்ஸில் இருந்ததால, ஜான், ஜாகீர் ஆகியோரோட சேர்ந்து அவங்க ஸ்டூடியோவிலேயே இந்த ஆல்பத்தை உருவாக்கினோம்.’’ “கிராமி கிடைத்தது தேசத்துக்குப் பெருமை!” ``அப்பா விநாயக்ராம் கடம் கலைஞர். ஆனா, கஞ்சிராவுல உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?’’ ‘‘சின்ன வயசில அப்பாவும் தாத்தாவும் என்னை கஞ்சிரா கத்துக்கச் சொன்னாங்க. ஏன்னா, அப்ப கடம், வயலின், மிருதங்கம்னு வாசிக்க பலர் இருந்தாங்க. கஞ்சிராவுக்குப் போட்டி கிடையாது. ஆரம்பத்துல விருப்பமே இல்லாமல்தான் கத்துக்க ஆரம்பிச்சேன். நான் கொஞ்ச வருஷத்துலேயே, கடினமா பயிற்சி செய்து நல்லா வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். டெல்லியில அப்போதைய அரசாங்கம், ‘விலங்குகளின் தோலில் செய்த கருவிகளைப் பயன்படுத்தத் தடை’ன்னு சொல்லிட்டாங்க. அமெரிக்கா போயிருந்தபோது அங்கே உள்ள ரீமோ இசைக்கருவிகள் தயாரிப்பு நிறுவனத்திற்குப் போயிருந்தேன். டிரம்ஸுக்கு புகழ்பெற்ற நிறுவனம் அது. தோலுக்கு பதிலா சிந்தடிக்ல செய்திருப்பாங்க. அவங்ககிட்ட சிந்தடிக்ல கஞ்சிரா செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்டேன். கஞ்சிராவைப் பத்தி அவங்களுக்குத் தெரியல. அவங்களுக்குப் புரிய வச்சேன். தோல்ல செய்த கஞ்சிராவில் எந்த ரிசல்ட் வருமோ அதே ரிசல்ட் சிந்தடிக்ல வர்ற மாதிரி செய்து கொடுத்தாங்க. இப்ப அந்த நிறுவனத்துல அதிகம் விற்பனை ஆகுறதுல கஞ்சிராவும் ஒன்று. ஒவ்வொரு கஞ்சிராவுக்கும் எனக்கு ராயல்டியும் அனுப்பி வைக்கிறாங்க.’’ ``நீங்க இசையமைப்பாளராக அறிமுகமான ‘வெண்ணிலா கபடிகுழு’ 15 வருடம் கொண்டாடுகிறது... ‘‘ஆமா! பக்திப் பாடல்களின் ஆல்பங்களுக்கு இசையமைச்சிருக்கேன். அதுலதான் சினிமா வாய்ப்பு வந்தது. ‘வெண்ணிலா கபடிகுழு’விற்கு முன்னாடியே இரண்டு படங்கள் வந்தது. ஒரு படம் பூஜையோடு நின்னு போச்சு. அந்தப் படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி. படம், ‘நமனை அஞ்சோம்.’ எங்க கச்சேரியைக் கேட்ட அமெரிக்காவில் உள்ள ஆனந்த் சக்ரவர்த்தி என்னைத் தேடி வந்து இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். ஒரு கட்டத்துல அந்தப் படம் பாதியில் நின்னுடுச்சு. இனிமே சினிமா வேணாம்னு முடிவுக்கு வந்துட்டேன். அதன்பிறகு ‘நமனை அஞ்சோம்’ கேமராமேன் லக்ஷ்மன் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் ஒரு இயக்குநரை அழைச்சிட்டு வந்தார். அவர்தான் சுசீந்திரன். அந்தச் சமயம் ஆனந்த் சக்ரவர்த்தியும் என்னோடு இருந்தார். சுசீந்திரன் கதை அவருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. சுசீந்திரனுக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைச்சார். இப்படி ஒவ்வொருத்தருக்கும் வெளிச்சம் கிடைச்சது. அந்தப் படத்தோட இசை வெளியீட்டு விழாவிற்கு எனக்காக ரஹ்மான் சாரும் வந்திருந்தார். அதன்பிறகு சில படங்கள் இசைய மைச்சேன். ஒரு கட்டத்துல கச்சேரிகள் பக்கம் கவனம் குறையவே, இசை யமைக்கறதைக் குறைச்சுக் கிட்டேன். நல்ல கதைகள் அமையும்போது, இசையமைக்கவும் தயாரா இருக்கேன். அதே சமயம், அப்பாவோடு சேர்ந்து கச்சேரிகளும் பண்ணிட்டிருக்கேன். என் மகன் சுவாமிநாதனும் கச்சேரி பண்ணுவார். ஒரு படத்துக்கு இசையும் அமைச்சிருக்கார்.’’ The country is proud to have got a Grammy!” You can count the number of Grammy Award winners in India on your fingers. Joining this lineup is Shakti Band. Their album 'This Moment' won the 'Best Global Music Album' award. Just as the Oscars are an international recognition for cinema, the Grammys are the highest award for music. Chennai-based music composer V. Selvaganesh is part of the award-winning group. Ganjira artiste Selvaganesh is the son of Vikku Vinayakram. He is the music composer of the film 'Vennila Kabadi Group'! We spoke to Selvaganesh who was getting drenched in the congratulatory rain. "Grammy is the pride of the nation!" "I am very proud. We consider this as an award for the nation. Our Shakti Band is like a family! There are many people in it. John McLaughlin, Tabla Ustad Zakir Hussain, Shankar Mahadevan, Violinist Ganesh Rajagopalan and many others in this family. 5 albums from top thousand albums are nominated. The best album from it was selected and won an award. I bought the award on behalf of everyone as I was the co-producer of the album. As Rahman sir was also present at the award ceremony, the first compliment came from him. Grammy Award has given me more enthusiasm and inspiration to work harder. Without music fans, we wouldn't exist. It is the enthusiasm they give at every concert that invites us to the next level. My father was in the Shakti Band for 25 years. I have been involved for 25 years. It is a pleasure to get this award for 50 years of work!'' - says Selvaganesh with excitement. ``Tell us about your Shakti band journey...'' A group that started in the 1970s. Just as Michael Jackson became a famous pop band in pop music, this Shakti band is in fusion music. Shakti Band was started by John McLaughlin, our Zakir Hussain, Hariprasad and then our father who were in France. Later Mandalin Nivasan, L. Shankar and Sankarmagadevan joined the group. We started doing shows all over the world. The 50th anniversary of Shaktiyot came during the lockdown period. The idea that came up was the album 'This Moment'. The album also features Ganesh Rajagopalan. Since I was in France at that time, we made this album together with John and Zakir in their studio.'' "Grammy is the pride of the nation!" ``Dad Vinayakram is a kadam artiste. But how did you get interested in Kanjira?'' "When I was young, my father and grandfather told me to scream kanjira. Because there were many people who could play kadam, violin and mridangam. Kanjira has no competition. At first I started screaming without any intention. Within a few years, I started practicing hard and reading well. The then government in Delhi said, 'Prohibition on the use of tools made of animal skin'. When I went to America, I went to the Remo musical instruments manufacturing company there. It is a famous company for drums. Instead of skin, they have made it with felt. I asked them to make a kanjira without thinking about it. They don't know about Kanjira. I came to understand them. They have given the same result as the result obtained in Kanjira made by Dholla. Kanjira is one of the best sellers in the company. They also send me royalty for every Kanjira.'' ``Vanilla Kabadigulu', where you made your debut as a music composer, is celebrating 15 years... "Yes! I have composed albums of devotional songs. That's where the film opportunity came. Two films came before 'Vennila Kabadikulu'. A picture stood with Pooja. The director of that film is Majid Thirumeni. The film, 'Namanai Anjom.' Anand Chakraborty in America, who heard our concert, came to me and gave me an opportunity to compose music. At one point the film stopped halfway through. I have come to the conclusion that I don't want cinema anymore. After that the cameraman of 'Namanai Anchom' Laxman came to see me. He called a director. He is suchindran. Anand Chakraborty was also with me at that time. He liked the story of Suchindran very much. Suchindran will get a producer. In this way everyone got light. Rahman sir also came for me at the music release of the film. After that I played some films. At one point I stopped paying attention to concerts and I stopped making music. When there are good stories, I am ready to compose music. At the same time, I have also done concerts with my father. My son Swaminathan will also perform the concert. He has also composed music for a film. KR IRS 22224 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopY79RRHjc7PbDMRBw5r71w%3DsLFK27U4c2wOaj_dYudKA%40mail.gmail.com.
