இன்ன செய்யாமை அதிகாரம் தங்கள் சந்தேகக் கூற்றை தீர்த்து வைக்கிறது. திருவள்ளுவர் இன்ன செய்யாமை என்பதையே அறன் எனக் கூறுங்கால், இன்னா செய்தால் உண்டாகும் இன்னலையே கூறுகிறார். செய்தல் என்பது சினிமா வசனம் வச்சு செய்தலே . நன்மையை ஆற்றுவார்கள்; தீமையை செய்ய ஒரு அல்லது பல செயல் செய்ய வேண்டும்; ஆற்றாமையாலும், நன்மை செய்யப்படலாம். நனமை நினைத்தாலே போதும். மேலும், நன்மை எதிர்பார்த்து செய்யப்படுவது இல்லை. தீமை அவ்வாறு அல்ல.செய்தல் , செய்வித்தல் தீமையே. எனவே இன்னா செய்யாமை அதிகார தலைப்பில், இன்னா செய்தாரைக் கூறுகிறார். நல்லவரையும் கோடிட்டு காண்பிக்கிறார். அவர் நானா நன்னயம் செய்துவிடல். ஒளவை ஏற்கனவே இருத்தலால், சுருங்க சொல்லியுள்ளார்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும். To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by. The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides. innaasey thaarai oRuththal avarnhaaNa nannayanhj seydhu vidal சிறப்பு தரும் பொருள் இருப்பினும் அடுத்தவருக்கு துன்பம் தராதவரே குற்றமற்றவர். துன்பம் தந்தவரையும் தண்டிக்காதவர் தூய்மையானவர். துன்பம் தந்தவருக்கும் நன்மை செய்வதே நல்லது அதுவே தண்டிக்கும் வழி. பிறருக்கு நோய் என்ற தீங்கு செய்வதே தனக்குத் தனே செய்வது எனவே, நாம் முற்பகல் செய்யும் தீங்கு பிற்பகல் வந்து சேரும். குறள் 320: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார். O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill. Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others. noayellaam noaiseydhaar maelavaam noaiseyyaar noayinmai vaendu pavar K Rajaram IRS 12824 13824 On Mon, 12 Aug 2024 at 18:41, Chittanandam V R <[email protected]> wrote: > > கொன்றை வேந்தன் - முற்பகல் பிற்பகல் > > *தமிழ்நாயகம் * > > நாம் மற்றவர்களுக்கு ஒரு கெடுதலை காலையில் செய்தால், நமக்கு ஒரு கெடுதல் > மாலையில் தானே வரும் என்கிறார் வள்ளுவர். > > *பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா* > *பிற்பகல் தாமே வரும்.* > > மற்றவர்களுக்கு கெடுதல் காலையில் (நாம் வலிய சென்று) செய்தால் > நமக்கு கெடுதல் மாலையில் யாரும் செய்யாவிட்டாலும், தானாகவே வந்து சேரும். > > கெடுதல் செய்தால் கெடுதல் வரும், சரி. நல்லது செய்தால், நல்லது வருமா? ஏன் > வள்ளுவர் கெடுதலை மட்டும் சொல்கிறார் ? நல்லது செய்தால் நல்லது வரும் என்றும் > சொல்லி இருந்தால் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம் அல்லவா ? சொல்லாமல் > விட்டு விட்டார். > > திருக்குறளை படிப்பவன் என்ன நினைப்பான். கெட்டது செய்தால் கெட்டது வரும். > சரி கெட்டது செய்ய வேண்டாம். நன்மை செய்தால் நன்மை வருமா என்று தெரியவில்லை. > எதுக்கு கஷ்டப் பட்டு நன்மை செய்ய வேண்டும் என்றும் ஒன்றும் செய்யாமல் இருந்து > விடலாம் அல்லவா? > > பார்த்தாள் அவ்வை, இது சரிப்படாது. நன்மைக்கு நன்மை விளையும் என்று சேர்த்து > சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். அப்படி சொல்லாவிட்டால் நாட்டில் ஒருத்தனும் > நல்லது செய்யமாட்டான் என்று நினைத்தாள் . > > ஏற்கனவே ஏழு வார்த்தைகள் ஆகி விட்டது. இதை சேர்க்கவும் வேண்டும், மொத்த > வார்த்தைகளைக் குறைத்து நாலே நாலு வார்த்தையில் சொல்லவும் வேண்டும்...எப்படி ? > > சொல்கிறாள் பாருங்கள்.... > > *முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்* > > கணித சமன்பாடு போல் எழுதி விடலாம். அவ்வளவு தான்! நீங்கள் எதை செய்கிறீர்களோ > அது உங்களுக்கு வந்து சேரும். அதுவும் உடனுக்குடன். > > செய்யின் என்றால் செயல்பாடு என்று பொருள். முனைந்து செய்ய வேண்டும். > > விளைதல் தானாக நிகழும். விதை போட்டு விட்டால் போதும். > எந்த விதை போடுகிறோமோ, அந்த செடி விளையும். > > எவ்வளவு வார்த்தையில் நுட்பம்.... > > விதை ஒன்று போடுகிறோம். ஒரே ஒரு விதை மட்டுமா விளைந்து வருகிறது? ஒரு ஆல மர > விதையில் இருந்து ஒரு பெரிய ஆல மரமே வருகிறது...கிளை, இலை, காய், கனி, அந்த > கனியில் ஆயிரம் ஆயிரம் விதைகள் வருகின்றன...எனவே நாம் நன்மை செய்தால் நன்மை > ஒன்றுக்கு பத்தாக விளையும். தீமைக்கும் அதுவே விதி. > > *-- தமிழ்நாயகம் * > ******************************************* > > *சித்தானந்தம் * > > > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq%2BWNQbT%2BejQmPH3jY26tuASGsXUUgCvZHjjctgoACpew%40mail.gmail.com.
