Dear all
Some time back I wrote the discrimination to senior citizens ,in one
of which I spoke about the Cr cards issue. Now the issue is before
Parliament k Rajaram IRS 14824 15824
மூத்த குடிமக்களுக்கு கிரெடிட் கார்டுகளை தர வங்கிகள் தயங்குவது ஏன்?
Updated: Wednesday, August 14, 2024, 9:16 [IST]
இன்றைய உலகில் கிரெடிட் கார்டுகள் மிகவும் அத்தியாவசியமானவை ஆகும். கிரெடிட்
கார்டுகள் அவசரகாலத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல்
பல்வேறு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள், சிறப்பு சலுகைகளையும் அளிக்கிறது. வங்கிகள்
பல சலுகைகளை கிரெடிட் கார்டுதாரர்களுக்கு வழங்குகின்றன. ஆனால் இந்த வசதி
முதியவர்களுக்கு தரப்படவில்லை.
மூத்த குடிமகன்கள் என்றில்லாமல் வங்கிகள் பொதுவாக நம்பக்கூடிய வருவாய்
உடையவர்களுக்கு இந்த கிரெடிட் கார்டுகளை தருகின்றன. கிரெடிட் கார்டுகள் என்பது
பாதுகாப்பற்ற கடன்களாக கருதப்படுகின்றன. காரணம் இதன் மூலம் அளிக்கப்படும்
கடன்களுக்கு ஈடாக எந்த அடமானத்தையும் பெறுவதில்லை. கார்டு பெறுபவர்கள் உரிய
நேரத்தில் பணத்தை செலுத்தி விடுவார்கள் என்ற நிலை இருந்தால் அவர்களுக்கு
கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
மூத்த குடிமக்களுக்கு கிரெடிட் கார்டுகளை தர வங்கிகள் தயங்குவது ஏன்?
முதியவர்களைப் பொருத்தவரை வங்கிகள் அவர்களை அதிக அபாயம் உள்ளவர்களாகக்
கருதுகின்றன. ஓய்வு பெற்ற பின்னர் நிலையான வருமானம் இல்லாதவர்கள் தங்களது கடனை
திரும்பச் செலுத்துவதற்கு சிரமப்படுவார்கள். இதனால் முதியவர்களுக்கு வங்கிகளால்
கிரெடிட் கார்டு தருவதற்கு சிக்கல் ஏற்படுகிறது.
மூத்த குடிமகன்களுக்கு கிரெடிட் கார்டு தருவதற்கு ரிசர்வ் வங்கி எந்த
விதிகளையும் உருவாக்கவில்லை. இருந்தாலும் 60 வயதுக்கு மேலானவர்களுக்கு கடன்
தருவது அபாயத்தை விளைவிக்கும் என்று ரிசர்வ் வங்கி நெறிமுறைகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை தருவதற்கு
வங்கிகள் அலட்சியம் காட்டுகின்றன. அதற்கு பதிலாக அவர்களுக்கு டெபிட் கார்டுகளை
தருகின்றன.
கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயதுக்கு
வங்கிகள் வெவ்வேறு அளவுகோல்களை பின்பற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஹெச்டிஎப்சி
வங்கி விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும், சம்பளம்
பெறும் நபர்களுக்கு அதிகபட்ச வயது 60 மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு 65 வயது
என நிர்ணயித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தின்படி, கிரெடிட் கார்டு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 21 முதல் 70 ஆண்டுகள் ஆகும்.
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பெற்றவர்களாக அல்லது சுயதொழில் செய்பவர்களாகவும் நல்ல
கிரெடிட் ஸ்கோரையும் பெற்றிருக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு கிரெடிட்
கார்டு மறுக்கப்பட்ட விவகாரம் மாநிலங்களவையிலும் கொண்டு வரப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி பூஜ்ய நேரத்தின் போது இந்த பிரச்சனையை
எழுப்பினார், வங்கிகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து டெபாசிட்களை ஏற்கத்
தயாராக இருந்தாலும், அவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்க மறுக்கின்றன. இந்த
விதி பாரபட்சமானது என்றும், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்
வாதிட்டார்.
Why are banks reluctant to give credit cards to senior citizens?
Updated: Wednesday, August 14, 2024, 9:16 [IST]
Credit cards are very essential in today's world. Credit cards not only
meet financial needs in emergencies but also provide various attractive
discounts and special offers. Banks offer many benefits to credit card
holders. But this facility is not provided to senior citizens.
Banks generally offer these credit cards to people with reliable income,
not just senior citizens. Credit cards are considered unsecured loans. This
is because no collateral is obtained against the loans provided through it.
Credit cards are issued to cardholders on the condition that they make
timely payments.
Why are banks reluctant to give credit cards to senior citizens?
As far as senior citizens are concerned, banks consider them to be high
risk. Those who do not have a fixed income after retirement may find it
difficult to repay their loans. This makes it difficult for banks to give
credit cards to senior citizens.
RBI has not made any rules for giving credit cards to senior citizens.
However, RBI norms state that lending to people above 60 years of age is
risky.
As a result, banks are reluctant to give credit cards to people over 60
years of age. Instead they give them debit cards.
Banks follow different criteria for minimum and maximum age for issuing
credit cards. For example, HDFC Bank has set a minimum age of 21 years for
applicants, 60 years for salaried individuals and 65 years for business
owners. According to the website of State Bank of India, the age limit of
credit card applicants is 21 to 70 years.
Applicants must be salaried or self-employed and have a good credit score.
The issue of denial of credit cards to senior citizens was also brought up
in Rajya Sabha.
Congress MP Renuka Chowdhury raised the issue during Zero Hour when banks
were willing to accept deposits from people above 60 years of age, but
refused to issue credit cards to them. He argued that the provision was
discriminatory and should be repealed immediately. K Rajaram
IRS 14824 15824
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqcPsRng%2BOnbuMS%3DKrbtu5q3qSr-QqETD1Rf%3DQO44PR_A%40mail.gmail.com.