---------- Forwarded message ---------


Thank you.

 His last line carried the punch as usual.

It  (last line) reminded me of the saying
" No man is a hero to his wife (and valet)".
Not for nothing it is said " Familiarity breeds contempt".

N Sekar

Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>

On Sat, Apr 20, 2024 at 4:47 PM, Chittanandam V R
<[email protected]> wrote:

*இப்போதெல்லாம் முன்கூட்டிப் பணம் கொடுத்துப் பதிவு செய்தால், செகண்ட் கிளாஸ்
ரயில் சார்ஜ் அளவுக்குப் பிளேன் சார்ஜ் வந்துவிட்டது. என்ன... காபி, டிஃபன்
கிடையாது. பிளேனைவிட்டு இறங்க படி வைக்கமாட்டார்கள். கதவைத் திறந்து
தள்ளிவிடுவார்கள். மற்றபடி திவ்யமாகப் போய்ச் சேரலாம். டெக்கான், கிங்ஃபிஷர்
போன்ற புது வரவுகள் ஜாம்பவான்களுக்குத் தண்ணிகாட்டுகிறார்கள்.*

*பி.இ.எல். மனமுவந்து எனக்கும், மனைவிக்கும் வழிச்செலவும், கைச்செலவும்
கொடுத்ததால் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சொகுசாகவே, சிவப்பான பஞ்சாபி
குட்டிகளின் பராமரிப்பில் மும்பை சென்றோம். பிள்ளையார் சதுர்த்திக்கு மும்பை
நகரமே விழாக் கோலம் பூண்டு வண்ண வண்ண விளக்குகள் கண்ணடிக்க, 'சார்வஜனிக்'
பெரிய பிள்ளையார்களாலும், சைக்கிளிலும் கையிலும் டெம்போவிலும் கட்டிக்கொண்டு
அன்போடு சொந்தப் பிள்ளைகளைப் போல எடுத்துச் செல்லப்பட்ட குட்டிப்
பிள்ளையார்களாலும், ட்ராஃபிக் ஸ்தம்பித்ததைப் பொருட்படுத்தாமல்
சிரித்துக்கொண்டு காத்திருக்கும் வாகனங்களும், மனிதர்களும் கொண்ட தெய்வவேளை
(அப்பா! சாண்டில்யன் போல எவ்வளவு பெரிய வாக்கியம்!). ஸன் அண்ட ஸாண்ட்(Sun and
Sand)ல் எங்களை விட்ட ஆட்டோக்காரர் சவான், மீட்டருக்கு மேல் கொடுத்ததை
(சென்னைப் பழக்கம்) 'நை சாஹியே' என்று திருப்பிக் கொடுத்துவிட்டார்.*

*ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தபோது, என்னை அடையாளம் கண்டுகொண்டு
வெர்சோவாவில் தன் பெரிய வீட்டுக்கு அழைத்து இரவு விருந்து அளித்த
ட்ரான்ஸ்வோர்ல்ட் ராம்நாராயண், 1968-ல் நான் விகடனில் எழுதிய 'ஒரே ஒரு மாலை'
கதாபாத்திரங்களின் (எனக்கே மறந்துபோன) பெயர்களை ஞாபகம் வைத்துக்கொண்டு
சொல்கிறார் (இந்துமதி, ஆத்மா). *

*அதிருக்கட்டும்... மும்பைக்கு நான் எதற்குப் போனேன்? வாஸ்விக் என்கிற தனியார்
அறக்கட்டளையின் சார்பில், பேராசிரியர் எம்.ஜி.கே.மேனன், லண்டன் வாழ் லிபரல்
டெமாக்ரட்டிக் பார்ட்டி தலைவர் லார்டு தோலாக்கியா... இவர்கள் தலைமையில் நடந்த
விழாவில் எனக்கும் என்னுடன் பி.இ.எல்.லில் மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரத்தின் வடிவமைப்பிலும், சீரமைப்பிலும் பங்குகொண்ட டாக்டர் வெங்கடேஷ்,
ருத்ரமூர்த்தி மற்றும் பல துறைகளைச் சார்ந்த இருபத்தைந்து விஞ்ஞானிகளுக்கும்,
தொழில் நுட்பர்களுக்கும் 2001, 2002-ம் ஆண்டுகளுக்கான 'வாஸ்விக் அவார்'டாக
பட்டோலையும், காசோலையும் வழங்கியதை வாங்கிக்கொள்ள!*


*'விவித லக் ஷி ஔத்யோகிக் சம்சோதன் விகாஸ் கேந்த்ரா' என்பது வாயில் நுழையாது
என்பதால், 'வாஸ்விக்' என்று சுருக்கப் பெயர்கொண்ட இந்த நிறுவனம், ஒவ்வொரு
ஆண்டும் விவசாயம், உயிரியல், வேதியல், மின்னணுவியல், சுற்றுச் சூழலியல், தகவல்
செய்தித் தொடர்பியல், உலோகவியல், கட்டமைப்புவியல் என ஒவ்வொரு துறையிலும்
மக்களுக்குப் பயன்படும்படியான ஆராய்ச்சி செய்தவர்களுக்கு, ஒரு பாரபட்சமற்ற
கமிட்டியின் சிபாரிசின்பேரில் பரிசளிக்கிறார்கள். 2002-க்கான எலெக்ட்ரானிக்ஸ்
பிரிவில் எங்கள் 'இ.வி.எம்.'-களுக்குத் தந்தார்கள்.*

*"கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு" என்றார் நண்பர். "சொந்த மாநிலம்
தவிர!" என்றேன்.*

*- சுஜாதா (2003)*
************************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zes2V_ye1P09i-OZW2d9MnDrTWzBaxmuhYERTFJmpBRrA%40mail.gmail.com.

Reply via email to