Periyaazhwaar Thirumozhi, 4. 5. 3. : Divya Prabhandam சோர்வினால் பொருள் வைத்தத் உண்டாகில்
சொல்லு சொல் என்று சுற்று மிருந்து ஆர் வினாவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்னம் மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூ விட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலுமாமே . - பெரியாழ்வார் திருமொழி, 4.5.3. உனது வாழ்நாளிலே எவ்வளவு பொருட்களை சம்பாதித்தாய் ! அவற்றை எங்கே எப்படி பத்திரப்படுத்தி இருக்கிறாய் ! - அந்த விவரங்களை சொல்லு, சொல்லு என்று சூழ்ந்து கொண்டு சுற்றத்தினரும், ஏனையோரும் கேட்டாலும், அவர்களுக்கு வாயை திறந்து சொல்ல முடியாத அல்லது அவ்விரங்கள் மறந்து போன அந்த கொடிய காலத்தை, மரணத்தை நோக்கி பயணிக்கும் அந்த காலத்தை அடைவதற்கு முன்பே - தமது நெஞ்சத்திலே இதயக்கோவில் அமைத்து, அதன் ஸந்நிதியில் ஸ்ரீமன் நாராயணன் என்கிற அற்புத தெய்வத்தை எழுந்தருளப்பண்ணி (- அவரைக்குறித்து பக்தி என்கிற புஷ்பத்தை ஸமர்பிக்க வல்லவர்களுக்கு யமனது தூதுவர்களால் வரும் துன்பத்தினின்றும் தப்பிப் பிழைக்கலாகும். எனவே எப்போதும் ஸ்ரீமன் நாராயணனை நினை - அவனடியார்களுக்கும் அவனுக்கும் கைங்கர்யங்கள் செய் என்கிறார் பெரியாழ்வார். sOrvinaal poruL vaiththadh uNdaakil sollu soll enRu suRRu mirundhu aar vinavilum vaay thiRavaadhE andha kaalam adaivadhan munnam maarvam enbadhOr kOyil amaiththu maadhavan ennum dheyvaththai natti aarvam enbadhOr poo vida vallaarkku arava thaNdaththil uyyalumaamE. - Periyaazhwaar Thirumozhi, 4.5.3. If you have amassed wealth, relatives will surround you and ask, “Tell us, tell us”, but amnesia will prevent you from answering anyone. Before that happens, make your heart the Lord’s temple, install the name Madhava as its deity, and worship him with the flower called love. For those who can, yes, there is escape from the punishment of Yama’s agents. K Rajaram IRS 4225 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo3%2BDn6eb7-HYNynJepx8XeJfwkUFQvNpPx441SmVoCuA%40mail.gmail.com.
