Mikka Nandri Sir. I and my wife undertook the Chardham Yatra in June / July 2017 and still carry vivid memories of that Divine Trip.
We engaged our own private taxi as we wanted flexibility in time and iternery. There are so many, so many temples and historically important places en route, you may miss many of them in the packaged tours. Tour operators will arrange a tailor made tour for you, if tell them in advance. There are many videos in u tube and I fwded to the group the best one, in my opinion, nearly 2 years back. If I find it I will send it to you, and those who have not undertaken the Yatra, will find it of great value. But the 2 fwds you have sent are very inreresting to read and I can't wait for the others. Beautiful, and pl convey our thanks to Sri Sivasubramaniam. You have mentioned he is a great Writer and it shows in his writings. And thanks for fwding them. N Sekar Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> On Wed, Mar 6, 2024 at 3:23 AM, Chittanandam V R <[email protected]> wrote: *இத்தொடரை எழுதுபவர் கோவையைச் சேர்ந்த திரு. K. சிவசுப்பிரமணியம் என்பவர். மிகச் சிறந்த எழுத்தாளர் , ஓவியர் , சட்டய ரிஸ்ட் , புத்தகப் பதிப்பாளர்.* *கேதார்நாத் பத்ரிநாத் யாத்திரை - 2* *ஹரித்வார்* *மறுநாள் காலை டெல்லியிலிருந்து கிளம்பி ஹரித்வார் போனோம். இதுவே இப்பயணத்தில் முதல் புண்ணியஸ்தலம். அங்கே மாலை கங்கா ஆர்த்தி பார்த்துவிட்டு இரவு தங்கினோம். மறுநாள் காலை கங்கைப் படித்துறைக்குப் போய்க் குளித்துவிட்டு மேலே இமயமலை யாத்திரைக்குக் கிளம்பினோம். உள்ளூர் ஆட்டோக்காரர்கள் அதிகக் கூட்டமில்லாத படித்துறைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். நியாயமான வாடகை. ஆனால் முரட்டுச் சவாரி. பிறகு கங்கோத்ரி, கேதார்நாத்திலெல்லாம் மலைப்பாதையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நாம் செய்யப்போகும் குதிரைச் சவாரிக்கு முன்னோட்டம்.* *இந்த ஹரித்வார்தான் நாம் இப்பயணத்தில் காணப்போகும் கோயில்களுக்கெல்லாம் நுழைவாயில். ஹரித்வார் என்பது ஹரி + த்வார். ஹரி என்றால் மஹா விஷ்ணு என்று பொருள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதுமட்டுமின்றி ஹரி என்ற வார்த்தை கடவுள் என்ற பொதுப் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. மஹாத்மா காந்தியும் அவருக்கு முந்தையவர்களும் ஹரிஜன் என்ற வார்த்தையை இதே பொருளில்தான் பயன்படுத்தினார்கள். ஹரி + ஜன். கடவுளின் குழந்தைகள். ஹரி என்றால் கடவுள். த்வார் என்றால் நுழை வாயில். இப்பயணத்தில் நாம் காணப்போகும் ஆலயங்கள் யாவும் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளன. அவற்றுக்கு ஹரித்வார்தான் நுழைவாயில். ஹரித்வார், ஆரம்பப் புள்ளி, தெய்வீக வீட்டின் கதவு. ஹரித்வாருக்கு அதற்கு 23 கிலோமீட்டர் தள்ளி அமைந்துள்ள ரிஷிகேஷும் நுழைவாயில்தான்.* *ஹரித்வாரிலும், ரிஷிகேஷிலும் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் பல உண்டு. அவற்றில் சிலவற்றை மொத்தப் பயணமும் முடிந்து திரும்பும்போது பார்க்கப் போகிறோம்.* *சப்தநதிகள் என்று நம் ஹிந்து மதத்தில் குறிப்பிடப்படுபவை ஏழு புனித நதிகள். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து மற்றும் காவேரி. **சப்த நதிகளைப்போல் பாரதநாட்டில் மோக்ஷத்தை அளிக்கும் சப்தமோக்ஷபுரி என்னும் ஏழு புண்ணிய ஸ்தலங்கள் பிரதானமானவை. **‘அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி துவாரகாவதி சைவ சப்தைதே மோக்ஷ தயிகா’ **என்று கருடபுராண ஸ்லோகம் அத்தலங்களின் பெயர்களைச் சொல்கிறது.* *இந்த ஏழு ஸ்தலங்களில் ஹரித்வாரும் ஒன்று. சப்தமோக்ஷ ஸ்தலங்கள் அதாவது ஏழு முத்தித் தலங்களுள் ஒன்று ஹரித்வார். இதை மாயா என்றும் கூறுவார்கள். சீன யாத்திரிகர் யுவான் ஸ்வாங் இதை மாயூலோ என்றும் மாயூரம் என்றும் கூறுகிறார். * *பாரத மண்ணின் இந்த ஏழு ஸ்தலங்களும் நம் உடலிலுள்ள ஏழு சக்கரங்களோடு ஒப்பிடப்படுகின்றன. ஹரித்வார் நம் உடம்பின் முதுகெலும்பின் அடிப்பகுதியில் அமைந்துள்ள மூலதாரச் சக்கரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. **ஹரித்வார் சைவர்களால் ஹரத்வார் என்றும் வைஷ்ணவர்களால் ஹரித்வார் என்றும் அழைக்கப்படுவதுண்டு. பொதுவாக எல்லோரும் அறிந்த பெயர் ஹரித்வார் என்பதே. மேலே இமயமலையில் கோமுக் சிகரத்தில் சிவன் தலையிலிருந்து பாகீரதி நதியாகக் கங்கை இறங்கி வருவதால் அந்தக் கங்கை பூமிக்கு வரும் இடம் என்பதால் சைவர்கள் ஹரத்வார் என்றும்; பத்ரிநாத்தில் விஷ்ணு பாதத்திலிருந்து அலகாநந்தாவாகக் கங்கை இறங்கி வருவதால் அக்கங்கை பூமிக்கு வரும் இடத்தைச் வைஷ்ணவர்கள் ஹரித்வார் என்றும் அழைக்கிறார்கள். ஹரித்வாரிலும் விஷ்ணுபாதம் என்ற இடம் உண்டு. மேற்சொன்ன இடங்களில் இருந்து இறங்கிவரும் கங்கை, பூமியை, அதாவது சமதளத்தைத் தொடுவது இந்த ஹரித்வாரில்தான். கங்கைத் தாய் இமயமலையில் உற்பத்தியாகி, பல நூறு மைல்கள் அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் நடந்து வந்து மலையை விட்டு இறங்கி ஹரித்வாரிலிருந்துதான் மண்ணில் கம்பீரமாக ஓட ஆரம்பிக்கிறாள்.* *ஹரித்வாரில் முதல்நாள் கங்கா ஆர்த்தி பார்த்தோம் என்று சொன்னேன் அல்லவா? காசியில் கங்கா ஆர்த்தி பார்த்தவர்களுக்கு இது சற்றுக் குறைவாகத்தான் தெரியும். காசி ஆர்த்தியின் அழகும் காம்பீர்யமும் தனிதான். ஆனால் அதற்காக ஹரித்வார் ஆர்த்தி அழகில்லாதது என்று பொருளல்ல. ஒப்பீட்டளவில் காசி ஆர்த்தி அழகும் பிரம்மாண்டமும் கூடுதலாகக் கொண்டது. இரண்டில் எதைப் பார்ப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். * *ஆர்த்தி என்பது மாலையில் சந்த்யா நேரத்தில் கங்கை நதிக்கு நடத்தப்பெறும் தீப வழிபாடு. நம் பாரத தேசத்தில் ஹிந்து கலாசாரத்தில் நதியை அன்னையாகப் பார்ப்பதே வழக்கம். நம் மக்களின் வாழ்க்கை, நம் பிறப்பு முதல் இறுதி வரை நதிகளோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்னிப் பிணைந்தது. நதிகளெல்லாவற்றிலும் உயர்ந்தவள், ஈசன் சடாமகுடத்திலிருந்து இறங்கி வந்து இந்தத் தேசத்தின் மக்களைப் பாலூட்டி வளர்ப்பவள் அல்லவா அன்னை கங்கா மாதா? * *ஹரித்வாரில் மாலை சுமார் ஆறரைக்கு ஆர்த்தி துவங்கியது. நாங்கள் போயிருந்த ஜூன் இறுதியில் மாலை ஏழரை, எட்டு வரை பகல் வெளிச்சம் இருந்தது. ஆர்த்தி நடக்கும் படிக்கட்டுக்கு இருபுறக் கரைகளிலும் மாலை ஐந்துக்கே மக்கள் பெருங்கூட்டமாக உட்கார ஆரம்பித்து விடுகிறார்கள். ஆர்த்தி சபா ஆட்கள் சிலர் ‘உட்கார் நிற்காதே, நில் உட்காராதே, நெருக்கி உட்கார், விலகி உட்கார்' என்று புகுந்து வந்துகொண்டிருக்கிறார்கள், கையில் நன்கொடை ரசீதுப் புத்தகத்துடன். * *பூஜைப் பொருட்கள் விற்கும் பெட்டிக்கடைகளில் இடம் ஒதுக்கி அதைத் தலைக்கு இருநூறு ரூபாய் என்று கடைக்காரர்கள் வாடகைக்கு விடுகிறார்கள். காலை மடக்கித் தரையில் அமர இயலாதவர்கள் அதில் அமரலாம். இந்த ஆர்த்தி ஆனந்தமான அனுபவம். கங்கை அன்னைக்குப் பூஜை சுமார் ஒருமணி நேரம் நடக்கிறது. பாடல் புரியாவிட்டாலும் மனதைக் கொள்ளை கொள்கிறது. நதியை நோக்கி அர்ச்சகர்கள் நின்றுகொண்டு பல்வேறு தீபாலங்கார ஆரத்திகள் செய்கிறார்கள். பின்னணியில் தொடர்ச்சியான மணியோசை.* *- கோவை சிவசுப்ரமணியம் * ****************************************************** சித்தானந்தம் -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcxG6vk3yYH0Dfbkkw%3D0EBP-2pGMSuNTzQvh0k%3DchhRgQ%40mail.gmail.com.
