பரதனிடம், கைகேயைக் காட்டி குகன் கேட்கிறான் , "இவர் யார் என்று"

"பரதனுக்கு கோபமும், வெறுப்பும், அருவெறுப்பும் பொங்கி பொங்கி வருகிறது....

"உலகில் உள்ள அனைத்து துன்பங்களையும் படைத்தவள் இவள். படைத்தது மட்டும் அல்ல,
அவற்றை வளர்த்து எடுப்பவளும் இவள். பாவியான என்னை மட்டும் அல்ல, இந்த உலகில்
உள்ள அனைவர்க்கும் உயிர் வாழ்வதே வீண், உயிரை விட்டு விடலாம் என்று நினைக்கும்
அளவுக்கு அவர்களை நடை பிணமாக்கியவள் இவள். இவ்வளவும் செய்து விட்டு ஒன்றும்
செய்யாத மாதிரி எப்படி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாள் பார். இவள் யார்
என்று இன்னுமா உனக்குத் தெரியவில்லை? இவள் என்னைப் பெற்ற தாய்"

என்று கைகேயியை, பரதன் குகனிடம் அறிமுகம் செய்கிறான்.

பாடல்

‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்

     செவிலியை, தன் பாழ்த்த பாவிக்

குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்

     உயிர்ப் பாரம் குறைந்து தேய,

உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்

     உலகத்தே, ஒருத்தி அன்றே,

இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,

     இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’

பொருள்

‘படர் = துன்பம். பெரும் துன்பம்.

 எலாம் படைத்தாளை = அனைத்து பெரிய துன்பங்களையும் உண்டாகியவளை

பழி வளர்க்கும் = பழியை வளர்க்கும்

செவிலியை = செவிலித்தாயை

தன் = தன்னுடைய

பாழ்த்த = பாழாய்ப்போன

பாவிக் குடரிலே = பாவம் செய்த குடலிலே

நெடுங் காலம் = நீண்ட காலம்

 கிடந்தேற்கும் = கிடந்த எனக்கும்

உயிர்ப் பாரம் = உயிரே பாரமாய் ஆகும் படி. பாரத்தை எப்போது இறக்கி வைப்போம்
என்று நினைப்பது போல, எப்போது இந்த உயிரை விடுவோம் என்ற என்று நினைக்கும் படி

குறைந்து தேய = குறைந்து தேய

உடர் எலாம் = உடல்கள் எல்லாம்

உயிர் இலா எனத் தோன்றும் = உயிரற்றவை என்று தோன்றும் படி

உலகத்தே = இந்த உலகத்தில்

ஒருத்தி அன்றே = சிறந்த ஒருத்தி

இடர் இலா முகத்தாளை = ஒன்றுமே நடக்காதது போல் முகத்தினை வைத்துக் கொண்டு

அறிந்திலையேல் = நீ இன்னுமா அறிந்து கொள்ளவில்லை

இந் நின்றாள் = இங்கே நிற்கிறாளே இவள்

என்னை ஈன்றாள் = என்னை பெற்றத் தாய்

என்று அறிமுகள் செய்கிறான்.

எல்லோரும் அருகில் இருக்கிறார்கள். ஒரு மூன்றாவது மனிதனிடம் தன் தாயைப் பற்றி
பரதன் அவ்வாறு பேசுகிறான்.

கூனி அவளுடைய மனதை மாற்றும் வரை கைகேயி மிக நல்லவள். இராமனை தன் சொந்த மகனாக
நினைத்தவள். தயரதனுக்கு அன்பு மனைவி.

பரதனையும் சீரும் சிறப்புமாகவே வளர்த்து இருப்பாள்.

"சிறு வயது முதலே அவள் அப்படித்தான்" என்று பரதன் குற்றம் சாற்ற முடியாது.

கைகேயி தவறு செய்து விட்டாள். அறம் தவறினாள். அதற்காக பெற்ற தாயை பரதன்
இவ்வளவு கீழ்த்தரமாக பேசலாமா?

இத்தனைக்கும் அவள் பரதனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை.

ஆயிரம் இராமர், கோடி இராமர் உனக்கு ஈடாக மாட்டார்கள் என்று பாராட்டப் பெற்ற
பரதன் தாயை இவ்வளவு தாழ்வாக பேசலாமா?

ஏன் பேசினான்?

முதலாவது, அன்பு, பாசம் இவற்றிருக்கு எல்லாம் மேலானது அறம். கைகேயி நடுவு நிலை
தவறினாள். தன் பிள்ளை என்பதற்காக தர்மத்தை காற்றில் பறக்க விட்டாள். அன்பு
என்ற போர்வைக்குள் அவள் செய்த முதல் தவறு.

இரண்டாவது,  இறைவனுக்கும் பக்தனுக்கும் நடுவில் அவள் வந்து நின்றாள். பரதன்
என்ற பக்தனை இராமன் என்ற பரம் பொருளிடம் இருந்து பிரித்து விட்டாள். அது ஒரு
மிகப் பெரிய தவறு. பக்தி செலுத்துவோரை குழப்பக் கூடாது. கணவன் மனைவி உறவு போல்
அது ஒரு புனிதமான உறவு. அதன் நடுவில் சென்று குழப்பம் விழைவிக்கக் கூடாது.

இராவணன் செய்த தவறு என்ன?  சீதைக்கும் இராமனுக்கும் இடையில் அவன் வந்தான்.

யோசித்துப் பார்த்தால், எந்த உறவுக்கும் நடுவில் செல்வது தவறு என்றே படுகிறது.
மகனுக்கும், மருமகளுக்கும் உள்ளை உறவின் நடுவே மாமியார் மூக்கை நுழைப்பதும்
தவறுதான்.

மூன்றாவதாக, இறைவனை விட்டு விட்டு, உலக இன்பங்களில் நாட்டம் கொல்லுவது. இராமனை
காட்டுக்கு அனுப்பி விட்டு, அரசை ஆள்வது எவ்வளவு அறிவான செயல் ?  பலர்
அப்படித்தான் செய்கிறார்கள். கடவுளைப் பற்றி அப்புறம் (பதினாலு வருடம்)
சிந்திக்கலாம். இப்போதைக்கு வீடு, வாசல், சொத்து, பத்து என்று இருப்போம் என்று
இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கைகேயி என்றே உருவகம் செய்து கொள்ளலாம்.

உலகிலேயே தாயன்புதான் மிக உயர்ந்தது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

அது கூட அறத்துக்குப் பிறகுதான். அது கூட பக்திக்குப் பிறகுதான் என்று என்று
சொல்கிறதோ நம் இலக்கியங்கள்....

From a blog; harathan did not care for either kaikeyi or dasarathan. Kamban
makes magic of words' "tumi"enum vaarthaaikku tavitha kamban, tamizin iniya
nathathai meetum EN ANBAN. K Rajaram IRS 161124

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sat, 16 Nov 2024 at 08:06
Subject: Fwd: Tamilnayagam - - Kamba Ramayanam - Bharathan and Guhan (11)
To:




இராமாயணம் - பரதன் குகன் (11)
முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன்

*தமிழ்நாயகம்*

கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வர பரதன் கங்கைக் கரையை அடைந்தான். அவனை
முதலில் தவறாக நினைத்த குகன் தன்னைத் திருத்திக் கொள்கிறான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின், குகன் பரதனிடம் "நீ எதற்காக வந்தாய்?"
என்று கேட்கிறான்.

அதற்கு பரதன், "உலகம் முழுதும் ஆண்ட தசரதன் ஒரு தவறு செய்துவிட்டான். அதைத்
திருத்த இராமனை மீண்டும் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.

பாடல்




*தழுவின புளிஞர் வேந்தன் தாமரைச் செங்கணானை‘எழுவினும் உயர்ந்த
தோளாய்! எய்தியது என்னை? ‘என்ன,‘முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையில்
நின்றும்வழுவினன், அதனை நீக்க மன்னனைக் கொணர்வான் ‘என்றான்.*

பொருள்

 தழுவிய வேடர் தலைவன்  தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய பரதனை  'பெரிய
தூண்/கம்பம் இவற்றை விட உயர்ந்த தோள்களை உடையவனே!  என்ன காரணத்திற்காக
வந்திருக்கிறாய்?' என்று கேட்டான்.  'முழு உலகத்தையும் ஆண்ட தந்தை ஆகிய
தசரதன்  முன்னோர்
சென்ற முறையில்  இருந்து தவறினான்; அதை சரி செய்ய மன்னனான இராமனை கூட்டிச்
செல்ல வந்திருக்கிறேன் என்றான்.

கம்பன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் போடுகிறான்.

தவறு செய்தது அரசன் அல்ல. தந்தை. அரசனின் ஆணை மதிக்கப்பட வேண்டும்...சரியோ
தவறோ ...அரசாணைக்கு எல்லோரும்  அடி பணிய வேண்டும். இன்று பரதன் பணியவில்லை
என்றால் நாளை பரதனின் ஆணையை யார் பணிவார்கள்?

ஆனால், தந்தை தவறு செய்யலாம். தந்தையின் செயல்கள் விமர்சனத்துக்கு உட்பட்டது .

அடுத்து, அரசனைக் கொணர்வான் வந்தேன் என்றான். அண்ணனைக் கொணர்வான் என்று
சொல்லவில்லை. பரதன் மனதில் இராமன்தான் அரசன். யார் என்ன சொன்னாலும்
அவனுக்குக்  கவலை இல்லை. இராமன் ஒருவன்தான்  அரசன்.

தந்தை நெறி தவறினான் என்று பகிரங்கமாக சொல்லுகிறான். இராமன் அப்படிப்
பேசவில்லை. "அப்பா சொல்ல வேண்டுமா, நீ சொன்னால் போதாதா " என்று கைகேயின்
வார்த்தை கேட்ட மாத்திரத்தில் கிளம்பிவிட்டான். தந்தை செய்தது சரியா தவறா
என்று அவன் வாதம் செய்யவில்லை. அது இராமன் கண்ட அறம் .

ஆனால், பரதனுக்கு யார் சொன்னார்கள் என்பது பற்றி கவலை இல்லை. முறை என்று
உண்டு. அறம் என்று ஒன்று உண்டு. யார் சொன்னாலும் அதை மீறக்  கூடாது என்று
நினைக்கிறான்.

எது சரி ?

இராமன் எப்போதும் பெரியவர்கள் சொன்னதைக் கேட்டுத்தான் நடந்திருக்கிறான்...அறம்
அல்ல என்று தெரிந்தாலும். பெண்ணைக் கொல்வது அறம் அல்ல என்று தெரிந்தாலும்,
விஸ்வாமித்ரன் சொன்னான் என்பதற்காக  அவளை கொல்கிறான். அப்போது இராமன்
சொல்லவும் சொல்கிறான் "அறம் அல்லாதவற்றை நீ சொன்னால், நான் செய்வேன் " என்று
வாக்கு மூலம் தருகிறான்.

அடுத்து, கைகேயி சொன்னாள் என்பதற்காக மூத்த மகன் அரசாள வேண்டும் என்ற
நெறியைக்  கைவிட்டு கானகம் போகிறான். அடுத்து, சபரி சொன்னாள் என்பதற்காக
ஆராயாமல் சுக்ரீவனோடு நட்பு பாராட்டுகிறான்.

ஆனால் , பரதன் அப்படி அல்ல. யார் என்ன சொன்னாலும், எது அறம் என்பதில் மிகத்
 தெளிவாக இருக்கிறான்.

எது சரி? இராமனின் வழியா? பரதனின் வழியா?கம்பன் அதற்கும் ஒரு தீர்வு
சொல்கிறான்.

அது என்ன தீர்வு?


*-- தமிழ்நாயகம்*

***************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqDXhUMdLaeSTJXPhXjcOC15psnTFqfu5pb%2BcT4PG%2BJiA%40mail.gmail.com.

Reply via email to