Even if your date of birth is unknown, one who may not walk straight in a
straight line is 60plus. All of us do get that imbalance. So while climbing
down the angular momentum changes and with the imbalance it is tough; so
transfer of weight helps recover our stability; so a stick Thank you KR
IRS 6424 {exceptions are the rarest}
On Fri, 5 Apr 2024 at 18:31, Chittanandam V R <[email protected]>
wrote:
>
> *கேதார்நாத் பத்ரி நாத் யாத்திரை -16*
> *கேதார்நாத் *
>
> *கோவை சிவசுப்பிரமணியன் *
>
> பத்ரிவிஷாலுக்குக் கிளம்புமுன் ஒரு விஷயம்.
>
> கேதார் யாத்திரைக்கு அடிவாரத்திலிருந்து மேலே கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல
> ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் இருப்பதாகவும் நீங்கள் ஹெலிகாப்டரில்
> போய்வந்ததாகவும் சொன்னீர்கள், சரி. நாங்கள் எதில் போவது? எது சிறந்த வழி? அதை
> சொல்லுங்கள் என்கிறார், இப்பதிவுகளைத் தன் ஃபேஸ்புக் பக்கம் மூலம் உங்களுடன்
> பகிர்ந்துவரும் என் அருமை நண்பர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி.
>
> நியாயமான கேள்வி.
>
> எங்களுக்கு அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் டிக்கெட் கிடைத்தது. அது என் ட்ராவல்
> ஏஜென்ட் ஸ்ரீட்ராவல்ஸின் விடா முயற்சியால். நீங்கள் தனியாக முயற்சி செய்ய
> உதவியாக வெப்சைட் முகவரியும் கொடுத்திருக்கிறேன். அப்படியே முன்கூட்டியே
> ஹெலிகாப்டர் டிக்கெட் கிடைத்தாலும் ஹெலிகாப்டரில் உட்கார்ந்து கிளம்பிப் போய்
> இறங்கும்வரை உறுதியில்லை என்பதையும் பார்த்தோம். மொத்தமும் கேன்ஸலாகலாம்,
> ரிடர்ன் ட்ரிப் கேன்ஸலாகலாம். வானிலை மாற்றங்களால் இவை யாவும் நேரலாம்.
>
> அதனால் என் யோசனை இதுதான்.
>
> முதலில் உங்கள் பயணத்திட்டத்தில் கேதார் மட்டும் 3 நாட்கள் இருக்குமாறு
> பார்த்துக் கொள்ளுங்கள். அடிவாரத்தில் சோன்பிரயாகிலோ, கௌரிகுண்ட்டிலோ,
> குப்த்காசியிலோ மூன்று நாட்கள் தங்கத் திட்டமிடுங்கள்.
>
> ஹெலிகாப்டரை நம்பாதீர்கள். கிடைத்தால் சரி. டிக்கெட் கிடைக்கவில்லையா, அடுத்த
> நாளுக்கு முயற்சி செய்துகொண்டு நேரத்தை இழக்காதீர்கள். எங்கள் குழுவில் அப்படி
> மூன்று நாட்களும் முயன்று கேதார் போகவே முடியாமல் குப்த்காசியோடு
> திரும்பியவர்களும் உண்டு. முதல்நாளே டிக்கெட் கிடைக்காததாலோ, கிடைத்தும்
> பருவநிலையாலோ ஹெலிகாப்டரில் போக முடியாவிட்டால் உடனடியாகக் கிளம்பி விடுங்கள்.
> எங்கே? சொந்த ஊருக்கல்ல. மேலே, கேதார்நாத்துக்குக் கிளம்புங்கள்.
>
> அப்படிப் போக எது சிறந்தது?
>
> என்னைக் கேட்டால் ஹெலிகாப்டர் கிடைக்காதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பேன்.
> ஹெலிகாப்டரில் உட்காரவைத்து புளிமூட்டைபோலக் கொண்டுபோய் மேலே இறக்கிவிட்டு
> விடுவார்கள். வழியில் உள்ள அற்புதமான இயற்கையழகுகளை ரசிக்க முடியாது. நான்
> ஹெலிகாப்டரில் போனேன், மனமில்லாமல்தான் போனேன்.
>
> மற்ற வழிகளைப் பற்றி உடன் வந்தவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் என்
> கருத்தைச் சொல்கிறேன்.
>
> வயது காரணமாகவோ, மருத்துவக் காரணங்களாலோ மலைக்கு நடக்க முடியாதவர்கள்,
> முதியவர்கள் இவர்களுக்கு மட்டும் ஹெலிகாப்டர்தான் சிறந்தது. மற்றவர்களுக்கு
> நடை, டோலி, குதிரை. இவற்றில் நடை உத்தமம். நடையெல்லாம் எனக்குத் தூசு, நான்
> தினமும் எங்கள் ஊர் பார்க்கில் எட்டு போடறேன் என்பவர்களுக்கு ஒரு வார்த்தை.
> இது அதுபோல் அல்ல. சுமார் 14 கிலோமீட்டர்கள் சரிவான மலைப்பாதையில் ஏற
> வேண்டும். எங்கள் குழுவில் நடந்து போய்த் திரும்பி வந்தவர்களுக்கு அடுத்த
> நாள் கால்வலி, காய்ச்சல் ஏதும் வரவில்லை. வழியெங்கும் அற்புதமான காட்சிகளைப்
> பார்த்தார்கள். அங்கங்கே சிறு மினி அருவிகள்.
> (அருவி என்பதே நல்ல தமிழ் வார்த்தை. நீர்வீழ்ச்சி என்பது, waterfalls என்பதன்
> அப்பட்டமான தழுவல். கனியிருக்கக் காய் கவர வேண்டாமே?). சில அருவிகள் விழ விழ
> ஐஸாக உறைந்து தண்ணீர்த் தாரை பாதியில் நிற்கும் அழகு. வழியெங்கும் மருத்துவ
> வசதிகள், கடைகள், சிற்றுண்டிச் சாலைகள். கேதார் பயண அனுபவ நூல்களில் மிகச்
> சிறப்பானது ஸ்ரீ பரணீதரன் அவர்களுடையதுதான். சுதந்திரப் போராட்ட வீரரும் கோவை
> அவிநாசிலிங்கம் கல்லூரியின் ஸ்தாபகருமான ஸ்ரீ தி.சு. அவிநாசிலிங்கம்
> செட்டியார் அவர்களும் தம் கேதார் பயண அனுபவத்தைப் பற்றி ஒரு நூல்
> எழுதியுள்ளார். இவர்களெல்லாம் நடந்து போனவர்கள். ஹரித்வாரிலிருந்தே
> நடந்தவர்கள். பஸ் வசதி துவங்காத காலம். கிடைத்த இடங்களில் ஜீப் போன்ற
> வாகனங்களில் போனாலும் பெரும்பகுதி நடைதான். இவர்களில் ஸ்ரீ பரணீதரன் காஞ்சி
> ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நடந்துபோன சமயம் போயிருக்கிறார். கேதாரில்
> அப்போது ஹெலிகாப்டர் இல்லை. குதிரை, டோலிகள் இருந்தன. இவர்கள்
> பயன்படுத்தவில்லை.
>
> நடப்பதே உத்தமம். அடுத்தது குதிரை. ஏறி இறங்குவதும் மட்டும் கஷ்டம்.
> தொடைகளின் உள்ளும், இடுப்பும் வலிக்கும். பிறகு சரியாகிவிடும். அடுத்து டோலி.
> முதல் அரைமணி நேரம் இடுப்பு, முதுகு, கழுத்தெல்லாம் வலிக்கும். பிறகு நீங்கள்
> சரியான பொஸிஷனைக் கண்டுபிடித்து விடுவீர்கள்.
>
> இவற்றில் எந்த வழியில் போனாலும் ஓரிரவு தங்கவேண்டியிருக்கலாம். தயாராகப்
> போங்கள். மற்றபடி லக்கேஜ்களைக் குறையுங்கள். ஒரு முதுகு பேக் அல்லது தோளில்
> குறுக்காகத் தொங்கவிடும் ஸ்லிங்பேக் போதும். இரு கைகளும் ஃப்ரீயாக
> இருக்கட்டும்.
>
> நடப்பவர்கள் அடிவாரத்தில் ஊன்றுகோல் ஒன்றை அவசியம் வாங்கிக்கொள்ளுங்கள்.
> எல்லா வயதினருக்கும் அது தேவை. ஆடம்பரமான விலை உயர்ந்த ஸ்டிக் தேவையில்லை. அது
> அழகாக இருக்க வேண்டியதில்லை. திரும்பி வந்து அதைக் கல்யாணமா செய்துகொள்ளப்
> போகிறீர்கள்? அழகெதற்கு? நீங்களே அழகாகத்தானே இருக்கிறீர்கள், ஊன்றுகோலுக்கு
> அழகெதற்கு? சாதாரண, மலிவான ஆனால் கனமற்ற வலிமையான ஊன்றுகோல் தேவை. சரிவுகளிள்
> ஏறும்போது, குறிப்பாக இறங்கும்போதுதான் அதன் அருமை தெரியும்.
>
> சரி, இனி இன்றைய பதிவு.
>
> *- கோவை சிவசுப்பிரமணியன் *
> ******************************************************************
> *சித்தானந்தம் *
>
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoreq9UOpXE4W%3DOz6C4shwXmdnigjrPJZQDTTv3FycgbaQ%40mail.gmail.com.