श्रेयान्स्वधर्मो विगुण: परधर्मात्स्वनुष्ठितात् |
स्वधर्मे निधनं श्रेय: परधर्मो भयावह: || 35||

śhreyān swa-dharmo viguṇaḥ para-dharmāt sv-anuṣhṭhitāt
swa-dharme nidhanaṁ śhreyaḥ para-dharmo bhayāvahaḥ
śhreyān <https://www.holy-bhagavad-gita.org/w/shreyan>—better; swa-dharmaḥ
<https://www.holy-bhagavad-gita.org/w/swa-dharmah>—personal duty; viguṇaḥ
<https://www.holy-bhagavad-gita.org/w/vigunah>—tinged with faults;
para-dharmāt <https://www.holy-bhagavad-gita.org/w/para-dharmat>—than
another’s prescribed duties; su-anuṣhṭhitāt
<https://www.holy-bhagavad-gita.org/w/su-anushthitat>—perfectly done;
swa-dharme <https://www.holy-bhagavad-gita.org/w/swa-dharme>—in one’s
personal duties; nidhanam <https://www.holy-bhagavad-gita.org/w/nidhanam>—
death; śhreyaḥ <https://www.holy-bhagavad-gita.org/w/shreyah>—better;
para-dharmaḥ <https://www.holy-bhagavad-gita.org/w/para-dharmah>—duties
prescribed for others; bhaya-āvahaḥ
<https://www.holy-bhagavad-gita.org/w/bhaya-avahah>—fraught with fear

shreyan swa-dharmo vigunah para-dharmat sv-anushthitat
swa-dharme nidhanam shreyah para-dharmo bhayavahah
Translation

*BG 3.35*: It is far better to perform one’s natural prescribed duty,
though tinged with faults, than to perform another’s prescribed duty,
though perfectly. In fact, it is preferable to die in the discharge of
one’s duty, than to follow the path of another, which is fraught with
danger.

B G said it Rajaji knows it. We have no fight with the scriptures. We fight
including us, who badly interpret and wrongly behave; because all big
sabotages has back up of only Muslims we are safer with them; because other
illegal conversions are practiced , using Hinduism as a mode of operation
we block. I personally  lot of friends who are like us only in christianity
and Islam; tennis player Vijay and Anand amirtharaj and syed beedi owner
Rahman are my best friends. Officials in boht community who worked with me
are my good friends. Guilty makes us to keep up a distance. KR IRS 6424 NB
Maha periyava also said once when a muslim approached him fro conversion he
advised him to stay a muslim only   K R IRS  6424

On Sat, 6 Apr 2024 at 10:32, Chittanandam V R <[email protected]>
wrote:

>
>
>
> [image: image.png]
> C.Rajagopalachari (1878 - 1972)
>
>
>
> மலிவான மத உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சில அரசியல் கட்சிகள் அரசியல்
> ஆதாயத்தைப் பெற நினைக்கும் இவ்வேளையில் ராஜாஜியின் அறிவுரையை மனதில்
> கொள்வோமாக.
>
> நீண்ட நாட்களுக்கு, கிட்டத்தட்ட பதினைந்து   ஆண்டுகளுக்கு முன்னர் தினமலரில்
> படித்தது.
>
> "மதநல்லிணக்கம் குறைந்திருக்கும் இவ்வேளையில் மதநல்லிணக்கத்தினை
> வலியுறுத்தும் முகமாக, ராஜாஜி எழுதிய கடிதம் ஒன்று திகழ்கிறது.
>
> கல்கி இதழில் "ரகுபதி ராகவ" என்ற கட்டுரைத்தொடர் ஒன்றை ராஜாஜி எழுதிவந்தார்.
> அதைப்படித்து வந்த ஒரு கிறிஸ்துவ வாலிபர், ராஜாஜிக்கு எழுதிய கடிதமும், அதற்கு
> ராஜாஜி எழுதிய பதிலும்:
>
> 'ஐயா.... முன்பின் அறியாத நான், என் சிறிய வேண்டுகோளுக்கு பதில்
> அளிப்பீர்களென்று நம்பி, என் கோரிக்கையை உங்கள் சமூகத்திற்கு
> சமர்ப்பிக்கின்றேன்.
>
> தங்களைப்போன்ற பேரறிஞர்களுக்குக் கடிதம் எழுத நான் பாத்திரனல்லன். ஆயினும்,
> தங்கள் மேலுள்ள அளவற்ற மதிப்பினாலும், அன்பினாலும்தான், நம்பிக்கையுடன்
> இக்கடிதத்தை எழுத முன்வந்தேன்.
>
> கல்கியில் தாங்கள் எழுதிவரும் 'ரகுபதி ராகவ' கட்டுரையை நான் ஆரம்பம் முதல்
> படித்து வருகிறேன். நானும், தங்களைப் போன்று, பாரதநாட்டுப் பிரஜை என்பதை
> நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
>
> நான் கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவன் என்பதை, என் பெயரைப் படித்ததுமே
> தெரிந்திருப்பீர்கள். தாங்கள் எழுதும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் உண்மையாகவே,
> என் மனதைத் தட்டி எழுப்புகின்றன.இப்படிப்பட்ட உயரிய கருத்துகள், எங்கள்
> மதநூலாகிய பைபிளிலும் காணவில்லை. ஒருவேளை, அது என் அறியாமையோ, என்னவோ...
> தெரியவில்லை.
>
> பைபிளைக்காட்டிலும், எத்தனையோ மடங்கு, சிறந்த ஆத்மபோதனையாகவே, நான் தங்கள்
> கட்டுரையை எண்ணுகிறேன். எங்கள் பைபிள், மற்ற மதத்தவர்களைக் குறை கூறுகிறது.
> கேவலமாகவும் எழுதப்பட்டிருக்கின்றது என்பதையும் நான் வெட்கத்துடன்
> ஒப்புக்கொள்கிறேன்.
>
> ஆனாலும், தாங்கள் எழுதியது போல குறைகளை விட்டுவிட்டு, நன்மையானவற்றை படிக்க
> பிரயாசைப்படுகிறேன்.
>
> தாங்கள் நீடூழி காலம் வாழ்ந்து, என் போன்றவர்களுக்கு நல்ல போதனைகள்
> தருவதற்கும், அழிவுப்பாதையில் செல்லும் எங்களை, நல்வழிப்படுத்திக்
> காப்பதற்கும், இறைவன் அருள்புரியும்படி வேண்டிக்கொள்கிறேன்.'
>
> இதற்கு ராஜாஜியின் பதில்:
>
>  'ஆசிர்வாதம். உம்முடைய கடிதம், என் உள்ளத்தைக் கரைத்தது. ஆண்டவன்
> உமக்கு அருள்வாராக.
>
> பைபிளில் காணப்படும் கருத்துகளை குறை கூற வேண்டாம். நன்றாகப்
> படித்துப் பார்ப்பீராயின், மிகச்சிறந்த கருத்துகளைக் காண்பீர்.
>
> பிறந்த குலத்தில் மதிப்பு இழக்கலாகாது. பைபிளையும், இயேசுநாதரையும்
> நான் மிகவும் மதித்து வருகிறேன். காந்தியும் மதித்தார்.
>
> சந்தோஷமாகவும், பக்தியுடனும் இயேசுநாதர் சரித்திரத்தை லூக், மாத்யூ,
> மார்க் முதலிய அத்தியாயங்களில் படிப்பீராக.
>
>  ஆசியுடனும், அன்புடனும், ராஜகோபாலாச்சாரி"
> *********************
>
> ராஜாஜி போன்ற மாமனிதர்கள் நம்நாட்டில் இனி என்று தோன்றுவார்கள்?
>
> சித்தானந்தம்
>
> வரம்
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqzDJSSxRN6PR4AeXLue%3D2%2B3bTtFVuicC9T0rpg3WPM_w%40mail.gmail.com.

Reply via email to