ஸ்ரீசுவர்ணாகர்ஷண ஹோமம்: எத்தனை சம்பாதித்தாலும் கடன்தான் மிஞ்சுகிறதா? கவலை
வேண்டாம்! சங்கல்பியுங்கள்!
மு.ஹரி காமராஜ் <https://www.vikatan.com/author/3098-hari-kamaraj.-m>
3 Min Read

2024 ஜூன் 29-ம் நாள் சனிக்கிழமை ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் செம்பியவரம்பல்
ஸ்ரீசுவர்ணாகர்ஷ்ணர் கோயிலில் ஸ்ரீசுவர்ணாகர்ஷ்ண ஹோமம் நடைபெற உள்ளது. கடன்
நிவர்த்தி, சொத்துப் பிரச்னைகள் தீருவது, வியாபார விருத்தி, செல்வவளம் போன்ற
சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Published:Yesterday at 1 AMUpdated:Yesterday at 1 AM
[image: திருச்செம்பியவரம்பல் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்]
திருச்செம்பியவரம்பல் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
Join Our Channel <https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41>
1Comments
Share

வேகவடிவ தெய்வங்களில் முதன்மையானதாகப் போற்றப்படுபவர் பைரவர். காவல் தெய்வமாக
பைரவர் போற்றப்படுகின்றார். சோழர்கள் காலத்தில் பைரவர் வழிபாடு உச்சத்தில்
இருந்துள்ளது. இவருக்கான தனிக்கோட்டங்கள் அமைக்கப்பெற்று நிவந்தங்கள்
அளிக்கப்பட்டன. பகையழித்து வெற்றிதரும் காவல் தெய்வமான பைரவரைப் எல்லைப்
புறங்களிலும்; சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக அமைத்து வழிபட்டு போற்றினர்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
<https://events.vikatan.com/470-sri-swarnakarshana-homam/>
[image: செம்பியவரம்பல் ஸ்வர்ணாகர்ஷண பைரவமூர்த்தி]
செம்பியவரம்பல் ஸ்வர்ணாகர்ஷண பைரவமூர்த்தி

அஷ்டாஷ்ட மூர்த்திகள் எனப்படும் இந்த 64 வடிவங்களுள் ஸ்ரீசுவர்ண ஆகர்ஷண பைரவ
மூர்த்தி தனிச்சிறப்பு மிக்கவர். செந்நிறத்தவர்; பொன்னிற ஜடாமுடிக் கற்றைகளில்
பிறைச் சந்திரனைத் தாங்கியவர்; அமிர்த கும்பம், சங்கம், அபயம், வரதம் கொண்ட
திருக்கரங்கள் உடையவர். ஒரு திருக்கரத்தில் பொன் சொரியும் குடத்தினைத்
தாங்கியபடி மற்றொரு திருக்கரத்தினால் ஆதிசக்தியைத் தழுவியவராய்க் காட்சி
அருளுபவர்; அன்பர் விரும்பும் அனைத்தையும் அருளும் அருட்குணம் கொண்டவர் என்று
சுவர்ணாகர்ஷண பைரவரின் உருவத்தோற்றத்தினை மந்திரநூல்கள் போற்றுகின்றன.
நினைத்தையெல்லாம் அளித்திடவல்ல கற்பகமரத்தினடியில் அழகிய சிம்மாசனத்தில் தமது
தேவியுடன் அமர்ந்தருளும் ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவர் தம்மை நாடித் துதிக்கும்
பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் எளிதில் அருளுகின்றார்.

இத்தகு பைரவ மூர்த்தியை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள
செம்பியவரம்பல் கிராமத்தில் தரிசிக்கலாம். மிகுந்த விசேஷமான இந்த ஸ்வர்ணாகர்ஷண
பைரவமூர்த்தி பூமியில் இருந்து தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொண்டவர். கேட்டதை
அருளிடும் வரப்பிரசாதியாக ஸ்ரீ சுவர்ணதா தேவியான பைரவியுடன் ஸ்ரீ சுவர்ணாகர்ஷண
பைரவர் தனித்த ஆலயத்தில் எழுந்தருளி இத்தலத்தில் விளங்கி வருகின்றார்.
[image: ஸ்ரீசுவர்ணாகர்ஷண ஹோமம்]
ஸ்ரீசுவர்ணாகர்ஷண ஹோமம்

பொதுவாக சுவர்ணசித்தி அடையும்பொருட்டு வணங்கப்படுகின்ற பைரவமூர்த்தங்களுள்
ஒன்றுதான் இந்த சுவர்ணாகர்ஷண பைரவமூர்த்தம். ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவியுடன்
ஆலிங்கன பாவனையில் திரிசூலதாரியாக சர்வாபரணபூஷணராய் புன்னகை முகத்துடன்
மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார் இந்த சுவர்ணாகர்ஷண பைரவர். இருபுறமும் துவார
மூர்த்திகளாக விநாயகர் மற்றும் பாலமுருகன் வீற்றிருக்கின்றனர். சுற்றிலும் ஆகம
விதிப்படி அஷ்டபைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

தவிர ஆன்மார்த்த மூர்த்தங்களான ஸ்ரீ ஞானப்ரசூனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர
சுவாமி பிரதோஷ நந்தியுடன் அமைக்கப்பட்டுள்ளார். தர்மசாஸ்தா மற்றும்
விஷ்ணுதுர்க்கை சந்நிதிகளும் இருப்பது கூடுதல் சிறப்பு. நமது நாட்டிலேயே
ஸ்வர்ணாகர்ஷணபைரவருக்கு இதுபோன்ற அமைப்புடன் தனித்த கோயில் இருப்பது இங்கு
மட்டும் தான் என்று சொல்கிறார்கள்.

எட்டு பைரவர்கள் சுற்றிலும் எழுந்தருளியிருக்க நடுநாயகமாயமாக தங்கமயமாய்
ஜொலித்துக் கொண்டு இருக்கிறார் இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவர். பட்சத்திற்கு
(பதினைந்து நாட்களுக்கு) ஒரு முறை ஒவ்வொரு அஷ்டமிக்கு முந்தைய தினத்திலும்
மூலவருக்கு மருந்துக் காப்பு சார்த்தப்படுகிறது‌. களையப்படுகிற வஸ்திரம்
முதலான நிர்மால்யமானது மறுதினம் அஷ்டமி ஹோமத்தில் ஆஹூதியாக சேர்க்கப்படுகிறது
என்பதும், ஆஹுதியில் புது வஸ்திரம் சேர்க்கப்படுவது இல்லை என்பதும்
குறிப்பிடத்தக்க விசேஷம். சுக்ல பட்சமாகிய வளர்பிறைக்காலத்தில்
வெள்ளிக்கவசத்திலும்; கிருஷ்ண பட்சமாகிய தேய்பிறைக்காலத்தில் தங்கக்
கவசத்திலும் ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவர் தரிசனக்காட்சி அருளுவது இவ்வாலயத்துச்
சிறப்பு.
[image: திருச்செம்பியவரம்பல் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்]
திருச்செம்பியவரம்பல் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்

தனம், தானியம், திருமணம், தொழில், அபிவிருத்தி, சத்புத்திரபிராப்தி, கடன்,
வியாதி, தடைகள், எதிர்மறைக் கோளாறுகள், வழக்கு முதலான பிரச்சினைகளுக்கு தீர்வு
தேடுபவர்கள் சுவர்ணாகர்ஷண ஹோமம் வழிபாடு செய்ய வேண்டும் என்று வழிபாட்டு
நூல்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.

வாசகர்கள் நலம்பெறவும் லோகம் சுபீட்சமடையவும் 2024 ஜூன் 29-ம் நாள் சனிக்கிழமை
ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் செம்பியவரம்பல் ஸ்ரீசுவர்ணாகர்ஷ்ணர் கோயிலில்
ஸ்ரீசுவர்ணாகர்ஷ்ண ஹோமம் நடைபெற உள்ளது. கடன் நிவர்த்தி, சொத்துப் பிரச்னைகள்
தீருவது, வியாபார விருத்தி, செல்வவளம் போன்ற சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது
நம்பிக்கை.

ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவரை செஞ்சந்தனம், செம்மலர்களைக் கொண்டு வழிபடுபவர்கள்
இஷ்டகாரிய சித்திகளை சுலபமாக அடையலாம். சம்பங்கி மலர்களைக் கொண்டு ஹோமம்
செய்பவர்கள் வேண்டியதை வேண்டியவாறே அடைவார்கள். இவருக்குரிய மந்திரங்களை
அன்புடன் ஓதுபவர்கள் அனைத்து வளன்களையும் எளிதில் அடைவார்கள் என்பதாக
மந்திரநூல்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இவ்வாலயத்தில் மிளகு,
சர்க்கரை, முந்திரி இவற்றை ஆஹுதியாக இட்டு செய்யப்படும் ஹோமம் அதீத பலன்களை
அள்ளித் தரவல்லது.

ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவரை வணங்கிடுபவர்களை எவ்வித கிரகதோஷங்களும் அணுகுவதில்லை
என்கின்றார் ஆலய அர்ச்சகர். அளவிலாத நற்பலன்களை அள்ளித்தரவல்ல செம்பியவரம்பல்
ஸ்ரீ சுவர்ணாகர்ஷணபைரவரைத் தரிசனம் செய்து அனைத்து நலங்களையும் பெறுவது உறுதி.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
<https://events.vikatan.com/470-sri-swarnakarshana-homam/>
வாசகர்கள் கவனத்துக்கு:
[image: HOMAM QR CODE]
HOMAM QR CODE

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும்
அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-
மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும்
வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன்,
அவர்களுக்கு ஹோம பஸ்பம், மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் -
புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல்
நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில்
தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக,
வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில்
வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
<https://events.vikatan.com/470-sri-swarnakarshana-homam/>
              K RAJARAM IRS 6 6 24

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooFE662CHNdRXnO3yCTLaYqD5iGg0b%3Do3fu2M27MW4WtA%40mail.gmail.com.

Reply via email to