புது ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. ரூ.1000 இல்ல.. ரூ.2000 இல்ல.. இனி பணம் அனுப்ப இதான்.. எந்தெந்த பரிவர்த்தனை! By Harihara Sudhan ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை அனுப்புவதில் புதிய விதிகளை கொண்டுவர இருக்கிறது. ஒட்டுமொத்த பேங்குகளும் இந்த விதிகளுக்கு உட்பட்டு பரிவர்த்தனைகளை அனுமதிக்க இருக்கின்றன. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விதிகள் எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும்? இதனால் எப்படி பணம் அனுப்ப அனுமதி கொடுக்கப்படும்? யுபிஐ கஸ்டமர்களுக்கும் இந்த விதிகள் இருக்குமா? உள்ளிட்ட விவரங்கள் இதோ. இந்த விதிகள் ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நெப்ட் (NEFT) ஆகிய பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, யுபிஐ (UPI) மற்றும் ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனைகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது. இருப்பினும், நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் முக்கியமான பரிவர்த்தனைகளாக இருப்பதால், இந்த விதிகளை பேங்க் கஸ்டமர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். "இனி இவ்வளவு நாள் தான் வேலிடிட்டி கொடுக்க முடியும்.. மலிவு விலை திட்டங்களில் திடீர் மாற்றம்.. Jio அதிரடி.." இந்த விதிகளின்படி நெப்ட் மூலம் ரூ.1000 முதல் அனுப்பினாலும் புது வெரிபிகேஷன் இருக்கும். அதேபோல ஆர்டிஜிஎஸ் மூலம் ரூ.2,00,000 முதல் அனுப்பினாலும் புது வெரிபிகேஷன் இருக்கும். இந்த வெரிபிகேஷன் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கனவே, யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது. நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ்-களுக்கும் கொண்டுவரப்பட இருக்கிறது. நெட்பேங்கிங் (Netbaking), மொபைல் பேங்கிங் (Mobile Baking) அல்லது பேங்க் ஆப்கள் (Bank Apps) மூலமும் இந்த ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. இப்படியான பரிவர்த்தனைகளை செய்யும்போது, நீங்கள் பணம் அனுப்ப வேண்டிய நபரின் அக்கவுண்ட் நம்பர் (Account Number) மற்றும் ஐஎப்எஸ்சி கோட் (IFSC Code) இருந்தால் போதும் பரிவர்த்தனையை செய்து முடிக்கலாம். இதில் பணத்தை பெறுபவரின் பெயர் விவரங்கள் தேவைப்படாது. ஆகவே, எந்த நபருக்கு பணம் செல்கிறது என்பது தெரியாமலேயே உங்களது பணம் அனுப்பப்படுகிறது. ஆனால், யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளில் உங்களது பணத்தை பெறும் நபரின் பெயர் விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. ஆகவே, யாருக்கு பணம் போகிறது என்பதை இதில் தெரிந்து கொள்ள முடிகிறது. "கண்ணா 50 ரூபாய் தான்.. Airtel இல் ரூ.50 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 5 திட்டங்கள்!" POWERED BY இதைபோலவே ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகளிலும் பெறுபவரின் பெயரை இடம்பெற செய்யும்படி இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் பரிவர்த்தனைகளில் பெறுபவரின் அக்கவுண்ட் பெயர் (Beneficiary Account Name) கட்டாயம் காண்பிக்கப்படும். இதை கஸ்டமர்கள் வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். இந்த வெரிபிகேஷனை செய்த பிறகே பரிவர்த்தனைகளை முடிக்க முடியும். இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்த விதிகளை ஒட்டுமொத்த பேங்குகளுக்கும் கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகளின்படியே கஸ்டமர்களுக்கு சேவை வழங்க அனைத்து பேங்குகளுடன் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துக்கு (National Payments Corporation of India) இணைந்து செயல்பட இருக்கிறது. Advertisement முன்னதாக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, யுபிஐ பரிவர்த்தனை ஐடி (UPI Transactions ID) விதிகளை அமலுக்கு கொண்டுவந்தது. இந்த விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களுக்கும் அமலுக்கு வந்துவிட்டன. இந்த விதிகளின்படி யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளில் சிறப்பு எழுத்துக்கள் (Special Characters) முற்றிலும் தவிர்க்கப்பட இருக்கின்றன. "Jio போட்ட போடு.. வாய்ஸ் ஒன்லி திட்டங்களை ரீசார்ஜ் பண்ணீங்களா.. டேட்டா வவுச்சர் ஆட் ஆகுமா.. ஜியோ சொன்ன பதில்!" எண்கள் மற்றும் எழுத்துக்கள் அடங்கிய ஆல்பாநுயூமரிக் (Alphanumeric) மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதனால், யுபிஐ கஸ்டமர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், யுபிஐ பரிவர்த்தனை ஐடிக்களை ஜெனரேட் செய்யும் யுபிஐ ஆப் நிறுவனங்களானது, அதில் நம்பர்கள் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்கின்றன. இதனால், கஸ்டமர்கள் சிக்கல் இல்லாமல் பணத்தை அனுப்பலாம்.
New rules.. Effective from April 1.. No Rs.1000.. No Rs.2000.. Now send money.. Any transaction! By Harihara Sudhan The Reserve Bank of India, also known as RBI, is going to bring new rules for sending money from bank accounts. All banks are going to allow transactions subject to these rules. Which transactions will these rules, which will come into effect from April 1, apply to? How will money be allowed to be sent? Will these rules also apply to UPI customers? Here are the details. These rules are going to come into effect only for RTGS and NEFT transactions. Therefore, these rules are not applicable to UPI and IMPS transactions. However, since NEFT and RTGS are important transactions, bank customers must know these rules. "Validity can be given for this long.. Sudden change in affordable plans.. Jio action.." According to these rules, even if you send Rs. 1000 or more through NEFT, there will be a new verification. Similarly, even if you send Rs. 2,00,000 or more through RTGS, there will be a new verification. This verification is not new. It is already being used in UPI and IMPS transactions. Now. It is going to be brought to NEFT and RTGS as well. These RTGS and NEFT transactions are also done through Netbanking, Mobile Banking or Bank Apps. When making such transactions, you only need the Account Number and IFSC Code of the person to whom you want to send money to complete the transaction. In this, the name details of the recipient are not required. Therefore, your money is sent without knowing which person the money is going to. But, in UPI and IMPS transactions, the name of the person receiving your money is included. Therefore, it is possible to know who the money is going to. "It's just 50 rupees.. 5 plans available for recharge within Rs. 50 on Airtel!" POWERED BY Similarly, these rules have been formulated to include the name of the recipient in RTGS and NEFT transactions. Therefore, from April 1, the beneficiary account name will be displayed in RTGS and NEFT transactions. Customers can verify this. Only after this verification is done, transactions can be completed. The Reserve Bank of India is going to bring these rules to all banks. All banks are going to work with the National Payments Corporation of India to provide services to customers according to these rules. Advertisement Earlier, the National Payments Corporation of India implemented the UPI Transactions ID rules. These rules have come into effect for all UPI customers from February 1. According to these rules, special characters will be completely avoided in UPI transaction IDs. "Jio put it.. Will you recharge voice only plans.. Will data voucher be added.. Jio said the answer!" Only alphanumeric characters containing numbers and letters will be used. Thus, UPI customers do not need to worry. Because the UPI app companies that generate UPI transaction IDs ensure that only numbers are included in them. Thus, customers can send money without any problems. K Rajaram IRS 4225 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoorpuGca6X6fyB9jyK2P73hXVuXXdAue7t3ZSD-%3DJs5tg%40mail.gmail.com.
